Home தொழில்நுட்பம் 10 இயர் சேலஞ்ச்: தோனியால் வரப்போகும் ஆபத்து!

10 இயர் சேலஞ்ச்: தோனியால் வரப்போகும் ஆபத்து!

965
0
10 இயர் சேலஞ்ச்

10 இயர் சேலஞ்ச்: தோனியால் வரப்போகும் ஆபத்து!

#10yearchallenge என்ற ஹாஸ்டாக் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தையும், தற்பொழுது உள்ள புகைப்படத்தையும் மக்கள் அதில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக பிரபலங்கள் இதை அதிகம் பரப்புவதால், அவருடைய ரசிகர்களும், அதே ஹேஸ்டாக்கில் தங்களுடைய புகைப்படங்களை அப்லோட் செய்கின்றனர்.

இதில் பிரபலங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் நிறையவே உள்ளன.

அதே சாதாரண மக்கள் இதைச் செய்வதன் மூலம், 10 வருடத்திற்குமுன் அல்லது இளம் வயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவும் வாய்ப்பு உள்ளது.

எப்படி செல்பி எடுக்கும்போது கைரேகை திருட வாய்ப்பு உள்ளதே அதே போன்று உங்கள் முக அமைப்புகள் திருடுபோக வாய்ப்பு உள்ளது.

Facial Recognition மூலம் உங்களுடைய புகைப்படம் ஹாக்கர்கள் கையில் அல்லது தவறானவர்களுக்கு சென்றால், நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் உங்களை யார் என எளிதில் அடையாளம் காண முடியும்.

இதனால் உங்களுடைய பாதுகாப்புத்தன்மை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சில முக்கிய சமூக வலைத்தளம் ஒன்று பயனர்களின் புகைப்படத்தைக் கொண்டு அடையாளம் கண்டு வருகிறது.

எனவே நீங்கள் மேலும் உங்களுடைய தரவுகளை அதில் ஏற்றுவதன் மூலம், உங்கள் முகம் நன்கு பரிச்சியம் ஆகிவிடும்.

மூன்றாம் தரப்பினருக்கு தகவல் லீக் ஆனால் உங்களுடைய முழுத் தகவல்களையும் எதிர்கால தொழில்நுட்பம் மூலம் அபகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தோனி போன்ற பெரிய பிரபலங்கள் இதுபோன்ற ஹாஸ்டாக்குகளை தவிர்ப்பது நல்லது. ஐ.சி.சி. 10 இயர் சேலஞ்ச் ஹாஸ்டாக்கை தொடர்ந்து பிரபலப்படுத்தி வருகின்றது.

இதனால் சாதாரண ரசிகர்களும் ஆர்வக்கோளாறில் தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். எனவே இனியாவது ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Previous article16 வயதில் தொழில்; மாணவியின் வாழ்க்கையே மாறியது!
Next articleஎச்.ஐ.வி. ரத்தம்: கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here