Home நிகழ்வுகள் தமிழகம் ஆர்த்தியை துடிக்கத் துடிக்க வெட்டிய கூலிப்படை

ஆர்த்தியை துடிக்கத் துடிக்க வெட்டிய கூலிப்படை

940
0
ஆர்த்தியை துடிக்கத்
கோப்பு படம்

ஆர்த்தியை துடிக்கத் துடிக்க வெட்டிய கூலிப்படை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடன் பிறந்தவர் கல்யாணி. உடன்பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர்.

கல்யாணிக்கும், சுடலைக்கும் பூர்விக சொத்துப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.

பூர்வீக செத்துப் பிரச்சனையால் தங்கையை தீர்த்துக்கட்ட சுடலையாண்டி கூலிப்படையினரைக் கொண்டு திட்டம் தீட்டியுள்ளார்.

நேற்று இரவு பூ வியாபாரத்தை முடித்துவிட்டு, கல்யாணியும் அவருடைய கணவர் மணிகண்டனும் வீட்டுக்கு வந்தனர். இருவருக்கும் ஆர்த்தி என்ற மகள் உள்ளார்.

மூவரும் தூங்க செல்லும் சமயத்தில் சுடலையாண்டி ஏவி விட்ட கூலிப்படையினர் கல்யாணி வீட்டிற்குள் புதுந்து சரமாரியாக வெட்டினர்.

இதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவரும், மகளும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்து, இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்து விட்டார்.

ஆர்த்தி மட்டும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலையாண்டியையும், கூலிப்படையினரையும் தேடி வருகின்றனர்.

Previous articleஅமெரிக்கா வெள்ளையாக மாறிவிட்டது; அண்டார்டிகாவை மிஞ்சியது குளிர்!
Next articleபெரிய தம்பி சிறுத்தை: மாடிக்கு ஜம்ப் அடித்து வாலிபரைக் குதறியது – வீடியோ
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here