Home Blog Page 335

கறுப்பர்களின் சூப்பர்ஹீரோ மார்வல் ஸ்டுடியோஸ்!

2
கறுப்பர்களின் சூப்பர்ஹீரோ

கறுப்பர்களின் சூப்பர்ஹீரோ மார்வல் ஸ்டுடியோஸ். பல சூப்பர் ஹீரோக்களை உலகிற்கு தந்த மார்வல் ஸ்டுடியோஸ் இன்று கறுப்பர்களின் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளது.

சூப்பர் ஹீரோ மூவி என்றாலே உலக அளவில் வசூலை வாரிக்குவிக்கும். இந்தவகை படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர்.

முதல் சூப்பர்ஹீரோ

1920-ல் ‘தி மார்க் ஆஃப் ஜோரோ’ என்ற முதல் சூப்பர்ஹீரோ படம் வெளிவந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் வெளிவந்து நூற்றாண்டை கடக்க உள்ளது.

இதுவரை பல சூப்பர் ஹீரோக்கள் மக்களை கவர்ந்துள்ளனர். இதில் கருப்பர்கள் முதன்மை சூப்பர் ஹீரோவாக நடித்த படங்கள் மிகமிக குறைவு.

முதல் கறுப்பர் சூப்பர்ஹீரோ

1993-ஆம் ஆண்டு ‘தி மீட்யர் மேன்’ என்ற சூப்பர்ஹீரோ படம் வெளிவந்தது. இதை ‘ராபர்ட் டவுன்சென்ட்’ என்ற கருப்பினத்தவரே இயக்கி, தயாரித்து, சூப்பர் ஹீரோவாகவும் நடித்தார்.

இதுவே கறுப்பினத்தவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த முதல் சூப்பர்ஹீரோ படம். ஆனால் இதுபெரிய பட்ஜெட் கொண்டு எடுக்கப்படவும் இல்லை, பெரிய வசூலையும் குவிக்கவில்லை.

சூப்பர் ஹீரோ படங்களில் கறுப்பினத்தவர்கள் நிறையவே நடிப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட முதன்மை சூப்பர் ஹீரோவாக நடிக்க மாட்டார்கள்.

கறுப்பர்களின் சூப்பர்ஹீரோ

மார்வல் ஸ்டியோவின் முதல் படம் ‘ப்ளேட்’. இதில் ‘வெஸ்லி ஸ்னைப்ஸ்’ என்ற கறுப்பின நடிகர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். 1998-ல் வெளிவந்த இப்படம், உலக அளவில் வசூலை குவித்தது. அதன் பிறகு ‘ப்ளேட் 2’ மற்றும் ‘ப்ளேட் ட்ரினிட்டி’ என இரண்டு பாகங்கள் வெளிவந்து விட்டன.

மார்வல் ஸ்டுடியோஸ், இந்த வருட ஆரம்பத்தில் ‘ப்ளாக் பேந்தர்’ என்ற சூப்பர் ஹீரோ படத்தை வெளியிட்டது. இதில் முதன்மை சூப்பர் ஹீரோ மட்டுமன்றி நடித்தவர்களில் பெரும்பாலானோர் கருப்பர்களே.

கருப்பர்களை சூப்பர் ஹீரோக்களாக அழகு பார்த்த மார்வல் ஸ்டுடியோஸ், கறுப்பர்களின் சூப்பர்ஹீரோ.

3

அ இலை இருந்தால் உலகமே தமிழர் கையில் அகப்படும்!

0
அ இலை

அ இலை அகநானுறுவால் கிடைத்த அற்புத மூலிகை. இது பெட்ரோலுக்கு இணையான மாற்று எரிபொருள். இதை வெளிக்கொண்டுவர 20 வருடமாக போராடும் தமிழ் ஆராய்ச்சியாளர்.

இந்தியா 2020ல் வல்லரசு ஆகும். இதைக்கூறிய அப்துல்கலாம் மறைந்துவிட்டார். 2020 பிறக்க இன்னும் 15 மாதங்களே உள்ளது. வல்லரசாய் மாறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

ஆகஸ்டு 15-ல் பெட்ரோல் ரூ.4ற்கு விற்கப்படும் என புரட்சிபேசிய ராமர்பிள்ளை, இரவோடுஇரவாக கைது செய்யப்பட்டார். இது முதல்முறையல்ல, 1997-ல் இருந்தே பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார்.

அ இலை

ஒருநாள் பள்ளியில் சமையலறை அருகில், தீயில் பச்சை இலை வித்தியாசமாக எரியத்துவங்கியுள்ளது. இதைக்கண்ட ராமர்பிள்ளை ஆசிரியரிடம் கேட்கும்போது, அகநானுற்றில் இதற்கு விளக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மக்கள் அக்காலத்தில் அ இலையை சிக்கிமுக்கி கற்கள் மூலம் ஒளிர வைத்து, இரவில் விளக்காக பயன்படுத்தியுள்ளனர் என  அகநானுற்றை படித்து தெரிந்துகொண்டார் ராமர் பிள்ளை.

