Home சினிமா Movie Review Natpe Thunai – நட்பே துணை திரைவிமர்சனம்

Movie Review Natpe Thunai – நட்பே துணை திரைவிமர்சனம்

1178
0

Movie Review Natpe Thunai – நட்பே துணை திரைவிமர்சனம்

ஹிப்ஆப் தமிழன் ஆதி இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மீசையை முறுக்கு படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தவர்.

இவரின் வெற்றிக்குப் பின்னரே ஒரு யுடியூப்பர் நினைத்தால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என பல யுடியூப்பர் நடிகராக உருவாகியுள்ளனர்.

இந்த படத்திலும் நட்பே துணை என அனைத்து யூடியூப் பட்டாளங்களும் உள்ளனர். மீசையை முறுக்கு படத்தின் வெற்றியால் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங்.

ஆனால் படம் தான் படு குப்பையாக உள்ளது. காரணம் படத்தின் மெயின் சப்ஜெக்ட் சைடிஸ் போன்று யூஸ் பண்ணி உள்ளனர்.

மீசையை முறுக்க படம் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு மோட்டிவேசன் படமாக அமைந்தது. இன்றும் அந்தப் படத்தின் பாடல், தீம் மியூசிக் கேட்டால் நாடி நரம்புகள் முறுக்கேறும்.

அப்படி ஒரு படம் கொடுத்த டீம் இன்று திக்குதெரியாத காட்டில் விட மான் போல ஒரு படத்தை எடுத்துள்ளனர்.

ஹிப்ஆப் இசை என்றாலே தனிச்சிறப்பு பாடல் வரிகள். இந்த படத்தில் சிங்கிள் பசங்க பாடல் தவிர வேறு எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை.

சிங்கிள் பசங்க பாடல் கூட படத்திற்கு தேவையில்லாத ஒரு இணைப்பாகவே உள்ளது. படத்தில் ஆரம்பத்தில் வைக்க வேண்டிய பாடல் இன்டர்வலில் உள்ளது.

படம் ஹாக்கியை பற்றிய படம் எனக் கூறினார்கள். சரி ‘கனா’ படம் போன்று நிச்சயம் ஒரு மோட்டிவேசன் படமாக இருக்கும் என நம்பிச்சென்றால் ஏமாற்றமே.

முதல் பாதியில் கடைசி 15 நிமிடம். இரண்டாம் பாதியில் கடைசி 15 நிமிடம் மட்டுமே ஹாக்கி பற்றி உள்ளது.

மற்ற நேரம் முழுவதும் காதல் செய்கிறேன். காமெடி செய்கிறேன் என நம்மை வறுத்து எடுத்துவிட்டனர்.

முதல் 45 நிமிடம் வறுத்தெடுத்துவிட்டு மிகப்பெரிய ஒரு இன்டர்வெல் பிளாக் வைத்தனர். நெல்சன் திலீப்குமார் போன்று இந்திய அணிக்கு ஹாக்கி விளையாடிய பிரபா கதாப்பாத்திரம்.

இரண்டாம்பாதி வேற லெவல் என உற்சாகத்துடன் மீண்டும் உள்ளே நுழைந்தால் மீண்டும் அதே அறுவை கடைசியாக ஒரு ஹாக்கி போட்டியுடன் படத்தை முடித்துவிட்டு ஸ்போர்ட்ஸ் மூவி என சப்பைக்கட்டு கட்டிவிட்டனர்.

இவ்வளவு உயரத்திற்குச் சென்றும் அதைச் சரியாக தக்கவைக்காமல் இப்படி மோசமான படம் கொடுத்துள்ளனர் ஹிப்ஆப் தமிழன் மற்றும் நண்பர்கள்.

அடுத்து ஒருத்தர் புட்பால் பற்றி படம் எடுத்துக்கொண்டு உள்ளார். இந்தப் படத்தைப் பார்த்தபின்பு எங்கே பேய் படம் போன்று ஸ்போர்ட்ஸ் மூவி என கொல்லப்போகின்றனரோ என பயம் வந்துவிட்டது.

Previous articleMovie Review Uriyadi 2: உறியடி 2 திரைவிமர்சனம்
Next articleபெங்களூர் அணி தொடர்ந்து 6வது தோல்வி: கன்னித்தீவு கதையைப் போல இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here