சன்பிக்சரை கதறவிட்ட ப்ளூசட்டை மாறன்!
யூடியூப் வலைத்தளத்தில் முதன்முதலில் தமிழ் படத்தை விமர்சனம் செய்தவர் பிரஷாந்த். அவருக்கு அடுத்து விமர்சகராக களத்தில் குதித்தவர் ப்ளூசட்டை மாறன்.
நீண்டகாலம் சினிமாவிற்குள்ளேயே இருந்து பழகிய முதிர்ந்த விமர்சகர். இவருடைய தாரக மந்திரமே 120 கொடுத்து டிக்கெட் எடுத்துருக்கேன். படத்தை விமர்சனம் செய்ய முழுத்தகுதி எனக்கு உண்டு என்பதே.
ஒரு சாதாரண ரசிகனின் கோபம், மாறனின் விமர்சனங்களில் தெரிந்தது. இதன் காரணமாகவே, சினிமா ஆர்வலர்கள் பலரை மாறனின் விமர்சனம் கவர்ந்தது.
மாறன் விமர்சனம் போட்டால்தான் படத்துக்கே போவோம் என அசைக்கமுடியாத ரசிகர் படையை கொண்டுள்ளவர்.
நீலச்சட்டையை மட்டுமே அணிந்து விமர்சனம் செய்வார். ஒரு படம் மோசமாக இருந்தால் பாரபட்சமே பார்க்காமல் கழுவி ஊற்றுவார்.
இவர் கையில் கிடைத்தால் அடிப்பதற்கு ஒரு பெரும் கூட்டமே ஒரு காலத்தில் அலைந்தது. ரஜினி, விஜய், அஜித் இந்த மூவரையும் பிசிறு இல்லாமல் கலாய்த்து தள்ளியவர்.
பல முன்னணி சேனல், ரேடியோ என அதிக சம்பளம் கொடுப்பதாக கூப்பிட்டும் போக மறுத்தார். எந்த ஒரு மீடியாவும் சுந்திரமாக விமர்சனம் செய்யவிடாது என்பது இவருடைய கருத்து.
யூடியூப் ஒன்றே நிரந்தரமானது என அதில் மட்டுமே விமர்சன வீடியோவை வெளியிடுவார். ஆரம்பத்தில் சொற்ப வருமானமே. ஆனால் தற்பொழுது லட்ச லட்சமாக வருவாய் ஈட்டுகிறார்.
சமீபத்தில் இவர் பேட்ட படத்தை பற்றி விமர்சனம் செய்தார். அதில் இரண்டாம்பாதி படுமோசம் என விமர்சித்து இருந்தார்.
இதனால் சன்பிக்சர் காப்பிரைட் நோட்டிஸ் மூலம் மாறனின் வீடியோவை முடக்கியது. அதன்பிறகு மாறனின் டீம் யூடியூப் நிறுவனத்துடன் போராடி வீடியோவை மீட்டனர்.
பொதுவாக யூடியூப்பில் விமர்சனத்திற்கு எல்லாம் காப்பிரைட் செய்யமுடியாது. இருப்பினும் எப்படி வீடியோ டெலிட் ஆனது என்பதே பெரும் விவதமாகியது. ஆனால், மீண்டும் யூடியூப் வீடியோ மீட்கப்பட்டுவிட்டது.
மாறனின் விமர்சனத்தால் சன்பிக்சரும் இறுதியில் கதறிவிட்டனர் என்பதுதான் வேடிக்கை.