Home Blog

எதிர்கால இந்தியா புத்தகம் Ethirkala india katturai pdf

0

எதிர்கால இந்தியா புத்தகம் [Ethirkala india book katturai pdf download]. இந்தியாவின் எதிர்காலம் பற்றி சுவாமி சித்பவானந்தர், சுவாமி விவேகானந்தர் என்ன கூறியுள்ளனர்?

எதிர்கால இந்தியா – Ethirkala India

இப்புத்தகத்தின் ஆசிரியர் சுவாமி சித்பவானந்தர். இப்புத்தகத்தில் இந்தியா இதற்கு முன் எப்படி இருந்தது, எதிர்காலத்தில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என விரிவாக கூறியுள்ளார்.

எதிர்கால இந்தியா புத்தகத்தில் இடம் பெற்ற முக்கியமான வரிகள் சில உங்கள் பார்வைக்கு.

“சில நூற்றாண்டுகளாக இந்தியாவின் பொருள் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் செல்வம் எவ்வளவு தூரம் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதைக் கணக்கிட முடியாது.

தன தானிய லட்சுமி தாண்டவமாடும் இந்நாட்டில் வறுமை எஞ்சி நிற்கிறது. பட்டினி கிடந்தது உயிர் பிழைத்திருக்கிறது. உலகில் வேறு ஒரு நாடு இப்படி கொள்ளையடிக்கப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அழிந்திருக்கும்.

இன்னும் சில நாடுக்களில் ஒன்றுமே இல்லாமல் பிற நாட்டை கொள்ளையடித்தே வாழும் நாடுகளாக இருந்துள்ளது. ஆனால், இந்தியா மட்டும் எத்தனையோ இன்னல்களை கடந்தும், கொள்ளைகளை கடந்தும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

இந்தியாவின் உயிர்நாடி கொட்டுபோகவில்லை. உயிர்நாடி வழுவிழந்தால் உடலுக்கு அழிவு வந்துவிடும். பல இன்னல்களுக்கு ஆளானாலும் அதன் உயிர்நாடு தாக்கப்படவில்லை.

இந்தியாவுக்கு அறிவு இருக்கிறது ஆனால் ஆற்றல் போதாது. கல்லிடனிடத்துக் கடவுள் சொரூபத்தைக் காணமுயலுகின்ற ஒருவன் மக்களிடத்துக் கடவுளைக்காண மறுப்பானாகில் பேதைமையுள் அது பெரும் பேதைமையாகும்.”

இப்படி இந்தியா ஜாதி, கடவுள் என பலவாறு பிரிந்து அடிமைப்பட்டிருந்தது என இந்தியாவின் இறந்தகாலத்தை தெளிவாக விளக்கி கூறியுள்ளார்.

இந்தியாவின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும்? கல்வித்திட்டம், மாணவர்கள், பொருளாதாரம், அரசாங்கம், ராணுவம், சமுதாயம், நாகரிகம் என அனைத்தும் எப்படி இருக்க வேண்டும் என விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

எதிர்கால இந்தியா பற்றி விவேகானந்தர் கூறியது

சுவாமி விவேகானந்தர் எதிர்கால இந்தியா pdfஎதிர்கால இந்தியா பற்றி விவேகானந்தர் என்ன கூறினார் என்பது பற்றியும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

“இந்தியா மாண்டுபோமா? அப்படியாயின் உலகத்தினின்று அருள் ஒளி அணைந்துவிடும், நல்லொழுக்கம் அறவே அற்றுப்போம்; தர்மத்தின்மீது மக்கள் வைக்கும் இனிய வாஞ்சை நசித்துவிடும்; உயர் நோக்கம் ஒழிந்துபோம்.

இவைகளுக்குப் பதிலாக ஆசையும், போகமுமே தேவதைகளாகத் திகழும்; பணம் அவைகளுக்கு அர்ச்சகத் தொழில் புரியும். கபடமும், பலாத்காரமும், போட்டியும் இப்புதிய தேவதைகளுக்கு குற்ற ஆரதனைகளாகும்.

ஆத்மீகமோ பலியாக வீழ்த்தப்படும். ஆனால், இத்தகைய சீர்கேடு வந்துவிடாது. ஆக்கிரமிப்பு என்னும் சக்தியைக் காட்டிலும் துயரத்தைச் சகிக்கும் சக்தி பன்மடங்கு பெரியது.

வெறுப்பினின்று உதிக்கும் சக்தியைக் காட்டிலும் அன்பினின்று ஊறும் சக்தி எல்லையற்றது. இப்போது இந்தியா புத்துயிர்பெற்று எழுந்திருப்பது வெறும் ஆத்திரத்தால் விளையும் கிளர்ச்சி என்று எண்ணுபவர் ஏமாற்றமடைபவராவர்.”

Ethirkaala india book pdf download

எதிர்கால_இந்தியா_புத்தகம்_ethirkala_india.pdf

இது ஒரு சாம்பிள் புத்தகம் தான் முழு புத்தகம் டவுன்லோட் செய்ய tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009385_எதிர்கால_இந்தியா.pdf

3

ஹாசனாம்பா: தீபாவளி தரிசனம் தரும் அம்மன்

0
ஹசனாம்பா ஹாசன் கோவில் வரலாறு

ஹாசனாம்பா: தீபாவளி தரிசனம் தரும் அம்மன் (ஆடி மாத தரிசனம் 2 தொடர்): கோவில் அதிசய நிகழ்வுகள் கெட்டு போகாத நைவேத்தியம், சந்தன பொட்டு. ஹாசன் கோவில் வரலாறு.

அன்னை பராசக்தியின் மகிமையை இந்த ஆடி மாதம் முழுதும் சிந்திக்க இருக்கிறோம்.

அம்பிகையின் மகிமைகளை கூற வேண்டும் என்றால் இந்த ஒரு பிறவு போதாது. அளவிடற்கரிய அதிசயங்களை புரிந்து வருகிறாள்.

அந்த வகையில் வருடதிற்கு 10 நாட்கள் தீபாவளி சமயத்தில் மட்டுமே தீபாவளி தரிசனம் தரும் அன்னையின் திருத்தலமே ஹாசனாம்பிகா திருக்கோவில்.

ஹாசன் கோவில் வரலாறு

ஹாசனாம்பா கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த ஹாசனாம்பா வந்த பிறகுதான் இந்த ஊர் ஹாசன் என்று பெயர்பெற்றது.

சப்த மாதர்களே இங்கே புற்று வடிவிலும், தீர்த்த கிணறாகவும், கோட்டையாகவும் காட்சி தருவதாக கூறப்படுகிறது.

கருவறையில் மூன்று சுயம்பு வடிவமாக அம்பிகை காட்சி தருகிறாள். கர்நாடக சிற்ப கலையை பறைசாற்றும் அற்புதமான வேலைபாடுகள் நிறைந்த கோவில்.

ஹசனாம்பா கோவில் அதிசய நிகழ்வுகள்

ஹசனாம்பா கோவில் வருடத்திற்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனதிற்கு அனுமதி அளிக்கப்படும்.

அம்பிகையின் நெற்றியில் இயற்கையாகவே பெரிய சந்தன பொட்டு உருவாகிறது. இந்த ஆண்டு அது எடுக்கப்பட்டு பிரசாதமாக தரப்பட்டும்.

பிறகு அடுத்த ஆண்டு நடைதிறக்கும் போது அதே போல பெரிய சந்தன பொட்டு நெற்றியில் இருக்கும். இது யாரும் வைப்பது இல்லை தானாக தோன்றும் அதிசயம் ஆகும்.

