ப்ரியா வாரியார் காதல் மயக்கம்: விஜய் சேதுபதிக்குத் தூண்டில்!
ஒரு ஆதார் லவ் படத்தின் மூலம் கண் சிமிட்டி நடிகை எனப் பெயர் பெற்ற ப்ரியா வாரியார் சென்னை வந்துள்ளார்.
ஒரு ஆதார் லவ் திரைப்படம் காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளிவர உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் விளம்பர பணிகளுக்காக சென்னை வந்தார். அப்போது ஒளிவு மறைவு இல்லாமல் சில விஷயங்களை தைரியமாக பகிர்ந்துகொண்டார்.
ப்ரியா வாரியாரிடம் காதலன் உண்டா எனக் கேட்டதற்கு, 9-ம் வகுப்பு படிக்கும்போதே காதல் வயப்பட்டதாக கூறினார்.
அவருடைய முன்னாள் காதலர் காதலைச் சொன்ன உடன் ஏற்றுக்கொண்டாராம். பிறகு பிரிந்துவிட்டனராம். அது காதல் அல்ல, வெறும் மயக்கம், அபெக்சன் எனக் கூறினார்.
மலையாள நடிகர்களில் மோகன்லாலை மிகவும் பிடிக்குமாம். தமிழில் ப்ரியாவாரியாரை கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதியாம்.
விஜய் சேதுபதியுடன் அடுத்த படத்தில் இணைய சந்துகேப்பில் விஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் என தூண்டில் போட்டுவிட்டார். சிக்குவாரா விஜய் சேதுபதி?