நான் பாஜகவில் சேர்கிறேன்: தமிழிசையிடம் கூறிய உதயநிதி! நடந்தது என்ன?
காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்குப் பதவி அளிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் முற்றிலும் குடும்பக்கட்சியாக மாறிவிட்டது என குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜக மாநிலத் தலைவர்களின் வாரிசுகள், பதவில் உள்ள ஆதாரங்களை டிவிட்டரில் வெளியிட்டனர்.
அந்த பதிவை, பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா என்பவர், காங்கிரஸ் மற்றும் திமுகவில் குடும்ப மொத்தமும் அரசியலில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்று, திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என மன்னர் ஆட்சி போன்று பதவி சுகம் பெறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
தமிழிசை, நிர்மலா சீதாராமன் போன்ற புதியவர்கள் திமுக கட்சியில் பதவி பெற சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும் திமுக ட்ரஸ்ட், முரசொலி ட்ரஸ்ட்டில் உதயநிதி பதவியில் உள்ளார். கோடி கோடியாய் அந்த ட்ரஸ்டில் பணம் புரள்கிறது எனத் தெரிவித்தார்.
உடனே அந்த டுவிட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். நான் திமுக, முரசொலி ட்ரஸ்ட்டில் இருப்பதை நிருபித்தால் பாஜகவில் இணையத் தாயார் என தமிழிசை அக்கா எனக் குறிப்பிட்டு தமிழிசையை டாக் செய்து ட்விட் செய்துள்ளார்.