பத்து நாட்கள் முடிந்த பின் நடைசாற்றப்படும். அப்போது கருவறை விளக்குகளில் நெய் ஊற்றி விளக்கு எரியும். நைவேத்தியத்திற்காக அன்னமும், பதார்தங்களும் வைக்கப்படும். ஒரு சொம்பில் தீர்த்தமும், மலர் மாலைகளும் சாற்றப்பட்டு அலங்காரத்தோடு கருவறை மூடப்படும்.

அடுத்த ஆண்டு நடைதிறக்கும் போது விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும். சொம்பில் இருந்த நீர் குறையாமல் இருக்கும்.

மலர் மாலைகள் அன்று சாற்றியது போல புதிதாகவும் அதே மணத்தோடும் இருக்கும். வைக்கப்பட்ட நைவேத்தியங்கள் கெட்டுப் போகமால், வைத்த நாளில் இருந்த அதே சூடோடு இருக்கும். இன்றளவும் நடந்து வரும் அதிசய நிகழ்வுகள் ஆகும்.

ஹாசனாம்பா நடைதிறப்பு

தீபாவளி தரிசனம் கோவில் அதிசய நிகழ்வுகள்ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன் நடைதிறக்கப்படும். இராஜ குடும்பத்தை சேர்ந்த வம்சாவளிகள் கோவில் முன் ஒரு வாழைமரத்தை வெட்டிய பின்பே நடை திறக்கப்படும்.

அரச குடும்பத்தின் பூஜையை ஏற்ற பின்பே பக்தர்களுக்கு காட்சி தருவாள். 24 மணி நேரமும் தரிசனம் செய்ய அனுமதி உண்டு.

பக்தர்களின் குறைகளை உடனேயே தீர்க்கும் மகா சக்தியாக ஹாசனாம்பா குடிக்கொண்டிருக்கிறாள். வேண்டிய வரங்களை வாரி வழங்கும் அன்னையாக ஹாசன் நகரில் கோவில் கொண்டுள்ளார்.

அனைவரும் நம் ஆயுளில் ஒருமுறை சென்று தரிசித்து அன்னையின் அற்புதத்தை கண்டும் அவளின் அருளினை பெற்றும் வருவோமாக.

ஹாசனாம்பா கோயில் அமைவிடம்

ஹாசனாம்பா கோயில் ஹாசன் நகர மையத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு பெங்களூரிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஹாசன் நகரத்துக்கு பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரயில் வசதியும் உண்டு.

பெங்களூர்-ஹாசன் பேருந்து அட்டவணை : 21:35, 21:59, 21:00, 11:05, 21:15, 14:05, 22:30, 23:00, 23:15, 21:15, 21:35, 21:06, 22:00, 05:00, 07:45, 06:30.

ஹாசன்-பெங்களூர் பேருந்து அட்டவணை : 11:00, 20:30, 14:00, 22:01, 21:05, 22:29, 22:50, 22:45, 19:30, 07:00, 06:01, 06:31, 13:30, 10:30, 11:30.

3

தீபாவளி என்றால் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது?

0

தீபாவளி வரலாறு பெயர் அர்த்தம்: தீபாவளி என்றால் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது? மகாவீர்-சைனம், நரகாசூரன்-பூமாதேவி, ராமன்-இராவணன் புராண கதைகள்.

தீபாவளி பெயர் அர்த்தம்

Quora இணையத்தில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்கிறோம் என சமஸ்கிருதத்திற்கும், தமிழுக்கும் ஒரு பனிப்போர் நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை மட்டும் வடக்கில் இருந்து வந்தது அல்ல, அந்தச் சொல்லுக்கு சொந்தக்காரியும் சமஸ்கிருதம் தான். இதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தீபாவளி = தீபம் + ஆவளி

தீபம் என்றால் தீப விளக்கு, தீ பந்தம்
ஆவாளி என்றால் வரிசை அல்லது மாலை. 
மாலை என்பதை விட வரிசை என்பதே மிகப்பொருத்தம்.
  • Rathna Aavali => ரத்னா ஆவளி => ரத்ன மாலை => ரத்ன வரிசை
  • Mugdha Aavali => முஃதா ஆவளி =>முத்து மாலை =>முத்து வரிசை
  • நாமாவளி (நாம +ஆவளி)
  • வம்சாவளி (வம்சம்+ஆவளி)

போன்ற சொற்கள் எப்படி பெயர் அல்லது குடும்ப வரிசைகளை குறிக்கிறதோ, அதுபோல தீப (விளக்கு) + ஆவளி (வரிசை) என்பதே அதன் பொருள். பூக்களை வரிசையாக வைத்து கட்டுவதை தான் நாம் மாலை என்கிறோம்.

தீபம் என்ற வார்த்தை தீ பந்தம் என்ற தமிழ் வார்த்தையில் இருந்து மருவி தீபம் என்று வடமொழி ஏற்றுக்கொண்டது. அது தமிழிலும் கலந்துவிட்டது.

யாரோ பெற்ற பிள்ளைக்கு, தீப ஒளித் திருநாள் எனத் தமிழ்ப் பெயர் வைக்கிறோம் என கார்த்திகை தீபத்திருநாள் என்பதை நாளடைவில் தீபாவளி என மாற்றாமல் இருந்தால் சரி.

ஹாசனாம்பா: தீபாவளி தரிசனம் தரும் அம்மன்

தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?

இக்கேள்விக்கு விடை காண வேண்டும் என்றால் அதற்கு நம்மிடம் புராண கதைகள் மட்டுமே உள்ளது. நம்மிடம் உள்ள இலக்கியம், கல்வெட்டு, ஓவியம் என எதிலும் தீபாவளி என்ற ஒரு பண்டிகை பற்றி குறிப்பே இல்லை.

தீபாவளி புராணக் கதைகள்
நரகாசூரன் அழிந்த கதை

ராமன் பூமாதேவி நரகாசூரன்விஷ்ணு வராக அவதாரத்தின் போது, பூமா தேவி (பூமி) மீது காதல் கொள்கின்றார். அவர்களுக்கு பவுமன் என்ற மகன் பிறக்கிறான். பவுமன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் சாகா வரம் கேட்கிறான். ஆனால், பிரம்மன் எல்லோரும் ஒருநாள் இறந்தே தீரவேண்டும் என உன் அன்னையால் (பூமா தேவி) மட்டுமே உன்னைக் அழிக்க  முடியும் என்று வரம் கொடுக்கிறார்.

சாகா வரம் பெற்ற பவுமன், நரகாசுரனாக அவதாரம் எடுக்கிறான். அவனை அழிக்க பூமா தேவியை அழகு மங்கையாக்கி, பவுமன் முன் நடனமாட கிருஷ்ணர் கட்டளையிடுகிறார்.

கிருஷ்ணரின் சூழ்ச்சி வலையை உணர்ந்துகொண்ட பவுமன், கிருஷ்ணனை நோக்கி அம்பை எய்துகின்றான். ஆனால் அதை பூமா தேவி தன் நெஞ்சில் வாங்கிகொண்டு அதே அம்பு மூலம் பவுமனை கொன்றதாக மஹாபாரதம் சொல்கிறது.

நரகாசூரன் இறந்த நாளை எண்ணை தேய்த்து குளித்து, தீபம் ஏற்றி கொண்டாடப்படுவதாக காலம் காலமாக  சொல்லப்படும் கதை.

ராமன் – சீதை தீபாவளி

ராமன் சீதா இராவணன்

ராமன்- சீதா வனவாசம் முடித்து நாடு திரும்பிய பின்பு மக்கள் அவர்களை வரவேற்பதற்காக தீபம் ஏற்றி கொண்டாடினர் என ஒரு கதை உண்டு.

