Home சினிமா கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8 டிரைலர் வெளியானது

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8 டிரைலர் வெளியானது

478
0
கேம் ஆஃப் த்ரோன்ஸ்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8 டிரைலர் வெளியானது.

உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட ஒரே இணைய சீரியல் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones) ஆகும். இதுவரை 7 சீசன்கள் வெளியாகியுள்ளது. இதில் 7வது சீசன் மட்டும் 7 எபிசோட்களும் மற்ற 6 சீசன்களும் 10 எபிசோட்கள் கொண்டுள்ளது.

ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இறுதி சீசன் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என இதன் தயாரிப்பு நிறுவனம் எச்‌பி‌ஓ தெரிவித்துள்ளது. இதற்கிடையே நேற்று 2 நிமிட டிரைலர் மட்டும் வெளியானது.

நம் எதிர்பார்ப்புக்கு மாறாக தான் இதன் முடிவு இருக்கும் என்று இதில் நடித்துள்ள சில நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

66 வயதான ஜார்ஜ் ஆர்‌ஆர் மார்டின்(George RR Martin) எழுதிய சாங்க்ஸ் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (Songs of Ice and Fire) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட ஒரு தொடர் ஆகும்.

3000 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் மிகப்பழமையான இரண்டு கண்டங்கள் மட்டுமே தொடரில் வரும். ஒன்று வெஸ்டோரோஸ் (Westeros) மற்றும் எஸ்சோஸ் (Essos) ஆகும்.

இதில் வெஸ்டோரோஷில் இருக்கும் கிங்க்ஸ் லண்டிங் (kingslanding) தான் அனைத்துக்கும் தலைநகரம் ஆகும்.

கிங்க்ஸ் லண்டிங்கில் உள்ள அயர்ன் த்ரோன்(Iron Throne) என்ற அரியணையை கைப்பற்ற ஒன்பது அரச குடும்பங்கள் போட்டியிடுவதை மையமாக கொண்டதுதான் இதன் கதைச்சுருக்கம்.

Previous articleதோனி: முடிந்தால் பிடித்துப்பார் ரசிகருடன் ஓடி விளையாடிய தோனி
Next articleடாக்டர் ப்ரீத்தி ரெட்டியின் பிணம் சூட்கேசில்; காதலன் காரில் மோதி பலி
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here