நயன், ஹன்சியை மிஞ்சிய காவேரி: சிம்புவைப் பற்றி கூறிய மகத்
சிலம்பரசன் என்ற சிம்பு தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சிம்புவின் நண்பர் மகத், சிம்புவைப் பற்றி கூறியதாக ஐபிடைம்ஸ் இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தன்னுடைய காதல் தோல்வியின் போது கூட ஒருதுளி கண்ணீர் விட்டதில்லை ஆனால் கடந்த வருடம் நடந்த ஒரு நிகழ்வின் விமர்சனங்களால் அதிகம் மனதுடைந்து அழுததாக சிம்புவின் நெருக்கமான தோழன் நடிகர் மகத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.
பொதுவாக எல்லோரும் காதல் தோல்வியின் போது மிகுந்த வருத்தம் அடைந்து அதிலிருந்து மீள இயலாமல் தடுமாறுவார்கள். ஆனால் சிம்பு எந்த வித வருத்தமும் அடையவில்லை.
கடந்த வருடம் காவேரி பிரச்சனையின்போது சிம்பு பேசிய விதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. கர்நாடகா, தமிழ்நாடுகளிடையே ஒற்றுமையைக் கொண்டுவரவும் பிரச்சனையை சுமூகமாக முடிக்கவேண்டும் எனவும் பேசினார்.
கன்னட மக்கள் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பகிர வேண்டும் என்று கூறினார். கர்நாடகாவில் சிம்புவின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் சிம்புவைக் கதறவிட்டனர். இதனால் சிம்பு மிகுந்த மனவேதனை அடைந்ததாக மகத் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், இன்று சிம்பு இறந்துபோன தனது ரசிகரை வீட்டிற்கு சென்று, ரசிகரின் உருவப்படத்தைப் பார்த்து கதறி அழுதார்.
நான் அண்டாவில் பால் ஊற்ற வேண்டும் என்று சொன்னேனே தவிர, கட்அவுட் மீது ஊற்ற சொல்லவில்லை. அதற்கு பதில் மக்களுக்கு கொடுக்க சொல்லுங்கள் என்று கூறினேன் என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.