சீதையைக் கடத்திச் சென்ற ராவணனை, ராமன் அழித்து தர்மத்தை நிலை நாட்டியதால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு.

மகாவீர் இறந்த நாள்

மகாவீர் வீடுபேறு புராண கதைகள்சமணம் (சைனம்) மதத்தின் கடைசி தீர்த்தங்கர் மகாவீரர் விடிய விடிய சொற்பொழிவு ஆற்றிய பின்பு உட்கார்ந்த நிலையிலேயே வீடுபேறு அடைந்தார்.

அவரின் இறந்த தினத்தை சைன மதத்தினர் என்னை தேய்த்து தீபம் ஏற்றி கொண்டாடினர். அவர்கள் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த பிறகு அவர்கள் மூலம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் பழக்கம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு.

சைனர்கள் நாளடைவில் இந்து மதத்துடன் கலந்துவிட்டனர். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு.

சைனர்கள் அவர்களின் நெறிகளை வளர்க்க தமிழ் மொழியை பயன்படுத்தினர். ஐம்பெருங்காப்பியங்கள் சீவக சிந்தாமணி, வளையாபதி சைனர்களால் இயற்றப்பட்டது.

ஐஞ்சிறுங்காப்பியங்கள் பெருங்கதை , நாககுமார காவியம்,  யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய நூற்கள் மூலம் அவர்களின் நெறிகளை பற்றியும், கதைகளை பற்றியும் கூறியுள்ளனர்.

சைவம் மதம் அதற்கும் முன் தோன்றிய உலகின் மூத்த மதம் ஆசீவகம் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

தமிழர்களின் தீபாவளி மத்தாப்பு மாவொளி

நவீன தீபாவளி

தீபாவளி என்றால் என்ன?இன்று தீபாவளி பண்டிகை எண்ணெய் தேய்த்து குளித்து, விளக்கு ஏற்றி மட்டும் கொண்டாடப்படுவதில்லை. புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் முக்கிய இடம் வகிக்கிறது.

பட்டாசு இல்லாமல் தீபாவளியா? என்கிற அளவிற்கு நிச்சயம் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டது. ஆனால், தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என தெரியாமலே பலர் கொண்டாடுகின்றனர்.

இனியாவது நாம் யாருக்காக கொண்டாடுகிறோம் என தெரிந்து கொண்டு கொண்டாடுங்கள். மகாவீர், நரகாசுரன், இராவணன் இதில் நீங்கள் யாருடைய இறப்பை கொண்டாடுகிறீர்கள்.

மகாவீரருக்கு என்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே நரகாசுரன், இராவணன் என்றால் தென் இந்திய (திராவிடம்) மக்கள் கூடுதலாக ஒரு வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்! அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

3

மாவொளி – இயற்கை மத்தாப்பு: இதுதான் ஒரிஜினல் தீபாவளி!

0
மாவொளி தீபாவளி சுளுந்து மத்தாப்பு

மாவொளி, கார்த்திகை பை, சுளுந்து, கார்த்திகை ராட்டினம் இப்பெயர்கள் 90 கிட்ஸ் அறிந்திருக்கலாம், 20k கிட்ஸ்க்கு தெரியமா? இதுவே ஒரிஜினல் தீபாவளி!

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஒவ்வொன்றையும் உள்நோக்கி ஆராய்ந்தால் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக உள்ளது.

தமிழர்கள் ஒவ்வொரு மாதமும் ஒருவித திருவிழாக் கொண்டாட்டங்களை கொண்டுள்ளது. அப்படி ஒரு கொண்டாட்டம் தான் திருக்கார்த்திகை கொண்டாட்டம்.

தீபாவளி என்றால் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது?

திருக்கார்த்திகை என்றால் என்ன?

கார்த்திகை மாதம் என்பது வானில் தோன்றும் நட்சத்திரத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட மாதம். கார்த்திகை மாதத்தில் இந்நட்சத்திரக் கூட்டத்தை அந்தி சாய்ந்தவுடன் பார்க்கலாம்.

அக்காலத்தில் ஒவ்வொரு மாதத்தின் ஒரு நாளையும், ஒரு நட்சத்திரத்தின் பெயர் கொண்டு அழைப்பார்கள். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரசித்தி பெற்றதால் அது, மாதத்தின் பெயராக இடம் பெற்றது.

கார் என்றால் மேகம், மழை, இருளைக் குறிக்கும். திகை என்றால் திசையைக் குறிக்கும். இதனை ஒப்பிட்டு இதற்கு இப்பெயரை வைத்திருக்கலாம்.

இந்த நட்சத்திரக் கூட்டம் பார்ப்பதற்கு காதில் அணியும் மகரக்குண்டலம் போல் கட்சி அளிக்கும். இந்த மாதத்தில் தான் வையம் என்ற மேற்குத்தொடர்ச்சி மழையில் மழைப்பொழிவு ஏற்பட்டு வைகை (வையை) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாம்.

(2019-ம் வருடம் தற்பொழுது வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில் தான் உள்ளது. இந்த தகவல் சங்ககால இலக்கியங்களில் இருந்து பெறப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கி உள்ளேன்.)

மாவொளி | கார்த்திகை ராட்டினம் | இயற்கை பட்டாசு

கார்த்திகை மாதத்தில் பனை மரத்தின் பூ (பாலக்கட்டை) எரிக்கப்பட்டு, அதன் கரியை நுணுக்கி ஒரு பையில் போட்டுத் தைப்பார்கள்.

தைக்கப்பட்ட பை மீது, சிறிது சாணம் பூசி காயவைத்து, பனை மட்டையை நான்காக கிழித்து அதன் இடுக்கில் வைத்துக் கட்டுவார்கள்.

அந்த மட்டையின் மேல் நுனியில் ஒரு கயிறைக் கட்டிக்கொண்டும், மறுநுனியில் உள்ள பொட்டணப் பை மேல் நெருப்பு கனுங்குகளை வைத்து சுற்றுவார்கள்.

அக்காலத்தில் உடம்பில் உடுத்திக்கொள்வதே கிழிந்த துணிகளைத்தான். அப்படி ஒரு சூழலில் சிறுவர்கள் இதற்குப் பை தயார் செய்வது என்பதே மிகவும் சவாலான செயல்.

பைகள் கிடைக்காதவர்கள் முத்திய பீர்க்கங்காய் குடிவையில் கரித்தூளை அடைத்து அதன் நுனியில் கயிறு கட்டி சுற்றுவார்கள்.

பார்ப்பதற்கு பலநூறு கம்பி மத்தாப்புகளை ஒன்று சேர்த்து சுற்றுவது போல் தீப்பொறி அவர்களைச்சுற்றி சுழன்று வரும்.

இதற்கு மாவொளி, சுளுந்து, கார்த்திகை பை என பல பெயர்கள் உள்ளது. இன்றும் சில ஊர்களில் இது புழக்கத்தில் உள்ளது. சில ஊர்களில் பாலகட்டைகளுக்குப் பதில் சைக்கிள் டயர்களை எரித்துச் சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றனர்.

பல ஊர்களில் மாவொளியா அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவிற்கு இக்காலத்து சிறுவர்களை பப்ஜி கேம் விளையாட வைத்தும், பெப்சி குளிர்பானம் குடிக்கவைத்தும் வளர்த்துள்ளனர்.

