யுடியூப் மியூசிக் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கூகிள்
இந்தியாவில் மியூசிக் ஸ்ட்ரீமிங் தொடர்பான நிறைய செயலிகள் வந்துவிட்டதால் கூகிளுக்குச் சொந்தமான யுடியூப் நிறுவனம் ‘யுடியூப் மியூசிக்’ செயலியை நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் கடந்த மாதம் வெளிவந்த ஸ்போட்டிஃபை செயலிக்கு பிறகு வெளிவந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் ஆஃப் இதுவாகும்.
இதன் விளம்பரங்கள் கொண்ட சேவை இலவசமாகவும், மியூசிக் பிரிமியம் மாதம் 99 கட்டியும் பெற்றுக்கொள்ளலாம்.
மற்றொரு பக்கம் இந்தியாவில் இருக்கும் யுடியூப் சேனல்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்தியாவில் விரைவில் மியூசிக் ஆஃப் அறிமுகமானதற்கு இதுவே காரணமாகும்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து விதமான பாடல்களைச் சிறந்த முறையில் உகந்த ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதே எங்களின் முதல் வேலை என்று இதன் மேலாளர் ல்யோர் சொகேன் கூறியுள்ளார்.
முதல் முறை மட்டும் மெம்பர்ஷிப்காக ரூபாய் 129 செலுத்த வேண்டும் பிறகு மாதம் மாதம் ரூபாய் 99 செலுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளனர்.
சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த சேவையை 4 மாதத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யுடியூப் நிறுவனத்தின் இந்த முயற்சியால் சாவன், கானா, அமேசான்மியூசிக், ஆப்பிள்மியூசிக் மற்றும் ஸ்போட்டிஃபை போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.