Home நிகழ்வுகள் தமிழகம் ஜல்லிக்கட்டு எங்கு, எப்போது, எப்படி நடக்கும்?

ஜல்லிக்கட்டு எங்கு, எப்போது, எப்படி நடக்கும்?

584
0
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு எங்கு, எப்போது, எப்படி நடக்கப்போகிறது? ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலம்.

மதுரை மாவட்டத்திலேயே இந்த மூன்று ஊர்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. சென்ற வருட ஜல்லிக்கட்டு தடை நீக்கத்திற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் முறையே 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கென பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது. மொத்தம், 848 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எப்படித் தேர்வு செய்தனர்?

  • மாடுபிடி வீரர்கள் வயது தகுதி 18 முதல் 40 வரை மட்டுமே.
  • சீரான உடற்தகுதி கொண்டிருக்க வேண்டும்.
  • 150 செ.மீ. உயரமும் அதற்கு அதிகமாவும் இருக்கவேண்டும்.
  • உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கவேண்டும்.
  • இரத்தப் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

போட்டிக் களத்தின் விதிமுறை

  • வீரர் மது அருந்துதல் கூடாது.
  • மாடுகளுக்கு போதை மருந்து செலுத்தக்கூடாது
  • ஒரே சீருடையில் இருக்க வேண்டும்.
  • மாடுகளை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.
  • ரத்தப்பரிசோதனை, மது பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் நுழைய வேண்டும்.

இப்படி பல்வேறு விதிமுறைகளும், சோதனைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களின் பெயரில் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கூடுதல் இருக்கை வசதிகளுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நடக்க உள்ளது. மாடுகளை துன்புறுத்துவோர், விதிமுறைகளை மீறுவோர் உடனே போட்டிக் களத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

நேரடியாக போட்டியைக் காண முடியாதவர்கள் தொலைக்காட்சிகளின் நேரலை மூலம் போட்டியைக் கண்டுகளிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here