பப்ஜிக்குத் தடை: விரக்தியடைந்த அடிமைகள்!
2018-ம் ஆண்டு இந்தியாவில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரே வீடியோ கேம் பப்ஜி(PUBG-Player’s Unknown Battle Ground) ஆகும்.
சிறுவர்களாலும் இளைஞர்களாலும் அதிகம் கவரப்பட்ட ஒரு ஆக்சன் கேம். மிகவும் த்ரிலாக இருக்கும். சண்டைகளும், துப்பாக்கி சூடு என ஒரே கேம்மில் பலவித சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும்.
இதனால், பெரும்பாலான பள்ளிக்குழந்தைகள் எளிதில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டனர்.
அதிகாரப்பூர்வத் தடை
இது, குழந்தைகளை முழுமையாக கல்வியில் இருந்து திசை திருப்புகிறது. பள்ளிக்குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் கவனத்திற்கு பப்ஜி கேம் சென்றது.
இந்தியாவில் முதலில் குஜராத் மாநிலத்தில் பப்ஜி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில “குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம்” அதிகாரப்பூர்வமாக பப்ஜி கேம்-யை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தடை
குஜராத் மாநிலத்தின் இம்முடிவைப் பார்த்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் கருதி, இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நாடு முழுவதும் பப்ஜி கேம்-யை தடைச்செய்ய ஆதரவு அளித்தது.
குஜராத் மாநிலத்தின் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் தலைவர் ஜக்ருதி பாண்ட்யா அனைத்து மாநிலங்களும் குழந்தைகள் நலன்கருதி பப்ஜி கேம்-யை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.