90 கோடிக்கு தாலி: அதிரவைத்த அம்பானி மகள்!
பாஜக ஆட்சி பீடத்தில் அமர்ந்தது யாருக்கு லாபமோ இல்லையோ, அம்பானி குடும்பத்திற்கு நல்ல லாபம்.
அம்பானியின் அசுர வளர்ச்சி என்ற சிறப்பை பாஜக அரசின் ஆட்சி பெற்றுள்ளது. மோடி எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அது அம்பானி குழுமத்திற்கு சாதகமாகவே உள்ளது என்கிற சர்சைகளும் அவ்வபோது நீடிக்கிறது.
அம்பானி வீட்டுக் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கூட பலத்த பாதுகாப்புடன் தான் வருவார்கள்.
16 கோடி மதிப்புள்ள காரில் தான் வெளியில் செல்வார்கள் என சமீபத்தில் வெளியான தகவலுக்கே பலர் வாயைப் பிளந்தனர்.
தற்பொழுது இஷா அம்பானியின் தாலி விலை 90 கோடி என்ற தகவல் பலருக்கு ஹார்ட் அட்டாக்கை கூட வரவழைக்க வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் மகளின் கல்யாணப் பத்திரிகையை ராமேஸ்வர கோவில் வைத்து பூஜை செய்தார் அம்பானி.
அந்தப் பத்திரிக்கையே ஒரு பெரிய கிப்ட் பாக்ஸ் போல் இருந்தது. உள்ளே பாதம், பிஸ்தா மேலும் சில ஐட்டங்கள் இருந்தன.
சில நாட்களுக்கு முன்புதான் இஷா அம்பானியின் கல்யாணம் நடந்து முடிந்தது. இத்திருமணத்தில் பல முக்கியப்புள்ளிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்ற பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்து முறைப்படி, சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓத, அவர்களின் குல வழக்கப்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடந்து முடிந்தது.
ஆசியாவிலேயே அதிக செலவில் நடந்த திருமணம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மொத்த செலவு ரூ.700 கோடியாம். தாலியின் மதிப்பு மட்டுமே 90 கோடி ரூபாய் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.