Home சினிமா கோலிவுட் அஜித்தின் தீராக் கோபத்திற்கு ஆளான இயக்குனர்கள்!

அஜித்தின் தீராக் கோபத்திற்கு ஆளான இயக்குனர்கள்!

751
0
அஜித்தின்

அஜித்தின் தீராக் கோபத்திற்கு ஆளான இயக்குனர்கள்!

அஜித்தின் திரையுலக பயணம் என்றுமே ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்படும். விண்ணை முட்டும் வெற்றியடைந்த படங்களும் உண்டு. படுதோல்வி அடைந்த படங்களும் உண்டு.

ஆஞ்சநேயா, ஜீ, பரமசிவம், ஆழ்வார் என படுதோல்வி படங்களை கொடுத்துக்கொண்டும் சுமார் வெற்றிப்படங்கள் சிலவற்றை கொடுத்துகொண்டிருந்த நேரம் அது.

அப்படியே டாப் கியர் போட்டு அவரை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் பில்லா. அடுத்து ராக்கெட் வேகத்தில் மேலே தூக்கிய படம் மங்காத்தா. இருபடங்களும் அஜித்தின் கேரியரை வேறு லெவலுக்கு கொண்டு சென்ற படங்கள்.

அஜித்தை வைத்து படமே இயக்கமாட்டேன் எனக்கூறிய கெளதம்மேனன் கேட்டதுமே வாய்ப்புக்கொடுத்தவர் அஜித்.

ஆனால் வெங்கட்பிரபுவும்,  விஷ்ணுவர்தனும் காலைப்பிடித்து கெஞ்சாத குறையாக வாய்ப்புக்கேட்டும் தொடர்ந்து வாய்ப்பு வழங்க மறுத்து வருகிறார் அஜித்.

இவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதற்காகவே சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்துள்ளார்.

பில்லா வெற்றிக்குக் காரணமே நான் தான் என விஷ்ணுவர்தன் மிகவும் தலைக்கணத்துடன் நடந்துகொண்டுள்ளார்.

மங்காத்தா படம் வெற்றி அடைந்தவுடன் அஜித்தே வெங்கட் பிரபுவிடம் நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாம் எனக் கேட்டுள்ளார்.

ஆனால் வெங்கட்பிரபு முடியாது என மறுத்துவிட்டு கார்த்தியை வைத்து பிரியாணி படம் இயக்கச் சென்றார். படம் ப்ளாப்.

அதேபோன்று தெய்வத்திருமகன் படம் பார்த்துவிட்டு ஏ.எல்.விஜய்க்கு போன் செய்துள்ளார். அவரும் முடியாது எனக் கூறிவிட்டு தாண்டவம் படம் இயக்கச் சென்றுவிட்டார். படம் ப்ளாப்.

பலா தன் படத்தில் இருந்து அஜித்தை நீக்கினர். இன்று அவரையே ஒரு தயாரிப்பாளர் தூக்கி வீசிவிட்டார்.

ஏதோ ஒரு வகையில் மனதைக் காயப்படுத்தியவர்களிடம் மீண்டும் கூட்டணி சேர்வதில்லை என அஜித் கொள்கை முடிவாகவே வைத்துள்ளாராம்.

Previous articleநோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை: இம்ரான் கான்
Next articleஅபினிச்செடிகளை அழிக்கும் பச்சைக் கிளிகள்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here