Home சினிமா கோலிவுட் மாஸ்டர் படம்: தொகானி என்ற படத்தின் காப்பியா?

மாஸ்டர் படம்: தொகானி என்ற படத்தின் காப்பியா?

1211
0
மாஸ்டர் படம் Master Movie Copycat Dogani Korean Movie

மாஸ்டர் படம் (Master Tamil Movie) விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அந்தக் காட்சி ஆங்கிலப் படமான ‘தி மாஸ்டர்’ படத்தின் காப்பி போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கதை மூலம் 2011-ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான தொகானி (Dogani) (Silenced) என்ற படத்தின் காப்பி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி ஆகிய படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இரண்டு படங்கள் மூலம் இந்தியத் திரையுலகை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர். குறிப்பாக கைதி படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் மாஸ்டர் படம் காப்பி என்ற சர்ச்சை எழுந்துள்ளது. விஜய் படம் என்றாலே காப்பி சர்ச்சைகள் தொற்றிக்கொள்வது வழக்கமாகி வருகிறது..

தொகானி (Silenced) (Dogani Korean Movie)

2011-ஆம் ஆண்டு வெளியான கொரியன் படம் தொகானி. இப்படம் கொரிய வரலாற்று சரித்திரம் நிகழ்த்திய படம்.

இப்படம் பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்களால் பாலியல் கொடுமை செய்யப்படும் உண்மை சம்பவத்தை பற்றி பேசிய படம்.

இதில் கூடுதல் ட்விஸ்ட் என்னவென்றால் சிறார் பாலியல் கொடுமை நடந்த அதே பள்ளியிலேயே அப்படத்தின் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குனர் குவாங் டோங்க் ஹையுக் (Hwang Dong-hyuk).

இவ்விசயம் தென்கொரியா நாடு முழுவதும் பரவி மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அந்த பள்ளி சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

சிறார் பாலியல் வன்கொடுமை குற்றம் புரிந்தவர்களுக்கு 3 வருடங்கள் என இருந்த  தண்டனையை வாழ்நாள் முளுவதும் சிறை என்று சட்டத்தை திருத்தி அமைத்தது தென்கொரிய அரசு.

அந்த சட்டத்திற்கு பெயரே தொகானி சட்டம் (Dogani ACT) என்று பெயர் வைக்கப்பட்டு சரித்திரம் படைத்த படம்.

மாஸ்டர் காப்பியா? ( Master Movie Copycat)

கைதி படம் ரிலீஸ் சமயத்திலேயே மேலும் ஒரு பெரிய கேங்க்ஸ்டர் கதை எழுதி உள்ளதாகக் கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி உள்ளார் என்றவுடன் இது கேங்க்ஸ்டர் படம் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

அதேநேரம் சிறார் சீர்திருத்த பள்ளியில் மாஸ்டர் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால், இப்படி ஒரு காப்பி சர்ச்சை வெடித்துள்ளது.

உண்மையில் மாஸ்டர் படம் தொகானி படத்தின் காப்பியா? அல்லது ரீமேக்கா அல்லது படத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லையா? என லோகேஷ் கனகராஜ் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here