தீபாவளி என்ற ஒரு பண்டிகையைத் தமிழர்கள் கொண்டாடுவதற்கு முன்பே சுளுந்து என்ற மத்தாப்பை சுற்றி தீப ஒளித்திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், அது தெரியாத பலர் தீபாவளி பண்டிகைக்கு தமிழில் பெயர் வைத்துள்ளனர் என தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் என பண்டிகையின் பெயரையே மாற்றிவிட்டனர்.

திருக்கார்த்திகை தீபம்

திருக் கார்த்திகை தீபம்ஒவ்வொரு ஊர்களில் இந்தப் பண்டிகைக்கு ஒவ்வொரு விதமான முக்கியத்துவம் உள்ளது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபம் இன்று வரை பிரசித்தி பெற்றதாக உள்ளது.

அதேபோன்று பல ஊர்களில் உள்ள கோவில்கள் முன்பு விறகுகளை கூம்புபோல் அடுக்கி வைத்து எரிப்பார்கள். விறகுகள் எரியும்போதே அதை எடுத்துக்கொண்டு வட்டம் அடிப்பார்கள்.

இந்த விறகு குச்சிகள் மூலம் காய்கறிப் பந்தல் வைத்தால் நன்கு விளைச்சல் வரும் என்று பலரும் நம்பி குச்சிகள் மூலம் பந்தல் காய்கறிகளை வளர்ப்பார்கள்.

3

குழந்தை வரம் அருள்வாள் ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி!

0
சுயம்பு நாக ஆதிபராசக்தி

சுயம்பு நாக ஆதிபராசக்தி: குழந்தை வரம் தரும் அம்மன். சுயம்பில் தானாக உருவான நாகம் . காவல் புரியும் அதர்வண பத்ரகாளி.

கடவுள் நமக்கு எத்தனையோ செல்வத்தை வழங்கினாலும் நம் வாழ்வில் மிக முக்கியமான செல்வம் குழந்தை செல்வமே ஆகும்.

“குழலினிது யாழினிது என்ப-தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்”                                 –என்பார் திருவள்ளுவர்.

அப்படிப்பட்ட குழந்தை செல்வம் இல்லாமல் பலரும் இன்று தோஷத்தாலும், பலவித பிரச்சனையாலும், உடல் உபாதைகளாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய பிரச்சினைகள் தீர ஒரே வழி இறைவனிடத்தில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் வேண்டுதல் ஒன்றே ஆகும்.

இவ்வாறு மழலை செல்வம் இல்லாமல் அவதிப்படும் அடியவர்களுக்கு மழலை செல்வம் வழங்கி வாழ வைக்கும் அம்பிகை அருள்புரியும் சக்தி திருத்தலமே சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் எருமைப்பட்டி கொட்டாய்காரன்வளவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி அம்பிகை ஆவாள்.

ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி ஆலய வரலாறு

சேலம் மாவட்டத்தில் உள்ள சக்தி திருத்தலங்கள் பல. அதில் ஒன்று தான் எடப்பாடிக்கு மிக அருகில் எருமைப்பட்டி கொட்டாய்காரன்வளவு கிராமத்தில் கிராம மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் ஆகும்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் சிறுவர்கள் ஒரு சுயம்பு கல்லை அம்மன் என்று கூறி வழிபட்டு வந்தனர். பின் அக்கல்லானது அங்கேயே நிலைக்கொண்டு ஆதிபராசக்தி என்ற திருநாமத்தில் ஊர் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது.

பின் சில காலத்தில் சுயம்பு கல்லில் தானாகவே நாக உருவம் தோன்றியது. தான் சுயம்பு நாக ஆதிபராசக்தி என்ற நாமத்தில் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று அம்பிகை அருள் கூறினாள்.

அன்று முதல் இன்று வரை ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி என்ற திருநாமம் கொண்டு பக்தர்களின் குறைகளை போக்கி வருகிறாள் அம்பிகை.

சாதாரண குடிலில் அம்பிகை கம்பீரமாக சுயம்பு ரூபத்தில் காட்சி தருகிறாள். உற்சவர் திருமேனி நின்ற திருக்கோலத்தில் பாசம், அங்குசம் தாங்கி அபய வரத அஸ்தம் கொண்டு ஐந்து தலை நாகம் குடை பிடிக்க அம்பாள் காட்சி தருகிறாள்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஒன்று சேரந்த  ஆதிபராசக்தியாகி மகா திரிபுரசுந்தரியாகி பரதேவதையாக விளங்குகின்றாள் ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி அம்பிகை.

கோவிலில் விநாயகர், முருகன், சப்த கன்னிகள், நாக ராஜா, நாக கன்னி ஆகியோர் அம்பிகையின் பரிவார தெய்வங்களாக விளங்குகின்றனர்.

மேலும், ஆலயத்தின் காவல் தெய்வமாக ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி ஐந்து அடி உயரத்தில் கம்பீரமாக சிங்கத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறாள். பீடத்தில் யந்திர ரூபமாகவும் பிரத்யங்கிரா அம்பிகையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

ஆலயத்தில் செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, தசமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ராகு காலத்தில் பெண்கள் தீபம் ஏற்றி வழிப்படுகின்றனர்.

குழந்தை வரம் தருவாள் சுயம்பு நாக ஆதிபராசக்தி

சுயம்பு நாக ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயில் குழந்தை வரம் வேண்டி வருவோர்க்கு கற்பகவிருட்சமாக விளங்குகிறது.

இங்கே ஆண்டு தோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில்  அம்மனிற்கு வளைக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தில் பலநூறு பக்தர்கள் வந்து மனமுருகி குழந்தை வரம் வேண்டுகின்றனர்.

அனைவருக்கும் அம்பிகைக்கு படைத்த நைவேத்தியம் மற்றும் ரஸ்தாலி வாழைப்பழம் வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை உண்பவர்கள் விரைவில் குழந்தை வரம் கிடைக்கப்பெற்று இன்புற்று வருகின்றனர் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

ஒரே ஆண்டில் குழந்தை பிறக்கும் என்பது இங்கே குவியும் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் சத்தியமான உண்மையாகும். வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனிற்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர் பக்தர்கள்.

ஆடி மாத வளைக்காப்பு உற்சவத்தில் சீரும் சிறப்புமாக அன்னதானம் நடைபெற்று வருகின்றனது. கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் ஏவல், பில்லி, சூனியம், திருஷ்டி போன்ற தொல்லைகளால் அவதிப்படும் அன்பர்கள் இங்கே வீற்றிருக்கும் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிரா தேவிக்கு நடைபெறும் “நிகும்பலா” யாகத்தில் கலந்து கொண்டு யாகத்தில் மிளகாய் வற்றலை சமர்பித்து எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது கண்கூடான உண்மை.

குழந்தை வரம்

பிரத்தியங்கிரா அம்பிகைக்கு அகல் தீபம், தேங்காய் தீபம், எழுமிச்சை தீபம், பூசணிக்காய் தீபம், மஞ்சள் கொம்பு மாலை என பல்வேறு வழிபாடு முறைகள் இங்கே நடைபெறுகின்றது.

குழந்தை வரம் வேண்டுவோர், திருமணத்தடை, நாக தோஷம், ராகு கேது தோஷம், சர்ப தோஷம் மற்றும் தொழில் பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் இங்கே சென்று ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி மற்றும் அதர்வண பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி அருளினையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

ஆலய அமைவிடம்

சேலம் – எடப்பாடி சாலையில் கன்னதேரி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் எருமைப்பட்டி கொட்டாய்காரன்வளவு ஸ்ரீ சுயம்பு நாக ஆதிபராசக்தி ஆலயம் அமைந்துள்ளது.

ஆலய தொடர்பிற்கு: திரு. நித்யானந்தம், Cell: 9095670302.

