பெரிய தம்பி சிறுத்தை: மாடிக்கு ஜம்ப் அடித்து வாலிபரைக் குதறியது – வீடியோ
ஹிமாச்சல் பிரதேசத மலைப்பகுதியில் வாழ்ந்த சிறுத்தை ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகர் அருகே வழிதவறி சென்று விட்டது.
லம்பா பிந்த் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்து, நீண்ட நேரம் பதுங்கி பதுங்கி உலாவி வந்துள்ளது.
இதை அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் கண்டுகொண்டு வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். விடிந்ததும் அந்த சிறுத்தையை தேடி உள்ளனர்.
நீண்டநேரத் தேடலுக்குப் பிறகு சிறுத்தை ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. வனத்துறையினருடன் சென்று பொதுமக்களும் சிறுத்தையைப் பிடிக்க முயன்று உள்ளனர்.
மாடியில் இருந்துகொண்டு சிறுத்தைக்கு வலையை வீசி உள்ளனர். ஆனால் சிறுத்தை வலைக்குள் மாட்டாமல் நழுவிக்கொண்டே இருந்தது.
நீண்ட நேரமாக வலையை வீசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த சிறுத்தை, முதல் மாடியில் இருந்த அந்த நபர் மீது சீறிப்பாய்ந்து, கழுத்தைக் கடித்துக் குதறியது.
அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் சிறுத்தை பிடியில் இருந்து தப்பினார். சிறு காயங்களுடன் உயிர் தப்பித்துக்கொண்டார்.
சிறுத்தையால் பலர் தாக்கப்பட்டுள்ளனர். அருகில் வருவபர்கள் மீது பயமின்றி பயந்து குதறியது. இதனால் வனத்துறையினர் மற்றும் அதிரடிப் படையினர் தெறித்து ஓடினர்.
பின்பு, மயக்க மருந்துக்குழு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசிபோட்டுப் பிடித்தனர். 9 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு சிறுத்தை பிடிபட்டது.
பின்பு அதை சாஹர்புர் வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்றனர். சிறுத்தை ஆக்ரோசமாக தாகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இது பெரிய சைசில் இருக்கும் சின்ன தம்பி யானை அல்ல. சின்ன சைசில் இருக்கும் பெரிய தம்பி சிறுத்தை. சின்ன தம்பி யானையைவிட பல மடங்கு மக்களுக்கு உயிர் பயம் காட்டிவிட்டது.