ஆதார் மூலம் வெளிநாடு செல்லலாம்: விசா தேவையில்லை!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆதார் அட்டையைக் கிட்டதட்ட அனைத்து மக்களும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.
இதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது எனத் தகவல்கள் வெளியானாலும் ஆதார் தற்பொழுது தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறிப்போனது.
அரசின் பல உதவிகளையும், நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்ல ஆதார் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேபாளதிற்கும், பூடான் நாட்டிற்கும் இனி விஷா இன்றி செல்லலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆதார் அட்டை மூலம் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் சென்று வந்தாலும் 15 வயதுக்கு கீழ், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செல்லமுடியாத சூழல் நிலவி வந்தது.
பான் கார்டு, ஒட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, அரசு சுகாதார அட்டை ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டியநிலை இருந்தது.
இனி, ஆதார் ஒன்று மட்டும் இருந்தால் போதுமானது என மத்திய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று மற்ற நாடுகளுக்கும் ஆதார் மட்டும் போதுமானது என அறிவித்தால் பயனுள்ளதாக அமையும் என வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.