Yogi Babu Birthday Celebration; முகத்தில் கேக் தடவி பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு: வைரல் வீடியோ! காமெடி நடிகர் யோகி பாபு இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
யோகி பாபு இன்று தனது 35ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து நிற்பவர் யோகி பாபு. வடிவேலு, விவேக், சூரி ஆகியோருக்கு அடுத்த வரிசையில், தற்போது யோகி பாபு இருக்கிறார்.
நடிகர் அமீர் நடிப்பில் வந்த யோகி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. ஆனால், அந்த படம் எல்லாம் அவருக்கு பேசப்படவில்லை.
தொடர்ந்து சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, தூங்கா நகரம், ராஜபாட்டை, கலகலப்பு, பட்டத்து யானை, சூது கவ்வும், சென்னை எக்ஸ்பிரஸ், வீரம், ஐ, காக்கி சட்டை, கொம்பன், இந்தியா பாகிஸ்தான், டிமாண்டி காலனி, கிருமி, வில் அம்பு, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, தர்பார் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஒரே ஆண்டில் 30க்கும் அதிகமான படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். கூர்கா, தர்மபிரபு ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
தற்போது, இவரது நடிப்பில் உருவாகியுள்ள காக்டெய்ல் படம் வெளியாக இருக்கிறது. மேலும், டேனி, டிக்கிலோனா, சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை 2, அடங்காதே, நின்று கொல்வான், ஜகஜால கில்லாடி,
மண்டேலா, கடைசி விவசாயி, கன்னி ராசி, பிஸ்தா, டிரிப், பன்னி குட்டி, வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம், மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வீட்டிலே இருந்து கொண்டு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.