Home Latest News Tamil நோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை: இம்ரான் கான்

நோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை: இம்ரான் கான்

420
0

நோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை: இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய விமானப்பயணி அபிநந்தனை விடுவித்து இந்தியாவிற்கு அனுப்பி இரு நாட்டின் குழப்பத்தை தீர்த்தார்.

இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் “#NobelPeacePrizeForImranKhan என்ற ஹஸ்டாக் பரவி வந்தது.

இதற்கிடையே இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பாவட் சௌத்ரி, பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது, பிரதமர் இம்ரான்கானிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இம்ரான்கான் இன்று செய்த ட்வீட்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெரும் தகுதி எனக்கு இல்லை.

உண்மையில் யார் காஷ்மீர் மக்களின் தேவை அறிந்து அதை சரி செய்கிறார்களோ? அங்கு அமைதியையும் மனித நேயத்தையும் வளர்ப்பவர்களே இதைப் பெறுவதற்கான தகுதியுடையவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற நாட்டுத் தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாகவும் குறிப்பாக அமெரிக்க பிரதமர் டிரம்ப், வேண்டுகோளின் படியும் விமானி அபிநந்தனை விடுதலை செய்து இந்தியா அனுப்பினார்.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதலால் புல்வாமா என்ற இடத்தில் 40 சி‌.ஆர்‌.பி‌.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவீரவாத முகாம்களைத் தாக்கியது.

நம்முடைய ஒரு ஜெட் விமானம் ஒன்று தாக்கப்பட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த அபினந்தன் என்பவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here