Home நிகழ்வுகள் உலகம் ஜகர்தா வெள்ளம்: சென்னை வெள்ளத்தை நினைவூட்டுகிறது!

ஜகர்தா வெள்ளம்: சென்னை வெள்ளத்தை நினைவூட்டுகிறது!

329
0
ஜகர்தா வெள்ளம் இந்தோனேசியா

ஜகர்தா வெள்ளம்: 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா நீரில் மூழ்கியுள்ளது.

தொடர் கனமழை

இந்தோனேசியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வசித்த மக்கள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தொடர்கனமழையால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பின்

ஜகர்தா இந்தோனேசியாவின் தலைநகரம் மட்டுமல்ல அந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த நகரமே மூழ்கும் அளவிற்கு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து பெரிய வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு உள்ளது.

வெள்ள பாதிப்புகள்

இந்த வெள்ளப்பெருக்கில் பலியானவர்களில் இரண்டு பேரின் உடல் அருகில் உள்ள ஜாவா தீவில் கரை ஒதுங்கியுள்ளது.

மின்கம்பி அறுந்து விழுந்து ஒரு சிறுவன் பலியாகியுள்ளான். ஏராளனமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

31. ஆயிரம் பேர் வீடுகளை இழந்த நிலையில் முகாம்கள் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டு உள்ளனர்.

சென்னை வெள்ளம்

2016-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் டிசம்பர் மாதம் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜகர்தா வெள்ளம், சென்னை வெள்ளம் சம்பவத்தை நினைவூட்டும் விதமாக உள்ளது.

Previous article2019 கிரிக்கெட்: தரமான சம்பவம்: மறக்க முடியுமா?
Next articleமாஸ்டர் படம்: தொகானி என்ற படத்தின் காப்பியா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here