Home நிகழ்வுகள் தமிழகம் அ இலை இருந்தால் உலகமே தமிழர் கையில் அகப்படும்!

அ இலை இருந்தால் உலகமே தமிழர் கையில் அகப்படும்!

402
0
அ இலை

அ இலை அகநானுறுவால் கிடைத்த அற்புத மூலிகை. இது பெட்ரோலுக்கு இணையான மாற்று எரிபொருள். இதை வெளிக்கொண்டுவர 20 வருடமாக போராடும் தமிழ் ஆராய்ச்சியாளர்.

இந்தியா 2020ல் வல்லரசு ஆகும். இதைக்கூறிய அப்துல்கலாம் மறைந்துவிட்டார். 2020 பிறக்க இன்னும் 15 மாதங்களே உள்ளது. வல்லரசாய் மாறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

ஆகஸ்டு 15-ல் பெட்ரோல் ரூ.4ற்கு விற்கப்படும் என புரட்சிபேசிய ராமர்பிள்ளை, இரவோடுஇரவாக கைது செய்யப்பட்டார். இது முதல்முறையல்ல, 1997-ல் இருந்தே பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார்.

அ இலை

ஒருநாள் பள்ளியில் சமையலறை அருகில், தீயில் பச்சை இலை வித்தியாசமாக எரியத்துவங்கியுள்ளது. இதைக்கண்ட ராமர்பிள்ளை ஆசிரியரிடம் கேட்கும்போது, அகநானுற்றில் இதற்கு விளக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மக்கள் அக்காலத்தில் அ இலையை சிக்கிமுக்கி கற்கள் மூலம் ஒளிர வைத்து, இரவில் விளக்காக பயன்படுத்தியுள்ளனர் என  அகநானுற்றை படித்து தெரிந்துகொண்டார் ராமர் பிள்ளை.

அந்த மூலிகை செடியை தேடிக்கண்டுப்பிடித்து, அதை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பள்ளிக்கூடம் செல்லாமல் பத்து வருடமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

எரிபொருள் பரிசோதனை

இறுதியாக அ இலை கொண்டு எரிபொருளை கண்டுபிடித்துள்ளார். அதை 1996-ல் சென்னை ஐ.ஐ.டி.யில் பரிசோதனை செய்துக்காட்டி பெட்ரோலைவிட சிறந்த எரிபொருள் என சான்றிதழ் வாங்கியுள்ளார்.

மேலும் இதுகுறித்து, அன்றைய பிரதமர் தேவகவுடா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, டெல்லி ஐ.ஐ.டி. மற்றும் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மூலம் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த சோதனையிலும் வெற்றி.

கருணாநிதி பாராட்டு

சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி, ராமர்பிள்ளைக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக தலைமை செயலாளருக்கும் சிபாரிசு செய்கின்றது.

அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையில் சோதித்துக்காட்டியுள்ளார். அதை பார்த்து வியந்த கருணாநிதி ‘இனி நாட்டின் பஞ்சம் தீர்ந்துவிடும்’ எனக்கூறி 13 பவுன் தங்கப்பேனாவை பரிசாக அளித்துள்ளார்.

தொழிற்சாலை திறப்பு

1999-ல் கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள் மற்றும் மத்திய அமைச்சர் ஆதித்தன் ராமர்பிள்ளையின் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளனர். நண்பர்கள் மூலம் 35 லட்சம் கடன் வாங்கி தொழிற்சாலையை துவங்கியுள்ளார்.

சில நாட்களிலேயே மக்களிடம் ராமர்பிள்ளை எரிபொருளை விற்கத்துவங்கிவிட்டார். அமைச்சர் ஒருவர் ராமர்பிள்ளையிடம் 75,000 லிட்டர் எரிபொருள் வாங்கிவிட்டு பணம்கொடுக்கவில்லை. இதில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ராமர்பிள்ளை மீது வழக்கு

மூலிகை எரிபொருள் எனக்கூறி இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிகளின் உதவியுடன் பெட்ரோலிய மூலப்பொருள்களை கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றார். இப்படி ராமர்பிள்ளை மீது 2000-ல் எப்.ஐ.ஆர். போடப்படுகிறது.

அந்த வழக்கில் இந்தியன்ஆயில் கார்பரேசன் அதிகாரிகள் அப்படி எதுவும் நடக்கவில்லை எனத்தெரிவிக்கின்றனர். மேலும் தன்னுடைய தொடர்முயற்சியால், பெட்ரோல் கலக்கப்படவில்லை என நிதிபதி முன் நிரூபித்துக்காட்டுகின்றார்.

அதில் பெட்ரோல் ஏதும் கலக்கப்படவில்லை. அது பெட்ரோல், டீசல் போன்று ஒரு மாற்று எரிபொருள் என சிலவருடங்கள் கழித்து ராமர்பிள்ளையை சென்னை சி.பி.ஐ. கோர்ட் விடுதலை செய்கின்றது.

புரட்சி அறிவிப்பு

கடந்த மாதம் மீண்டும் மீடியா முன்தோன்றி தன்னுடைய ஆராய்ச்சிகளையும், எப்படி பாதிக்கப்பட்டேன் என்பது பற்றி கூறினார். ஆகஸ்ட் 15-ல் பெட்ரோல் 4 ரூபாய்க்கும், டீசல் 3 ரூபாய்க்கும் விற்கும் என புரட்சி அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த நாளே அவருடைய சோதனைக்கூடம் சீல்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவருடைய மூலிகை பெட்ரோலை பயன்படுத்தினால், இந்தியாவின் பொருளாதாரம் பலமடங்கு உயரும். அங்கீகாரம் கிடைத்தபின்பும் அ இலை எரிபொருளை விற்பனைக்கு கொண்டுவர இயலவில்லை என மனம் குமுறுகிறார் ராமர்பிள்ளை.

1990-ல் திருபையா அம்பானியால் வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரிக்க பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உருவாக்கப்பட்டது. இன்று ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 3600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ராமர்பிள்ளை போன்றவர்கள் இன்னும் தொழில் துவங்கவே முடியாமல் திணறி வருகின்றனர். அ இலை எரிபொருளில் எதைக்கலந்தால் என்ன?

அந்த எரிபொருளை பயன்படுத்திய பலர், வண்டி அருமையாக இயங்குகிறது என தெரிவித்துள்ளனர். இதனால் எந்த ஒரு வண்டியும் பளுதடையவோ, எஞ்சின் வெப்பத்தால் தீப்பிடித்து எரியவோ இல்லை. பின் ஏன் ராமர்பிள்ளையை தடுக்கவேண்டும்?

3
Previous articleபறக்கும் கார்கள்; பற பற பறக்கலாம் இந்தியாவில்!
Next articleகறுப்பர்களின் சூப்பர்ஹீரோ மார்வல் ஸ்டுடியோஸ்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.