அந்த மூலிகை செடியை தேடிக்கண்டுப்பிடித்து, அதை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பள்ளிக்கூடம் செல்லாமல் பத்து வருடமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

எரிபொருள் பரிசோதனை

இறுதியாக அ இலை கொண்டு எரிபொருளை கண்டுபிடித்துள்ளார். அதை 1996-ல் சென்னை ஐ.ஐ.டி.யில் பரிசோதனை செய்துக்காட்டி பெட்ரோலைவிட சிறந்த எரிபொருள் என சான்றிதழ் வாங்கியுள்ளார்.

மேலும் இதுகுறித்து, அன்றைய பிரதமர் தேவகவுடா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, டெல்லி ஐ.ஐ.டி. மற்றும் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மூலம் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த சோதனையிலும் வெற்றி.

கருணாநிதி பாராட்டு

சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி, ராமர்பிள்ளைக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக தலைமை செயலாளருக்கும் சிபாரிசு செய்கின்றது.

அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையில் சோதித்துக்காட்டியுள்ளார். அதை பார்த்து வியந்த கருணாநிதி ‘இனி நாட்டின் பஞ்சம் தீர்ந்துவிடும்’ எனக்கூறி 13 பவுன் தங்கப்பேனாவை பரிசாக அளித்துள்ளார்.

தொழிற்சாலை திறப்பு

1999-ல் கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள் மற்றும் மத்திய அமைச்சர் ஆதித்தன் ராமர்பிள்ளையின் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளனர். நண்பர்கள் மூலம் 35 லட்சம் கடன் வாங்கி தொழிற்சாலையை துவங்கியுள்ளார்.

சில நாட்களிலேயே மக்களிடம் ராமர்பிள்ளை எரிபொருளை விற்கத்துவங்கிவிட்டார். அமைச்சர் ஒருவர் ராமர்பிள்ளையிடம் 75,000 லிட்டர் எரிபொருள் வாங்கிவிட்டு பணம்கொடுக்கவில்லை. இதில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ராமர்பிள்ளை மீது வழக்கு

மூலிகை எரிபொருள் எனக்கூறி இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிகளின் உதவியுடன் பெட்ரோலிய மூலப்பொருள்களை கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றார். இப்படி ராமர்பிள்ளை மீது 2000-ல் எப்.ஐ.ஆர். போடப்படுகிறது.

அந்த வழக்கில் இந்தியன்ஆயில் கார்பரேசன் அதிகாரிகள் அப்படி எதுவும் நடக்கவில்லை எனத்தெரிவிக்கின்றனர். மேலும் தன்னுடைய தொடர்முயற்சியால், பெட்ரோல் கலக்கப்படவில்லை என நிதிபதி முன் நிரூபித்துக்காட்டுகின்றார்.

அதில் பெட்ரோல் ஏதும் கலக்கப்படவில்லை. அது பெட்ரோல், டீசல் போன்று ஒரு மாற்று எரிபொருள் என சிலவருடங்கள் கழித்து ராமர்பிள்ளையை சென்னை சி.பி.ஐ. கோர்ட் விடுதலை செய்கின்றது.

புரட்சி அறிவிப்பு

கடந்த மாதம் மீண்டும் மீடியா முன்தோன்றி தன்னுடைய ஆராய்ச்சிகளையும், எப்படி பாதிக்கப்பட்டேன் என்பது பற்றி கூறினார். ஆகஸ்ட் 15-ல் பெட்ரோல் 4 ரூபாய்க்கும், டீசல் 3 ரூபாய்க்கும் விற்கும் என புரட்சி அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த நாளே அவருடைய சோதனைக்கூடம் சீல்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவருடைய மூலிகை பெட்ரோலை பயன்படுத்தினால், இந்தியாவின் பொருளாதாரம் பலமடங்கு உயரும். அங்கீகாரம் கிடைத்தபின்பும் அ இலை எரிபொருளை விற்பனைக்கு கொண்டுவர இயலவில்லை என மனம் குமுறுகிறார் ராமர்பிள்ளை.

1990-ல் திருபையா அம்பானியால் வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரிக்க பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உருவாக்கப்பட்டது. இன்று ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 3600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ராமர்பிள்ளை போன்றவர்கள் இன்னும் தொழில் துவங்கவே முடியாமல் திணறி வருகின்றனர். அ இலை எரிபொருளில் எதைக்கலந்தால் என்ன?

அந்த எரிபொருளை பயன்படுத்திய பலர், வண்டி அருமையாக இயங்குகிறது என தெரிவித்துள்ளனர். இதனால் எந்த ஒரு வண்டியும் பளுதடையவோ, எஞ்சின் வெப்பத்தால் தீப்பிடித்து எரியவோ இல்லை. பின் ஏன் ராமர்பிள்ளையை தடுக்கவேண்டும்?

3

பறக்கும் கார்கள்; பற பற பறக்கலாம் இந்தியாவில்!

