Home தொழில்நுட்பம் ஹவாய் vs ஆப்பிள்: பலியாடாய் சிக்கிய பெண்!

ஹவாய் vs ஆப்பிள்: பலியாடாய் சிக்கிய பெண்!

692
0
ஹவாய் vs ஆப்பிள்

ஹவாய் vs ஆப்பிள்: பலியாடாய் சிக்கிய பெண்!

ஹவாய் நிறுவனம் புத்தாண்டு தினத்தன்று தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது.

Tweet via iPhone

சீனாவில், அமெரிக்க சமூக வலைதளங்களுக்குத் தடை உள்ளது. எனவே, சீனாவில் பேஸ்புக், டிவிட்டர்களைப் பயன்படுத்த VPN அவசியம்.

அவ்வாறு, VPN துணையுடன் புத்தாண்டு வாழ்த்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதனால், ட்வீட் ஆப்பிள் ஐபோன் மூலம் போடப்பட்டுள்ளது என ட்விட்டர் தெரிவித்துவிட்டது.

அவர்கள் நேரத்திற்கு விபிஎன் கனெக்சன் ஐபோன் தளத்தில் இயங்கியுள்ளது. இதன் காரணமாகவே Tweet via iPhone   எனக் காட்டியுள்ளது.

ஊழியர்கள் இதை உடனே கவனிக்கவில்லைபோல, ஹவாய் நிறுவனத்தினரே ஐபோன் வழியாக ட்விட் செய்கின்றனர் என ட்ரோல் செய்யத் துவங்கிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஹவாய் மேலதிகாரிகள், ட்விட் செய்யும் பொறுப்பிலிருந்த இரண்டு ஊழியர்களைப் பணி குறைப்பு செய்துள்ளது.

அவர்களின் சம்பளத்தைக் குறைத்துவிட்டது. அடுத்த 12 மாதங்களுக்கு அவர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் இல்லை. மேலும், 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஐபோன் விற்பனை சரிவு

கடந்த வருடம் அதிக மொபைல் ஃபோன் விற்பனையில், ஆப்பிள் ஐபோனை முந்தி ஹவாய் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சாம்சங் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.

இதனால் ஆப்பிள் நிறுவனத்திற்கும், ஹவாய் நிறுவனத்திற்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.

அமெரிக்க சீன வர்த்தகப்போர்

கடந்த வருடம் டிசம்பர் 1ஆம் தேதி, ஹவாய் நிறுவனரின் மகளும் அதிகாரியுமான ‘மேங் வான்ஸோ’ கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ஒப்பந்தத்தை மீறி, ஈரான் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஹவாய் செய்துவிட்டதாக, மேங் வான்சோவை கைது செய்ததாக அமெரிக்கா கூறியது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடுமையான வர்த்தகப்போர் நடைபெற்று வருகின்றது. சீன நிறுவனங்களின் வளர்ச்சி, அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.

எனவே சீனத் தயாரிப்புகளை, அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற மேலை நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்குட்பட்டே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஹவாய் நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்காவில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

Previous articleவாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ்: மீண்டும் வந்துவிட்டது!
Next articleமுன்னாள் காதலி மற்றும் காதலை மறப்பது எப்படி?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here