3

சைவ முதலை பபியா இறைவனின் திருவடி சேர்ந்தது!

0
சைவ முதலை

சைவ முதலை: கேரள மாநிலம் அனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் சைவ முதலை பபியா இறைவனடி சேர்ந்தது.

முதலைகள் என்றாலே மிகவும் கொடிய உயிரினம் ஆகும். பிற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் என்பதை நாம் அறிவோம்.

ஆனால், அனைவரும் வியக்கத்தக்க வகையில் சைவ உணவை மட்டுமே அதுவும் கோவில் பிரசாதம் மட்டுமே உண்ணும் ஒரு முதலை நமது நாட்டிலே உள்ளது என்பதை அறிவீர்களா?

ஆம், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பல ஆண்டுகளாக கோவிலின் குலத்தில் சைவ முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. பபியா என்று பெயர் கொண்ட முதலை கோவிலின் குலத்தில் இருந்தது யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காமல் வாழ்ந்தது.

இந்த குலத்தில் பல முதலைகள் முன்பு வாழ்ந்துள்ளது. ஆனால் பபியா மட்டுமே தனித்துவமான முதலையாகும். வாழ்நாள் முழுவதும் சைவ உணவு மட்டுமே உண்டு வந்தது.

தினந்தோறும் மதியம் கோவிலின் பிரசாதத்தை மட்டுமே சாப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது கோவிலின் பிரகாரத்தில் வலம் வரும். ஆனால், யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படுத்தாது. இதுவே கோவிலை பாதுகாத்தும் வந்துள்ளது.

இப்படிப்பட்ட அற்புதமான நற்குணங்கள் கொண்ட முதலை நேற்று இரவு பௌர்ணமி நாளில் (9/10/2022) அன்று ஸ்ரீ பத்மநாபனின் திருவடியை அடைந்துள்ளது.

இந்த குலத்தில் இதுவரை பல முதலைகள் வாழ்ந்திருந்தாலும் முதலையின் உடல் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

தற்பொழுது கோவிலில் பக்தர்கள் தரிசனதிற்காக முதலையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரின் அன்பிற்கு உரிய முதலை இறைவனடி சேர்ந்தது பக்தர்களின் மனதிற்கு வருத்தத்தை அளித்துள்ளது.

3

செல்வவளம் பொழியும் சொர்ணாகர்ஷன பைரவர்

0
அஷ்டமி பைரவர்

செல்வவளம் பொழியும் செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷன பைரவர். கும்பகோணத்தில் உள்ள ஒரே இடத்தில் அமைந்த அஷ்ட பைரவர் திருக்கோவில் சகல சம்பத்துகளும் அருளும் வழிபாடு.

நமது பாரத தேசத்தில் தொன்றுதொட்டு பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சைவ, வைணவ, சாக்த, கௌமார, கணாதிபத்ய, சௌரம் என அனைத்து சமயங்களிலும் பல்வேறு வழிபாடு முறைகள் செய்து வருகின்றோம்.

இவை அனைத்தும் எதற்கு என யோசித்து பார்த்தால் செல்வம், கல்வி, கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை, வியாதி, வழக்கு, எதிரிகள் தொல்லை என்று ஒவ்வொருவரும் எதாவது ஒரு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றோம்.

இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் தீர நமது முன்னோர்கள் கூறிய சிறப்பானதும், எளிதானதுமான வழிபாடே பைரவர் வழிபாடு.

64 பைரவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு 64 சக்திகளாக யோகினிகள் உள்ளதாகவும் வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன. அதிலும் சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஐஸ்வர்ய மலை பொழியக்கூடியது.

பைரவர் இல்லாத சிவன் கோவில் இருக்காது. அவரே சேத்திரபாலகர். கோவிலின் காவல் தெய்வமாக விளங்குகிறார். நமது வாழ்விற்கும் காவலாக இருக்கக்கூடியவரும் அவரே ஆவார்.

செம்பியவரம்பல் பைரவர் திருத்தலம்

செம்பியவரம்பல் பைரவர்

கோவில் நகரமாம் கும்பகோணத்தில் அய்யாவாடிக்கு மிக அருகில் திருவிசைநல்லூர் என்ற ஊரிலே அமைந்துள்ள பைரவ திருத்தலமே ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோவில்.

இங்கே அஷ்ட திசைகளிலும் அஷ்ட பைரவர் சூழ்ந்திருக்க நடுநாயகமாக ஸ்ரீ சொர்ண பைரவியை மடியில் அமர்த்தி ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் அருளாட்சி புரிந்து வருகின்றார்.

மூலஸ்தானத்தில் சொர்ணாகர்ஷன பைரவர் மடியில் ஆஜாமிளா தேவியை அணைத்தப்படி வலது மேற்கரத்தில் சொர்ணகலசமும், கீழ் கரத்தில் அபயமும் தாங்கி இடது மேற்கரத்தில் டமருகமும் கீழே அம்பிகையை அணைத்தும் இடதுகாலை மடித்து வலது காலை பத்மத்தின் மீது வைத்து திருக்காட்சி அருள்கிறார்.

இவரை சுற்றி வெளிப்புறத்தில் அசிதாங்கப்பைரவர், ருருப்பைரவர், சண்டப்பைரவர், பீக்ஷணப்பைரவர், உன்மத்தப்பைரவர், சம்ஹாரப்பைரவர், குரோதனப்பைரவர், கபாலப்பைரவர் என அஷ்ட பைரவர்களும் புடைசூழ்ந்துள்ளனர்.

ஸ்ரீ ஞானபிரசூராம்பிகா சமேத காலஹஸ்தீஸ்வரர் தனி சன்னதியில் காட்சிதருகின்றனர். இத்திருக்கோவில் பைரவ பீடம் என அழைக்கப்படுகிறது. தினந்தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

அஷ்டமி பைரவர் வழிபாடு

திதிகளில் பைரவருக்கு உரியதாக சொல்லப்படுவது அஷ்டமி திதி. அதிலும் தேய்பிறை அஷ்டமி இன்னும் விசேடமான ஒன்று.

அஷ்டமி திதி நன்னாளில் பைரவரை சிகப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். செவ்வரளி மலர்களால் வழிபட சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

சுத்தமான நல்லெண்ணைய் ஊற்றி மண்ணினால் ஆன அகல் விளக்கில் பஞ்சுதிரியால் தீபம் ஏற்ற வேண்டும். புனுகு பூசி வழிபடலாம்.

துன்பங்கள் நீங்கி வாழ்வில் வெற்றி பெற  அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபாடு செய்வது மிகவும் பலன் அளிக்கும். குபேரசம்பத்து அருளும்.

இத்திருக்கோவிலில் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பாக யாக வேள்விகள் நடத்தப்படுகின்றது.

மேலும் செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு செய்வதினால் திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் தொல்லை, ராகு கேது தோஷம், சனி தோஷம், எதிரிகள் தொல்லை என அனைத்து துயரங்களும் நீங்கும்.

அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், திருவாதிரை, பூசம், உத்திர நட்சத்திர தினங்களில் பைரவரை வழிபாடு செய்ய உகந்த தினங்கள் ஆகும்.

பைரவருக்கு உரிய மலர் செவ்வரளி, உரிய நைவேத்தியம் மிளகு சாதம், உரிய நிறம் சிகப்பு ஆகும். வடைமாலை சாற்றுவதால் நன்மை ஏற்படும். மல்லிகை மலர் சாத்துவது பாவமாகும்.

நாமும் கும்பகோணம் சென்று செம்பியவரம்பல் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறுவோம்.

