Home Latest News Tamil டீசி படங்களை தூசியாக்கி வசூலை அள்ளிய அக்குவாமென்

டீசி படங்களை தூசியாக்கி வசூலை அள்ளிய அக்குவாமென்

432
0
டீசி படங்களை

டீசி படங்களை தூசியாக்கி வசூலை அள்ளிய அக்குவாமென்

அமெரிக்காவைச் சேர்ந்த டீசி காமிக்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி வசூலில் அக்குவாமென் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்தது..

சூப்பர்மேன், பேட்மேன், டார்க்நைட் மற்றும் வொன்டர் உமன் போன்று 50-க்கும் மேற்பட்ட படங்கள், டீசி காமிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்தவை ஆகும்.

அக்குவாமென்

இயக்குனர் ஜேம்ஸ் வேன் இயக்கத்தில் ஜேசன் மோமோ நடிப்பில் டீசி காமிக்ஸ், வார்னர் ப்ரோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்த அக்குவாமென் திரைப்படம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆனது.

கடலுக்கு அடியில் நடக்கும் சாகசங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். கடலின் அடியில் சாகசங்கள் என்றாலே கிராபிக்ஸ் காட்சிகளின் பங்கு அதிகமாக இருக்கும்.

ஆமாம், படத்தின் வெற்றிக்கு இதுவே முக்கியப்பங்கு வகிக்கிறது. 7 கடலையும் வலம் வரும் கடலின் ராஜாவாக ஹீரோ ஜேஸன் மோமோ நடித்துள்ளார்.

2012-ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் தயாரிப்பில் வெளிவந்த டார்க் நைட் ரைசர் திரைப்படம் 1.084 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்ததே இதுவரை அதிகமாக இருந்தது.

அக்குவமென் திரைப்படம் நேற்று 1.085 பில்லியன் அமெரிக்க  டாலர்கள் வசூலித்து டார்க் நைட் ரைசஸ் திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளியது.

அதேவேளை, வார்னர் மீடியா தயாரிப்பை கணக்கிட்டால், அக்குவாமென் படத்தின் வசூல் மூன்றாம் இடத்தில் தான் உள்ளது.

லார்ட் ஆஃப் ரிங்ஸ் தி ரிட்டர்ன் ஆஃப் கிங் – 1.119 பில்லியன் வசூல். ஹாரி பாட்டர் பார்ட் 2 – 1.342 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்து முதல் இரண்டு இடத்தை தக்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here