இன்றைய கூகிள் டூடுல்: ஆல்கா லேடிசென்ஸ்கயா
ரஷ்யாவைச் சேர்ந்த கணித மேதையான ஆல்கா லேடிசென்ஸ்கயாவின் 97வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகிள் டூடுல் (Google Doodle).
பகுதி வகையீட்டு சமன்பாடுகள் (partial differential equations) மற்றும் திரவ இயக்கவியல் (fluid dynamics) ஆகிய பிரிவுகளில் இவரது பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.
இன்றைய கூகிள் டூடுல் நீள்வட்ட வடிவிலும் அதில் இவரின் நேரியல் மற்றும் வினையுயிர் நீள்வட்ட சமன்பாடுகளை குறிப்பிட்டு இவரை பெருமைப்படுத்தியுள்ளது.
இவரது தந்தையும் கணித ஆசிரியர் ஆவார். ரஷ்யாவின் சோவியத் யூனியனால் இவரது தந்தை துரோகி என்று குற்றம் சாற்றப்பட்டு சிறையில் அடைத்து கொல்லப்பட்டார்.
அப்போது ஆல்காவுக்கு 15 வயது தான் ஆகும். கணிதத்தில் சிறந்து விளங்கினாலும் இவருடைய தந்தையின் அவப்பெயரால் இவருக்கு ரஷ்யாவின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜோசப் ஸ்டாலின் மறைவுக்குப்பின் இவருக்கு மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பல்வேறு சாதனைகளை கணிதத்தில் செய்து விட்டு ஜனவரி 12, 2004 ஆம் ஆண்டில் தனது 81வது வயதில் ஆல்கா லேடிசென்ஸ்கயா இறந்து விட்டார்.
கணித மேதையான ஐவன் பெட்ரோவ்ஸ்கி அவர்களின் மாணவி ஆல்கா லேடிசென்ஸ்கயா என்பது குறிப்பிடத்தக்கது.