கோவில் அமைவிடம்:

கும்பகோணம் அய்யாவாடி மற்றும் திருநாகேஸ்வரதிற்கு மிக அருகில் செம்பியவரம்பல் என்ற கிராமத்தில் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது.

3

உலகின் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல்

1
உலகின் மிக உயரமான மலைகள் எது டாப் 10 பட்டியல்

உலகின் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல். world highest mountain point in tamil. உலகில் மிக உயரமான சிகரம், இடம் எது? மலை உயரம் எவ்வளவு?

மலைகள் என்பது நிலத்திற்கு மேல் அமைந்துள்ள மிகப்பெரிய ஒரு நில அமைப்பாகும். மலைகள் என்பவை பொதுவாக குன்றுகளை விட செங்குத்துதாக அமைந்திருக்கும் இவை பொதுவாக எரிமலை குழம்பின் மூலம் ஏற்படுகிறது.

உலகத்தில் உயரமான மலைகள் நிறைய உண்டு. அவற்றில் முதல் பத்து உயரமான மலைகளை பற்றியும் அவற்றை அசாத்திய திறனுடன் உச்சத்தை கடந்தவர்களின் விபரங்களையும் கூடுதல் தகவலாக இங்கு பார்ப்போம்.

1. எவரெஸ்ட் சிகரம் (8848 மீ ), நேபாளம்.

highest mountain in the world mount Everest

1953-ஆம் ஆண்டில் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோர் முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள்.

சிகரத்தின் சரியான நிலையை முதலில் கண்டுபிடிக்க முயன்ற நில அளவையாளர் ஜெனரல் ‘சர் ஜார்ஜ் எவரெஸ்ட்’ நடத்தியதால் ஆய்வின் பின்னர் ‘மவுண்ட் எவரெஸ்ட்’ என்று பெயர் பெற்றது.

இதுவே உலகின் மிக உயரமான மலையில் முதலிடம் ஆகும்.(highest mountain in the world) எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8848 மீ (29 ,029 அடி) உயரம் கொண்டது.

நேபாளத்தில் “சாகர் மாதா” என்றும் சீனாவில் சோமோலுங்க என்றும் அழைக்கப்படுகிறது.

2. மவுண்ட் கே 2 (8611 மீ ), பாகிஸ்தான்.

உலகில் மிக உயரமான மலைகள் world highest mountain point

எவரெஸ்ட் சிகரத்திற்கு பிறகு உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மலை கே 2 ஆகும். 8611 மீட்டர் உயரம் கொண்டது.

இது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனை சீனர்கள் கோகிர் (Qogir) என்றும் அழைப்பார்கள்.

கே2 மலை ஏறுவது சவாலான விசியம் அனாலும் 250 நபர்களுக்கு மேல் வெற்றிகரமாக மலை உச்சத்தை அடைந்துள்ளனர். இதுவே உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம் என அழைக்கப்படுகிறது.

3. மவுண்ட் கஞ்சன்ஜங்கா (8586 மீ ), நேபாளம் /இந்தியா.

Kanchenjunga the third highest mountain

கஞ்சன்ஜங்கா என்பது “பனியின் ஐந்து பொக்கிஷங்கள்” என்று பொருள்தரும்.

ஏனென்றால் இது தங்கம், வெள்ளி, கற்கள், தானியங்கள் மற்றும் புனித புத்தகங்கள் என்று கடவுளின் ஐந்து பொக்கிஷங்கள் கொண்டு ஆசிர்வதிக்கப்பட்டவையென நம்பப்படுகின்றது.

இது நேபாளத்தில் உள்ள இரண்டாவது உயரமான மலையாகும். ஜோ பிரவுன் மற்றும் ஜார்ஜ் பேண்ட் ஆகியோர் 1995-ஆம் ஆண்டில் உலகின் முதல் நபர்களாக ஏறினார்கள் .

4. மவுண்ட் லோட்ஸ் (8511 மீ ), நேபாளம்.உயரமான இடம் எது மலை உயரம் எவ்வளவு?

மவுண்ட் லோட்ஸ் எவரெஸ்ட் சிகரத்தோடு இணைந்து காணப்படும், ஆபத்தான மற்றும் வியக்கத்தக்க பாறை பாதைகளை  கொண்டது.

ஏற முயற்சிக்கும்போது பலர் தோல்வியுற்றுள்ளனர் . மேலும் உயிர் இழப்புகளும் நடந்துள்ளது.

இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.

உலகில் மிக ஆபத்தான மலைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. எர்னஸ்ட் ரெய்ஸ் மற்றும் பிரிட்ஸ் லூட்சிங்கர் 1956-இல் வெற்றிகரமாக இந்த உச்சத்தை ஏறினார்கள்.

5. மாகலு மலை (8462 மீ ), நேபாளம்.

உயரமான இடம் எது மலை உயரம் எவ்வளவு?

மிகவும் கூர்மையான விளிம்புகள் மற்றும் செங்குத்தான பிட்சுகளை கொண்டுள்ளது.

இதனால் ஏற மிகவும் கடினமாக இருக்கும். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சிகரம்.

அதன் வடிவம் நான்கு பக்க பிரமிடு போல காட்சி அளிக்கும். லியோனல் டெர்ரே மற்றும் ஜீன் கூஷி ஆகியோர் 1955-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக ஏறினார்கள் .

6. மவுண்ட் சோ ஓயு (8201 மீ ), நேபாளம் .

உலகின் உயரமான இடம் எது

இந்த மலை ஏற மிக எளிதாக அணுகக்கூடிய மலைகளில் இதுவும் ஓன்று.

1954-இல் எச்.டிச்சி, எஸ்.ஜோசலர், பசாங்லாமா இதை முதலில் ஏறி வெற்றி கண்டவர்கள் ஆவார்கள்.

சோ ஓயு என்ற இந்த மலை திபேத்தியில் “டர்க்கைஸ் தேவி” என்றும் அழைக்கப்படுகிறது. எவரெஸ்ட் மலைக்கு 20 கி.மீ மேற்கிலும் நேபாளம் மற்றும் சீனாவிற்கும் இடையிலும் உள்ளது.

7. மவுண்ட் தவுலகிரி (8167 மீ ),நேபாளம்.

உலகில் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல்

மத்திய நேபாளத்தின் வடக்கே அமைந்துள்ள உலகின் ஏழாவது மலை தவுலகிரி மலையாகும்.

இது சுற்றுலா பயணிகள் மற்றும் ஏறுபவர்களின் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது. இந்த மலை பெயரின் அர்த்தம் “வெண் மலை” என்றும் அழைக்கப்படுகிறது.

நைமா டோர்ஜி, பி.டைனர்  ஆகியோர் 1960-இல் இதில் ஏறினார்கள்.

8. மானஸ்லு மலை (8163 மீ ), நேபாளம்.

மலை உயரம் எவ்வளவு? டாப் 10 பட்டியல்

உலகில் எட்டாவது பெரிய மலை. இதன் அடிப்பகுதியில் பெரிய பனியால் சூழப்பட்டது.

இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலய மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் “மனதின் சிகரம்” என்னும் பொருள் தருவதாகும்.

ஜப்பானை சேர்ந்த ட.இமானிஷி 1956-ஆம ஆண்டில் இந்த மலையை ஏறிய முதல் நபர் ஆவார்.

9. நங்க பர்பத் (8125 மீ ),பாகிஸ்தான்.

world highest mountain point டாப் 10 பட்டியல்

இது பாகிஸ்தானில் கில்கிட் பல்டிஸ்தானில் உள்ள சிந்து நதியின் தெற்கே அமைந்துள்ளது. நங்க பர்பத் என்றால் “நிர்வாண மலை ” என்று பொருள்.

