38 தொகுதியில் அமமுக போட்டி: 2 தொகுதி யாருக்கு? குழப்பிவிடும் தினகரன்
அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என ஒரு பக்கம் இழுபறி நிலையில் கூட்டணி நிலவரம் உள்ளது.
இன்னொரு புறம் அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகள் தனித்துப்போட்டி என அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.
நாம்தமிழர் சீமான் நாங்கள் தான் அரசியலில் சீனியர். எனவே கமல் தான் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளாராம்.
அதேவேளை அமமுக கட்சியின் தலைவர் தினகரன் 38 தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
மீதம் உள்ள இரண்டு தொகுதி யாருக்கு ஒதுக்கி உள்ளார் எனத் தெரியவில்லை. தனித்துப்போட்டி எனக் கூறிவிட்டு இரண்டு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் மக்களைக் குழப்பிவிட்டுள்ளார்.
தேமுதிகவுடன் அமமுக கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தியதா? என்ற கேள்விக்கு தினகரன் தரப்பில் இருந்து இல்லை என்றே பதில் வந்துள்ளது.
ஆனால், இறுதி நிமிடம் வரை தமிழக தேர்தல் வரலாற்றில் பல அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது.
டி.டி.வி.தினகரன் கட்சி, திமுகவுடன் இணைத்து போட்டியிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இருப்பினும் தினகரனின் பலம் என்ன என்பதைக் காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
எனவே, அவர் தனித்து நின்றால் மட்டுமே சரியான வாக்கு வங்கியைத் துல்லியமாகக் காட்டமுடியும். ஆனால் இரண்டு தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை எனத் தெரியவில்லை.