#SRHvsMI நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. டி காக் அதிகபட்சமாக 69 ரன்கள் அடித்தார்.
பின்னர் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து அதே 162 ரன்கள் எடுத்தது.
கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என இருந்த நிலையில் மனிஷ் பாண்டே அடித்த பந்து எல்லைக்கோட்டை தாண்டியதால் 6 ரன்கள் கிடைத்தது.
இதனால் போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன் பொல்லார்ட்-ஹார்த்திக் பாண்ட்யா ஜோடி சூப்பர் ஓவரில் களம் இறங்கினர்.
முதல் பந்திலேயே பாண்ட்யா சிக்சர் அடித்தார். அடுத்து ஒரு சிங்கிள். அடுத்த பந்தில் பொல்லார்ட் லாங்காக அடிக்க இரண்டு ரன்கள் ஓடினர்.
3 பந்துகளிலேயே மும்பை அணி 9 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் சூப்பராக வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
டெல்லி கேப்பிடல் அணியும் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணியை கீழே தள்ளி இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது மும்பை.
4 வது இடத்தைப் பிடிக்க நான்கு அணிகளிடையே கடும்போட்டி நிலவி வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றது.
இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.