டாக்டர் ப்ரீத்தி ரெட்டியின் பிணம் சூட்கேசில்; காதலன் காரில் மோதி பலி
இந்திய வம்சாவளியான டாக்டர் ப்ரீத்தி ரெட்டி ஆஸ்திரேலியாவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
பல் மருத்துவரான இவர் கடந்த ஞாயிறு அன்று சிட்னியில் நடந்த மருத்துவ மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதற்காக அருகில் உள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். அவருடன் அவருடைய காதலர் ஒருவரும் தங்கியுள்ளார்.
அவரும் ப்ரீத்தியுடன் பணிபுரியும் மருத்துவர் ஆவர். இருவரும் மாநாடு முடிந்து தங்களுடைய அறைக்குச் சென்றுவிட்டனர்.
அதன்பிறகு நீண்ட நேரமாகியும் இருவரைப்பற்றியும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் போலீசார் அவர்களைத் தேடினர்.
அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமாரக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதன் பிறகு ப்ரீத்தியின் சடலம் அவருடைய கார் டிக்கியில் ஒரு சூட்கேசில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அவருடன் தங்கியிருந்த அவருடைய காதலர் இந்தக்கொலையை செய்திருப்பாரோ என முதலில் சந்தேகித்து அவரை ட்ராக் செய்தனர்.
ஆனால் ப்ரீத்தி இறந்த சில மணி நேரத்திலேயே அவருடைய் காதலர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரில் வந்த காரில் மோதி பலியாகியுள்ளார்.
இதனால் போலீசாருக்கும் மேலும் தலைவலி ஏற்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் மர்மாக இருவர் மரணமடைந்து உள்ளனர்.
அதுவும் மருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு இது நடந்துள்ளது. இதில் ஏதும் சதிச்செயல் உள்ளதா என்ற கோணத்தில் ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.