அமெரிக்கா வெள்ளையாக மாறிவிட்டது; அண்டார்டிகாவை மிஞ்சியது குளிர்!
அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியில் குளிர் மைனஸ் 40 டிகிரி வரை செல்ல வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
பூமியின் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிக்கா கண்டத்தைவிட, அதிகமான பனிப்பொழிவை அமெரிக்க சந்திக்க உள்ளது.
சிகாகோ நகரத்திலேயே அதிக குளிர் நிலவிவருகிறது. இந்த மோசமான வானிலையால் இதுவரை அமெரிக்காவில் 12 பேர் இறந்து உள்ளனர்.
பலத்த காற்று வேறு வீசுவதால், சில நொடிகளிலேயே குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாத சூழல் உருவாகலாம். எனவே பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
பலர் இந்தக் குளிரை சமாளிக்க உடல் முழுவதையுமே துணியால் மூடியபடி வெளியே செல்கின்றனர். சிறிய பாகம் கூட வெளியில் தெரியாமல் உடல் முழுவதையும் மூடிக் கெண்டே வெளியில் வருகின்றனர்.
இந்தக் கடும் குளிரால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம்பேர் இந்த கடும் உறைபனியால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.