Home சினிமா கோலிவுட் ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்!

ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்!

524
0
ஸ்ரீதேவியிடம்

ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்!

ஸ்ரீதேவி-அஜித் இருவரும் இணைந்து நடித்த படம்  இங்கிலீஷ் விங்கிலிஷ். இப்படத்தில் அஜித் ஹெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார்.

அப்படத்தில் நடிக்கும்போதே ஸ்ரீதேவி தமிழில் எனக்கு ஒரு படம் தயாரிக்க ஆசை. அதில் நீங்கள் தான் ஹீரோவாக நடிக்கவேண்டும் எனக் கூறினார்.

ஸ்ரீதேவி தீடீர் எனக் கேட்டவுடன் அஜித் மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வந்ததால், ஸ்ரீதேவி தயாரிப்பில் நடிப்பது தள்ளிக்கொண்டே சென்றது.

பின்பு, ஸ்ரீதேவி துபாயில் இறந்துவிட்டார். இந்நிலையில், அஜித்தே விஸ்வாசம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, போனி கபூருக்கு போன் செய்து, மேடம் இல்லேன்னா என்ன? அவங்க ஆசைப்படி உங்க தயாரிப்பில் நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க, அதை போனி கபூர் தயாரிக்க உள்ளார். வினோத் இப்படத்தை இயக்க உள்ளார்.

அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி புயல் வித்யாபலன் நடிக்கிறார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தாரங், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம்  ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ளார். அதுகுறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை.

Previous articleதோனி இந்திய அணியில் இருந்து நீக்கம்: கோலியின் அதிரடி முடிவு
Next articleநயன், ஹன்சியை மிஞ்சிய காவேரி: சிம்புவைப் பற்றி கூறிய மகத்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here