ஆப்பிள் ஐஃபோனை மிஞ்சிய சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்
தொலைபேசிகளின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்தே சாம்சங் நிறுவனத்திற்கும் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கும் இடையே பயங்கர போட்டி நிலவி வருகிறது.
என்ன நடந்தாலும் ஐபோன்களின் தரம் ஒரு படி உயர்வாகத்தான் இருக்கும். ஆனால் தற்பொழுது சாம்சங் வெளியிட்டிருக்கும் மாடல் புதிய தொழில்நுட்பத்துடன் ஐபோனிற்கு சவால் விடும் அளவிற்கு இருக்கிறது.
ஒரு பக்கம் ஐபோன்களின் விலை குறைந்து கொண்டே செல்கிறது. மறுபக்கம் சாம்சங் நிறுவனம் ஒரு லட்சத்து 40ஆயிரம் மதிப்புள்ள கேலக்ஸி போல்ட் ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டு மிரட்டுகிறது.
சாம்சங் கேலக்ஸி போல்டின் சிறப்பு அம்சங்கள்
பார்க்கும் பொழுது 11.6 செ.மீ. விரித்தால் 18.5 செ.மீ. ஸ்மார்ட்போன். எளிதில் மடித்து விரித்துக்கொள்ளலாம். 4ஜி, 5ஜி இரண்டும் நெட்வொர்க்கும் கொண்டுள்ளது.
10 மெகாபிக்ஸல் கொண்ட சிறந்த கேமரா, 12ஜிபி ராம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ளது சிறந்த அம்சமாகும்.
ஒரே நேர்த்தில் 3 செயலிகளை பயன்படுத்தும் வசதி, இதற்கு ஏற்றாற்போல் 4,380mAh திறன் கொண்ட பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.
செல்போனை கையில் பிடிக்கும் பொழுது, நமது கை ஸ்கேன் செய்யப்படுகிறது. செல்போனின் விளிம்பில் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.1,41,000 என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.