Home Latest News Tamil 4GB per day, ஆறு மாதம் இலவசம் – 5G வந்தாச்சு!!!

4GB per day, ஆறு மாதம் இலவசம் – 5G வந்தாச்சு!!!

998
0
4GB per day aerovoyce

4GB per day, ஆறு மாதம் இலவசம் – 5G வந்தாச்சு!!!

கத்திபோயி வாலு வந்தது டும்.. டும்… டும்… என்ற கதையாகிவிட்டது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிலை.

2G, 3G அலைக்கற்றையின் உரிமத்தை வாங்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கொள்ளை லாபம் பார்த்தன.

ஜியோ வருகைக்குப்பின், மற்ற அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்துவிட்டது. கிட்டதட்ட வாடிக்கையாளர்களின் சேவையைத் துண்டித்துவிடுவோம் எனக் கெஞ்சியும் மிரட்டியும் நஷ்டத்தை குறைத்து வருகின்றனர்.

ஏர்செல் என்ற ஒரு நிறுவனம் இருந்த சுவடே தெரியவில்லை. ஜியோ என்ற ஒரு நிறுவனம் உள்ளே நுழைந்ததற்கே, ஏனைய நிறுவனங்கள் மிரட்சியில் உள்ளனர்.

ஏரோ வாய்ஸ் 5G

ஏரோ வாய்ஸ் என்ற நிறுவனம் 5G சேவையைத் துவங்கிவிட்டது. கடந்த வருடம் டிசம்பர் மாதமே இந்த நிறுவனம் துவங்கப்பட்டு விட்டது.

நடிகர் பிரசாந்த் துவக்கவிழாவில் கலந்துகொண்டு, துவக்கிவைத்தார். முதற்கட்டமாக சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் சோதனை ஓட்டம் நிகழ்த்தப்படும்.

2019-ல், 5G சேவைக்கான சிம் அட்டைகள் வழங்கப்பட உள்ளது. BSNL அலுவலகங்களிலேயே இதைப்பெற முடியும். பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து 5G சேவையை வழங்க உள்ளது.

ஏரோவாய்ஸ் நிறுவனத்தின் வருகையை சமாளிக்கவே, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை வசூலித்து வருகின்றனவாம்.

அடுத்தவருடம் நிச்சயம் ஒருசில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏரோவாய்ஸ் ஆப்பர்

ஜியோ, ஆறுமாத காலம் அனைத்தையும் இலவசமாக வழங்கியதைப் போன்றே ஏரோ வாய்ஸ் நிறுவனமும் இலவச ஆப்பர்களை வழங்க உள்ளது.

4GB per day டேட்டா, அன்லிமிட்டெட் கால்கள், ஒரு நாளைக்கு 50 SMS-கள் இலவசமாக வழங்க உள்ளதாம்.

Previous articleசந்தர்பாலின் கருப்புநிற ஸ்டிக்கர் ரகசியம்!
Next articleஇரவு நேரப் பள்ளி, சோலார் பை, தனி மனிதப்புரட்சி!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here