0
மும்பை நகரத்தில் uber பறக்கும் கார்கள்

பறக்கும் கார்கள் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மும்பை நகரத்தில் உபர் (uber) நிறுவனம் இந்த சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் உபர்

அமெரிக்க நிறுவனமான உபர், வாடகை வாகனங்களை இயக்கும் நிறுவனங்களின் முன்னோடியாக திகழ்கிறது. ‘வாகன அரக்கன்’ என்ற வார்த்தை உபர் நிறுவனத்திற்கு சரியாக பொருந்தும்.

Uber AUTO, UberBOAT, UberGO, UberMOTO, UberTAXI, UberFLASH, UberBike, UberEats, UberAIR என வகைவகையாக சேவையை துவங்கும் இந்நிறுவனம், செயலியை (App) கொண்டு அனைத்தையும் கண்ட்ரோல் செய்கின்றது.

100% ஆட்களே இல்லாமல் செயல்பட ஆளில்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. ஆளில்லா கார்களால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்ததால் நிறுத்தப்பட்டுவிட்டது.

விரைவில் Uber AIR

இந்நிறுவனம் UberAIR சேவையை மும்பை நகரத்தில் விரைவில் துவங்க உள்ளது. 2020ல் அமெரிக்காவிலும், 2023க்குள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.

மின்சாரம் மூலம் இயங்கும் பறக்கும் கார்கள் மற்றும் குட்டி விமானங்களை கொண்டு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியா போன்ற மக்கள்தொகை பெருகிவரும் நாடுகளில் பறக்கும் கார் மிகமிக அவசியம். சென்னை, மெரினா சாலையில் உள்ள கார் 300 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து அண்ணாநகரில் தரையிறங்கினால் எப்படியிருக்கும்.

5 நிமிடத்திற்குள் வீட்டிற்கு சென்றுவிடலாம். சென்னையைவிட மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் மக்கள்தொகை பெருக்கம் அதிகம். அங்கு இச்சேவை வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு வந்தபின்பு, சென்னையை எட்டி பார்க்கும்.

2025-க்குள் சொந்தமாக பறக்கும் கார்கள் வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பற பற வானம் தொட்டு பறக்கலாம் இந்தியாவில்…

3

உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் மெரினா இல்லை!

1
top 10 longest beach உலகின் நீளமான கடற்கரைகள் அர்பன் பீச் marina beach tamil

உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் மெரினா இல்லை!. டாப் 10 பீச். top 10 longest beach in the world tamil. marina beach tamil. அர்பன் பீச் என்றால் என்ன?

உலகின் நீளமான கடற்கரைகள் டாப் டென் லிஸ்டில் மெரினா கடற்கரை இல்லை. அர்பன் பீச் என்றால் என்ன? மெரினா எந்த வகை கடற்கரை?

ஆசியாவில் உள்ள பெரிய கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினா. இப்படி புகழ் வாய்ந்த மெரினா கடற்கரைக்கு இந்த பட்டியலில் இடம் இல்லை?

கீழே கொடுக்கப்பட்ட பட்டியல் உலகில் உள்ள கடற்கரைகள் நீளத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பத்து இடம் பிடித்த கடற்கரைகள் லிஸ்ட் இதோ.

10. லாங் பீச் (Long Beach)

இந்த பீச் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 28 Miles. இது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றாகும்.

9. 90 மைல் பீச் (Ninety Miles Beach)

இந்த பீச் நியூஸிலாந்தில் உள்ளது. பெயர் தான் 90 மைல் பீச். ஆனால் அதனுடைய உண்மையான நீளம் 54 மைல்கள் தான். ஓசியான நிலப்பரப்பில் அமைந்துள்ள மிக நீளமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.

8.ப்லயா நோவில்லேரோ பீச் (Playa Novillero Beach)

இந்த பீச் மெக்சிகோவில் உள்ளது. இதனுடைய நீளம் 55 மைல் கல் தொலைவு. தென்அமெரிக்காவின் மிக நீளமான கடற்கரை இது.

7.கிராண்ட் ஸ்ட்ராண்ட் பீச் (Grand Strand Beach)

இந்த பீச் அமெரிக்காவில் உள்ள சவுத் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் அதிக பயணிகள் வந்து செல்லும் மிகப்பெரிய கடற்கரை. இதன் நீளம் 60 Miles.

6.ப்ரசெர் இஸ்லாண்ட் பீச் Fraser Island beach

ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்றாவது மிக நீளமான கடற்கரை. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கடற்கடரையின் மொத்த நீளம் 75 Miles.

5. காக்ஸ் பஜார் பீச் (Cox’s Bazar beach)

ஆசியாவின் மிக நீளமான கடற்கரை. வங்காளதேசம் நாட்டில் தான் இந்த பெரிய கடற்கரை அமைந்துள்ளது. 78 Miles.

4. 90 மைல் பீச் விக்டோரியா (Ninety Mile Beach, Victoria)

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை. இதனுடைய பெயரும் நயன்டி மைல் பீச் தான். 94 Miles.

3. பட்ரி ