திமுகவின் கனவைச் சிதைத்த பாமக; விஜயகாந்திடம் சரண்டர் ஆனார் ஸ்டாலின்
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் விஜயகாந்தை கதாநாயகனாக மாற்றி உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
கடந்த இரண்டு தேர்தலிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங்மேக்கராக இருந்தார் என்றால் மிகை ஆகாது.
இந்த முறை விஜயகாந்த் மேடையில் தோன்றியாவது பேசுவாரா என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பி வந்த விஜயகாந்த் இன்னும் ஒரு வார்த்தை கூட யாருடனும் பேசவில்லை.
ஆனால் அவர் தயவை நாடி மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டிற்கே சென்றுவிட்டார்.
இதற்கு காரணம் பாமக தலைவர் ராமதாஸ். ராமதாஸ் எப்பொழுது காரியவாதி என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
காங்கிரஸ் கூட்டணி வலுவில்லை என்பதால் மத்தியில் அவர்கள் செல்வாக்கை நிலைநாட்ட பாஜகவே சிறந்த இடம் என கனக்கச்சிதமாக ஒரு ராஜ்யசாபா சீட்டை வாங்கிவிட்டார்.
பாமகவின் வாக்குவங்கியை நம்பி இருந்த ஸ்டாலினுக்கு பெருத்த ஏமாற்றம். எஞ்சி உள்ள தேமுதிகவும் அந்தப்பக்கம் சென்றுவிட்டால் திமுக அந்திரத்தில் ஊசலாடும் கத்தியாக மாறிவிடும்.
ரஜினி-விஜயகாந்த் சந்திப்பு ஸ்டாலினுக்கு மேலும் பீதியைக் கிளப்பிவிட்டது. தேமுதிக பாஜகவில் இணைந்துவிடுமோ என ஸ்டாலினும் திடீர் சந்திப்பை நிகழ்த்திவிட்டார்.
எது எப்படியோ இந்தத் தேர்தல் ஆட்டத்தில் நம்மைச் சேர்த்துக்கொள்வார்களா என சிலவாரங்கள் வரை திகிலுடன் இருந்த தேமுதிகவின் மவுசை உயர்த்திவிட்ட பெருமை பாமகவையே சேரும்.
இந்த முறையும் திமுக மீது சாணியை கரைத்து ஊற்றப்போகிறார்களா? வண்ணப்பொடியைத் தூவி வரவேற்க போகிறார்களா? தேமுதிகவினர் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தேமுதிக முடிவு இறுதிநொடி வரை திகிலுடனே தமிழக தேர்தலை இழுத்துச்செல்லும் என்பது மட்டும் உறுதி.