இருபதாம் நூற்றாண்டில் முதல் பாதியில் ஏராளமான மலை ஏறுபவர்கள் இறந்ததால் இது “கில்லர் மலை” என்று அழைக்கப்படுகிறது.

ஆஸ்திரேயாவைச் சேர்ந்த ஹெர்மன் பஹ்ல 1953-ஆம் ஆண்டு முதன் முதலில் இம்மலையில் ஏறினார் .

10. அன்ன பூர்ணா மலை (8091 மீ ), நேபாளம்.

உலகில் மிக உயரமான மலைகள் இடம் எது டாப் 10 பட்டியல்

அன்னப்பூர்ணா என்பது ஒரு சம்ஸ்கிருத பெயர் ஆகும். இது அறுவடை தெய்வத்தை குறிக்கிறது.

உலகின் ஆபத்தான இந்த அன்ன பூர்ணா மலை 7,629 சதுர கிமீ  கொண்டது. மௌரிஸ் ஹெர்ஸ்வ்க் மற்றும் லூயிஸ் லாச்சேனல்  1950-ல் முதலில்  இம்மலையில் ஏறினார்கள்.

இந்த மலையை ஏற அன்னபூர்ணா நுழைவு வாயில் அடித்தளம் முகாம் மலையேற்றமாக இருக்கிறது.

உலகில் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல். world highest mountain point in tamil. உலகின் மிக உயரமான சிகரம், இடம் எது? மலை உயரம் எவ்வளவு? இந்த கேள்விகளுக்கு தற்பொழுது விடை கிடைத்ததா?

இதையும் கொஞ்சம் படியுங்கள்

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை
உலகின் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல்
உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்
3

ஜெய்ஹிந்த் வார்த்தை உருவான வரலாறு!

0
ஜெய்ஹிந்த் வரலாறு

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை எப்படி உருவானது? ஜெயஹிந்த் என்ற வார்த்தை எப்படி பிரலம் அடைந்தது? அதன் அர்த்தம் என்ன? வந்தே மாதரம் விடுதலைப் போராட்டம்.

வார்த்தை வரலாறு

புதிய வார்த்தைகள் எப்படி உருவாகிறது? யாரால் உருவாக்கப்படுகிறது? என இன்று நம்மிடம் தரவுகள் சேமிக்கும் தொழில்நுட்பம் இருக்கலாம். ஆனால், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆதாரங்கள் திரட்டுவது சுலபமான காரியம் அல்ல.

மன்னர்கள் காலம் தொட்டே எத்தனையோ ஆதாரங்கள், எதிரி நாட்டு அரசர்களால் அழிக்கப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள கோவில் கல்வெட்டு, சிற்பம், ஓவியம், ஓலைச்சுவடி, இலக்கிய பாடல்கள் மூலம் வரலாறுகளை அறிந்து வைத்து இருக்கிறோம்.

அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழ் தான் உலகின் மூத்த மொழி என நாளுக்கு நாள் புதிய புதிய ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது.

இவைகளைத் தவிர, பல செவி வழி சொற்கள் உள்ளன. ஆனால் அவற்றிக்கு ஆதாரம் எனக் கேட்டால் கொடுப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. அவை காலம் தொட்டே நாம் செவி வழியாக கேட்ட ஒன்று.

யார் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்? என இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்தக் கேள்வி எழுப்பினால் ஒரே மாதிரி பதில்கள் கிடைக்காது.

ஏன் என்றால்? அவரவர் தங்கள் இனத்தைச் சேர்த்தவர்களை அடையாளப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி ஒருவர் பெயரை கூறுவார்கள்.

இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு பெயர் சூட்டி அதை ஆட்சி செய்து, அதற்கு சுதந்திரம் கொடுத்து இன்று வரை நம்மை பேச வைத்துவிட்டு சென்றவர்கள் ஆங்கிலேயர்கள்.

ஆங்கிலேயருக்கு முன் எத்தனையோ மன்னர்கள் கிட்டத்தட்ட இந்தியாவின் பலபகுதிகளை கையகப்படுத்தி பெரிய சாம்ராஜ்ஜியம் உருவாக்கி உள்ளனர். ஆனால் உருவாக்கிய வேகத்தில் சரிந்தும் விழுந்தனர்.

ஆங்கிலேயர்களால் மட்டுமே ஒரு மிகப்பெரிய நாட்டை ஒற்றுமைப்படுத்தி ஆட்சி செய்து, மக்களாட்சி நாடக மாற்றி இந்தியா என்ற நாட்டை உருவாக்கினர்.

எல்லோரையும் இந்தியர்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதன்பிறகே நமக்கு இந்தியர்கள் என்ற உணர்வும், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது.

அந்த உணர்வை உருவாக்கும் ஒரு மந்திரச்சொல் தான் ஜெய்ஹிந்த். மொழி எதுவாகினும் உணர்வு ஒன்று தான்.

ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் என்றால் “இந்தியா வெல்க” என்று பொருள் படும். “இந்துஸ்தான் கி ஜெய்” என்ற வார்த்தையின் மறுஉருவாக்கம் தான் “ஜெய்ஹிந்த்”.

இந்த வார்த்தையை யார் முதலில் முழங்கியது எனக் கேட்டால் அதற்கும் ஒரு பெரிய வரலாறே உள்ளது.

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதலில் கூறியவர்கள் என இருவர் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் பிள்ளை மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஆபித் ஹசன் சப்ரானி.

செண்பகராமன் பிள்ளை

செண்பகராமன் பிள்ளை இளம் வயது முதலே சுதந்திர போராட்ட வேட்கை கொண்டவர். புரோ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார்.

செண்பகராமன் பிள்ளைசர் வால்டர் வில்லியம் என்ற ஜெர்மானிய ஒற்றர் மூலம் ஜெர்மனி சென்றவர் அங்கேயே பட்டப்படிப்பை முடித்தார். ஹிட்லர் வழியைப் பின்பற்றி இந்திய விடுதலைக்காக பாடுபட்டார்.

1933-ல் சுபாஸ் சந்திரபோஸ் வியன்னாவில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொண்டபோது, சுபாசிடம் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை செண்பகராமன் தெரிவித்ததாக இரண்டு புத்தகங்களின் தரவு கூறுகிறது.

Madras Presidency in Pre-Gandhian Era என்ற புத்தகத்தை எழுதிய சரோஜா சுந்தராஜன், புத்தகத்தில் வியன்னா மாநாடு பற்றி எழுதியுள்ளார்.

Germany’s Asia-Pacific Empire என்ற புத்தகத்தை எழுதிய சார்லஸ் ஸ்டீபன்சன், அந்த புத்தகத்தில் ஜெய்ஹிந்த் பற்றியும் செண்பகராமன் பிள்ளை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.

ஆபித் ஹசன் சப்ரானி

ஆபித் ஹசன் சப்ரானிஆபித் ஹசன் ஜெர்மனி சென்று பொறியியல் பட்டம் பெற்றவர். சந்திரபோஸ் பேச்சால் ஈர்க்கப்பட்டு விடுதலைப்போரில் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார்.

இந்திய தேசிய ராணுவத்திற்கும், சுபாஸ் சந்திரபோஸுக்கும் மொழிப் பெயர்ப்பாளராக செயலாற்றினார். ஆபித் ஹசன் தான் “ஜெய் ஹிந்த்” என்ற வார்த்தையை சுபாசிற்கு பரிந்துரை செய்தார் என்றும் கூறப்படுகிறது.

