Home நிகழ்வுகள் தமிழகம் எச்.ஐ.வி. ரத்தம்: கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது!

எச்.ஐ.வி. ரத்தம்: கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது!

505
0
எச்.ஐ.வி. ரத்தம்

எச்.ஐ.வி. ரத்தம்: கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது!

சென்ற வருடம் நவம்பர், 30ம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்துள்ளார்.

சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள், ரமேஷின் ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் சேமித்து வைத்துள்ளனர் .

இதன்பிறகு, ரமேஷ் வெளிநாடு செல்வதற்காக மதுரையில் முழு உடற் பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

அங்கு ரமேஷுக்கு HIV இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு அவருக்கு ரத்ததானம் செய்தது நினைவுக்கு வந்துள்ளது.

உடனே, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று, HIV-யால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், என்னுடைய ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு முன்பே, சிவகாசியிலிருந்து சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதிக்கப்படாத ரமேஷின் HIV ரத்தம் அனுப்பப்பட்டுவிட்டது.

அதன்பிறகும், ஊழியர்கள் இதை சரிவரக் கவனிக்கவில்லை. இந்நிலையில் தான் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக உள்ளது. எனவே ரத்தம் செலுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அப்பெண்ணிற்கு ரமேஷின் HIV ரத்தத்தை செலுத்திவிட்டனர். 15 நாட்கள் கழித்து மீண்டும் சிகிச்சைக்கு வந்த பிறகு தான் அவருக்கு HIV இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணிப் பெண்ணும், அவருடைய கணவரும் மருத்துவமனை ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளனர்.

விசாரணையில் ரமேஷின் ரத்தம் ஏற்றப்பட்டது உறுதியானது. அதன்பிறகு சமந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்த ரமேஷ், விஷயம் ஊருக்கே தெரிந்துவிட்டது எனத் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதன்பிறகு அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று அவருக்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. குழந்தை குறைந்த எடையுடன் பிறந்ததால்  தீவிரக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

குழந்தைக்கு HIV தொற்று ஏற்படாமல் இருக்க, தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்கப் படவில்லை.

இன்னும் இருவாரங்கள் கழித்தே, குழந்தையை முழுப்பரிசோதனை செய்து, குழந்தைக்கு HIV பாதிப்பில்லை என்பதை உறுதி செய்யமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here