Home Latest News Tamil வாட்ஸ்ஆஃப் பீட்டா: அசரவைக்கும் 5 புதிய அப்டேட்

வாட்ஸ்ஆஃப் பீட்டா: அசரவைக்கும் 5 புதிய அப்டேட்

615
0
வாட்ஸ்ஆஃப் பீட்டா

வாட்ஸ்ஆஃப் பீட்டா: அசரவைக்கும் 5 புதிய அப்டேட்

உலகத்தில் 100 கோடி பயனாளர்களுக்கு மேல் கொண்டுள்ள வாட்ஸ்ஆஃப் செயலியின் புதிய அப்டேட்டுகள் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்ஆஃப் செயலி மிகவும் பிரபலமான அனைவராலும் எளிமையாகக் பயன்படுத்தக் கூடிய ஒன்று.

1) வாட்ஸ்ஆஃப் கை ரேகை சென்சார் (Finger Print Censor)

பயனாளர்கள் தங்களுடைய தகவல்களை பாதுகாக்க மூன்றாம் பார்ட்டி செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆஃப் நிறுவனம் ஃபிங்கர் பிரிண்ட் ஆப்ஷன்யை நேரடியாக வாட்ஸ்ஆஃப்பில் இணைத்தது.

இதன் மூலம் பயனாளர்கள் எந்தவித பயமும் இன்றி எளிதாக தங்களுடைய தகவல்களை பாதுகாக்கலாம்.

2) ஆடியோ பிக்கர் (Audio Picker)

இந்த அம்சத்தின் மூலம் ஒரு முறைக்கு அதிகபட்சமாக 30 ஆடியோக்கள் வரை அனுப்ப இயலும். மேலும், ஆடியோவை அனுப்பும் நேரத்தில் அதைக் கேட்கவும் இயலுமாம்.

இந்த அம்சம் தற்பொழுது வாட்ஸ்ஆப் பீட்டா பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைத்துவிடும்.

3) குரூப்பில் தனியாக பதிலளித்தல் (Reply Privately Group)

இந்த அம்சத்தின் மூலம் ஒரு நபர் குரூப்பில் இருக்கும் மற்ற நபர்களிடம் தனியாக உரையாட இயலும்.

தற்பொழுது ஆண்ட்ராய்ட் பிளாட்பார்மில் மட்டும் இந்த அம்சம் இருக்கிறது விரைவில் ஆப்பிள் ஃபோன்களில் அப்டேட் ஆகும்.

4) 3டி டச் ஆக்சன் ஃபார் ஸ்டேட்டஸ் (3D Touch Action For Status)

இந்த அம்சத்தின் மூலம் உங்களுடைய காண்டாக்ட்டில் இருப்பவர்களின் ஸ்டேட்டஸை அவர்களுக்குத் தெரியாமலேயே பார்க்க இயலும்.

இந்த அம்சம் தற்பொழுது ஆப்பிள் ஃபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் அனைத்துப் ஃபோன்களிலும் வந்துவிடும்.

5) ஸ்டிக்கர் இன்ட்டகிரேஷன் (Sticker’s Integration)

போதிய அளவு ஸ்டிக்கர்கள் வாட்ஸ்ஆஃப் செயலியில் இல்லாததால் பெரும்பாலானோர் மூன்றாம் பார்ட்டி செயலிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆஃப் நிறுவனம் ஏராளமான ஸ்டிக்கர்களை கொண்டுள்ள புதிய கீ போர்ட்டை அறிமுகம் செய்ய உள்ளது.

Previous articleநயன், ஹன்சியை மிஞ்சிய காவேரி: சிம்புவைப் பற்றி கூறிய மகத்
Next articleப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு; கைது நடவடிக்கை பாயுமா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here