தாகூர் யஸ்வந் சிங் அவர்கள் கூறிய ஹிந்துஸ்தான் ஹி ஜெய் என்ற வார்த்தையைத் தழுவி ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆபித் ஹசன் உருவாக்கியதாக குர்பச்சன் சிங் மன்கட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

ஜெய்ஹிந்த் பிரபலம் ஆனது எப்படி?

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை யார் முதலில் கூறினார் என்பதைவிட அதை பிரபலப்படுத்தியது சுபாஸ் சந்திரபோஸ்.

இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற காரணமான இந்திய தேசிய இராணுவத்தில், சுபாஷ் தன்னுடைய உரையை முடிக்கும் போது ஜெய்ஹிந்த் எனக் கூறி முடிப்பார்.

அதன்பிறகு, இந்தியா விடுதலை பெற்றதும் முதலில் கொடியேற்றிய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜெய்ஹிந்த் எனக்கூறி உரையாற்றினார்.

ஆகஸ்டு 15, 1947 முதல் அனைத்து அஞ்சல்களில் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.

அனைத்து அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளும், ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்லுடன் முடிவு பெரும்.

1947-ல் நடந்த பிரித்தானிய அரசி எலிசபத் – பிலிப் திருமணத்திற்கு, மகாத்மா காந்தி தன் கையால், “ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்” சால்வையை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.

இன்று வரை, ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் தேசபற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக முழங்குகின்றனர்.

3

சுவாமி விவேகானந்தர் பார்வையில் எதிர்கால இந்தியா

0
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்

சுவாமி விவேகானந்தர் பார்வையில் எதிர்கால இந்தியா கட்டுரை? சுதந்திர தினம், விவேகானந்தர் பிறந்த தினம் கொண்டாடும் நாம் உண்மையில் சுதந்திரமாக உள்ளோமா?

சுதந்திர இந்தியாவில் மக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் தமது காலத்தை பெரும்பாலும் இணையம், இணைய விளையாட்டு, கைபேசியில் தேவையற்ற உரையாடல்களில் தான் நேரத்தை செலவிடுகிறார்கள்.

எவரும் தங்களின் எதிர்காலம் குறித்த எண்ணங்களை முறைப்படுத்துவதும் இல்லை, எண்ணுவதும் இல்லை.

இந்த நிலையில் இளைய தலைமுறை ஒன்றே எதிர்கால இந்தியாவை வளமாகவும், வலிமையாகவும் மாற்றும் என்று கூறிய பெருமகனார் சுவாமி விவேகானந்தர்.

இவரின் எண்ணத்தில் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி நிலை குறித்த சிந்தனைகள் மேலோங்கி இருந்தன.

குடிசைகளில் மறைந்துள்ள இந்தியா

விவேகானந்தர் பிறந்த தினம் சுதந்திர தினம்ஆன்மீக பூமி என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில் மதமும், சாதியும் மக்களின் மனதிலும், உதிரத்திலும் கலந்துவிட்டது. மதம் என்பது மக்களை நெறிப்படுத்த மட்டுமே தவிர வேற்றுமைகளை தூண்ட இல்லை என்பதை மக்களிடம் ஆழமாக கொண்டுச் செல்ல வேண்டும்.

ஆன்மீகம், யுத்தம், கவிதை போன்ற அனைத்து துறைகளிலும் உலகை வென்ற தீரர்களே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர்.

உலகிலுள்ள அனைத்து முன்னேற்றத்திலும் தங்களுடைய உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் பாமர மக்களைப் பற்றி புகழவோ, எழுதவோ செய்கின்றனரா? முற்றிலும் இல்லை!

உயர் வர்க்கத்தினர் உயர்வதற்காக, பாமர மக்களின் உழைப்பை உறிஞ்சி வயிற்றை வளர்த்து வருகின்றனர். கவனிப்பாரற்று ஒருவேளை சாப்பாட்டிற்காக, மொத்த இந்தியாவும் குடிசைகளில் மறைந்து கிடக்கின்றன.

இத்தகைய நிலை மாற வேண்டும். இந்தியாவில் இரண்டு பெரும் தீமைகள் மேலோங்கி உள்ளன “பெண்களை காலின் கீழ் மிதித்து நசுக்குதல், சாதிக்கட்டுப்பாடுகள் மூலம் ஏழைகளை கசக்கிப் பிழிதல்”.

இந்து-இஸ்லாம் ஒற்றுமை

பெரும்பாலும் விவேகானந்தரை இந்துத்துவ ஆன்மீகவாதி என்ற வரையறைக்குள் வைத்துள்ளனர். ஆனால், அவர் மதங்களை கடந்தவர்.

மதம் என்பது அனைவரும் கடவுளை அடைவதற்கான பாதைகளை வகுத்தli அழிப்பது மட்டுமே. ஆனால் அனைவரும் சென்று சேர்கின்ற இடம் ஒன்று தான்.

“இந்தியா இந்து மற்றும் இஸ்லாம் இரண்டறக் கலந்த தேசம். இரு மதங்களின் ஒற்றுமையே இந்தியாவை சக்திமிக்க நாடாக மாற்றும்”

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்

  • நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
  • பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்
  • நல்லவர்களாக இருக்கவும், நன்மை செய்ய முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.

எதிர்கால இந்தியா கட்டுரை இந்தியாவின் எதிர்காலம்

கல்வி எப்படி இருக்க வேண்டும்?

கல்வி என்பது, உன் மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக வாழ்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக மாற்றக் கூடிய, நல்ல ஒழுக்கங்களை வளர்க்கக்கூடிய ஐந்து கருத்துக்களை கிரகித்து அவற்றை நாம் பின்பற்றி நிற்க வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரிய நூல் நிலையம் முழுவதும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட, நீயே அதிகம் கற்றவன் ஆவாய்.

இந்தியாவின் எதிர்காலம் (எதிர்கால இந்தியா கட்டுரை)

இந்தியாவின் எதிர்காலமானது இளைய சமுதாயத்தின் கையில் தான் உள்ளது. துறவும், தொண்டுமே இந்தியாவின் தேசிய இலட்சியங்களாகும். இந்த இரண்டையும் பேணி வளர்த்தால் தானாக முன்னேற்றம் வந்து சேரும்.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி; நாத்திகவாதியாக இருந்தாலும் சரி. உன் சுக துக்கங்களை மறந்து வேலை செய். இதுதான் நீ கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

இந்தியாவின் எதிர்காலம் அழிந்து விட்டா,ல் எல்லா ஞானமும் அழிந்து போய்விடும் நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.

கல்வி, மதம், பெண் சுதந்திரம், தனிமனித சுதந்திரம், உழைப்பு, சகோதரத்துவம் இவை மட்டுமே நாட்டை வளப்படுத்தும், என்பதனை மனதில் நிலை நிறுத்தி இளைஞர்கள் வீணாக நேரத்தை வீணாக்காமல் தம் வாழ்கையையும் நமது பாரத தாயையும் வளமாக்க ஏக மனதோடு பாடுபடுங்கள். இந்தியாவின் எதிர்காலம் வளமாக இருக்கும்.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் ஜனவரி 12. அவரின் எதிர்கால கனவை நோக்கிப் பயணம் செய்து அவரவர் இலக்கை அடைய அயராது உழைப்போம்.

இந்திய சுதந்திர தினம் கொண்டாடும் நாம் எதிர்கால இந்தியா பற்றி சிந்தனை செய்வோம் என சுதந்திர தின நாளில் உறுதியெடுப்போம்.

விவேகானந்தர் பொன்மொழிகள் படங்கள்

இந்தியக் குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

3