Home நிகழ்வுகள் SRH vs RR: மரணமாய் அடித்த சாம்சன்; எமனாக மாறிய வார்னர்

SRH vs RR: மரணமாய் அடித்த சாம்சன்; எமனாக மாறிய வார்னர்

387
0

SRH vs RR: IPL Match Highlights

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் பட்லர் 5 ரன்களில்  நடையைக் கட்டினார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானேவும், சஞ்சு சாம்சனும் சன்ரைசர்ஸ் பவுலர்களைத் தெறிக்கவிட்டனர். மரண அடி அடித்தனர்.

சாம்சன் 102 ரன்கள் அடித்தார். ரஹேனே 70 ரன்கள் குவித்தார். பென்ஸ்டோக் 16. 20 ஓவர் முடிவில் 198 ரன்கள் அடித்து வலுவான நிலையை எட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

பின்னர் களம் இறங்கிய சன்ரைசர்ஸின் வார்னர், ராஜஸ்தான் அணியின் வெற்றிக் கனவுக்கு எமனாக மாறினார். ரன்ரேட் 10 கீழே செல்லாமல் அடித்தார்.

10 வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிக்க முடிந்தது. அதற்குள் வார்னர் வலுவான ரன்களை அடித்துவிட்டார். 69 ரன்களின் வார்னர் அவுட்.

ஜானி 45, விஜய் சங்கர் 35 என தன் பங்குக்கு வெளுக்க ராஜஸ்தான் நடுங்கிப்போனது. 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்தனர்.

அசத்தலாக இரண்டு சிக்சர் பறக்க விட்டு வெற்றி தேடித் தந்தார் ரஷித் கான். 198 ரன்கள் அடித்தும் வெற்றி வாய்ப்பை இழந்தது ராஜஸ்தான்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here