கறுப்பர்களின் சூப்பர்ஹீரோ மார்வல் ஸ்டுடியோஸ். பல சூப்பர் ஹீரோக்களை உலகிற்கு தந்த மார்வல் ஸ்டுடியோஸ் இன்று கறுப்பர்களின் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளது.
சூப்பர் ஹீரோ மூவி என்றாலே உலக அளவில் வசூலை வாரிக்குவிக்கும். இந்தவகை படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர்.
முதல் சூப்பர்ஹீரோ
1920-ல் ‘தி மார்க் ஆஃப் ஜோரோ’ என்ற முதல் சூப்பர்ஹீரோ படம் வெளிவந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் வெளிவந்து நூற்றாண்டை கடக்க உள்ளது.
இதுவரை பல சூப்பர் ஹீரோக்கள் மக்களை கவர்ந்துள்ளனர். இதில் கருப்பர்கள் முதன்மை சூப்பர் ஹீரோவாக நடித்த படங்கள் மிகமிக குறைவு.
முதல் கறுப்பர் சூப்பர்ஹீரோ
1993-ஆம் ஆண்டு ‘தி மீட்யர் மேன்’ என்ற சூப்பர்ஹீரோ படம் வெளிவந்தது. இதை ‘ராபர்ட் டவுன்சென்ட்’ என்ற கருப்பினத்தவரே இயக்கி, தயாரித்து, சூப்பர் ஹீரோவாகவும் நடித்தார்.
இதுவே கறுப்பினத்தவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த முதல் சூப்பர்ஹீரோ படம். ஆனால் இதுபெரிய பட்ஜெட் கொண்டு எடுக்கப்படவும் இல்லை, பெரிய வசூலையும் குவிக்கவில்லை.
சூப்பர் ஹீரோ படங்களில் கறுப்பினத்தவர்கள் நிறையவே நடிப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட முதன்மை சூப்பர் ஹீரோவாக நடிக்க மாட்டார்கள்.
கறுப்பர்களின் சூப்பர்ஹீரோ
மார்வல் ஸ்டியோவின் முதல் படம் ‘ப்ளேட்’. இதில் ‘வெஸ்லி ஸ்னைப்ஸ்’ என்ற கறுப்பின நடிகர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். 1998-ல் வெளிவந்த இப்படம், உலக அளவில் வசூலை குவித்தது. அதன் பிறகு ‘ப்ளேட் 2’ மற்றும் ‘ப்ளேட் ட்ரினிட்டி’ என இரண்டு பாகங்கள் வெளிவந்து விட்டன.
மார்வல் ஸ்டுடியோஸ், இந்த வருட ஆரம்பத்தில் ‘ப்ளாக் பேந்தர்’ என்ற சூப்பர் ஹீரோ படத்தை வெளியிட்டது. இதில் முதன்மை சூப்பர் ஹீரோ மட்டுமன்றி நடித்தவர்களில் பெரும்பாலானோர் கருப்பர்களே.
கருப்பர்களை சூப்பர் ஹீரோக்களாக அழகு பார்த்த மார்வல் ஸ்டுடியோஸ், கறுப்பர்களின் சூப்பர்ஹீரோ.