16 வயதில் துவங்கிய தொழில்; மாணவியின் வாழ்க்கையே மாறிப்போனது!
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் லிவ் கான்லான். இவருக்கு வயது 20. இவர் வருடத்திற்கு 1 மில்லியன் பவுண்ட் சம்பாதித்து வருகிறார்.
ஒரு பவுண்ட் இன்றைய விலையில் 91 ரூபாய். 9.19 கோடி ரூபாய் ஒரு வருடத்தின் ஆண்டு வருமானமாகக் கொண்டுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த இவர், 16 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார்.
ஆசிரியை ஏன் எனக்கேட்க தொழில் துவங்கப்போவதாக கூறி ஆசிரியையை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
சீனாவில் உள்ள பொருட்களை வாங்கி அதை, ஸ்காட்லாந்தில் விற்பனை செய்ததின் மூலம், முதலாம் ஆண்டு 5,000 பவுண்டுகள் கிடைத்துள்ளது.
அதைக்கொண்டு, ThePropertyStagers என்ற இணையத்தை உருவாக்கி வீடுகளின் இன்டீரியர் அமைப்பை மாற்றியமைத்து விற்பனை செய்துள்ளார்.
அந்நிறுவனத்தின் மூலம், 30,000 பவுண்டுகள் வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த ஒரு வருடத்திலேயே 1 மில்லியன் பவுண்டுகள் வருவாயாக உயர்ந்துள்ளது.
கான்லான் மற்றும் அவரது நிறுவனைத்தை சேர்ந்தவர்கள் ஒரு வருடத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தயார் செய்து மெருகேற்றி வருகின்றனர்.
கான்லான் மற்றும் அவருடைய தாய் அலி இருவரும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனம் இது. இதில் மொத்தம் 10 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
16 வயதில் துவங்கிய தொழில் இன்று கான்லான் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.