Home விளையாட்டு ஐ‌பி‌எல் விழா ரத்து; பணத்தை சிஆர்பிஎப் குடும்பங்களுக்கு கொடுக்க பி‌சி‌சி‌ஐ முடிவு

ஐ‌பி‌எல் விழா ரத்து; பணத்தை சிஆர்பிஎப் குடும்பங்களுக்கு கொடுக்க பி‌சி‌சி‌ஐ முடிவு

313
0
ஐ‌பி‌எல் விழா ரத்து

ஐ‌பி‌எல் விழா ரத்து; பணத்தை சிஆர்பிஎப் குடும்பங்களுக்கு கொடுக்க பி‌சி‌சி‌ஐ முடிவு

ஒவ்வொரு வருடமும் ஐ‌பி‌எல் போட்டிகள் தொடக்க விழாவுடனே நடக்கும். இம்முறை ஐ‌பி‌எல் தொடக்க விழா நடத்தப்போவதில்லை என்று பி‌சி‌சி‌ஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என பி‌சி‌சி‌ஐ கடந்த வாரம் போட்டி அட்டவணை வெளியிட்டது.

பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.22) டெல்லியில் நடைபெற்றது. இதில், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர்.

தொடக்க விழாவை நடத்துவதற்கு ஆகும் செலவை புல்வாமா தாக்குதலில் இறந்த சி‌ஆர்‌பி‌எப் குடும்பங்களுக்கு கொடுக்க பி‌சி‌சி‌ஐ  முடிவு செய்துள்ளது.

யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மட்டும் இன்றி பொதுமக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது பிசிசிஐ.

மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

தொடக்கப் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.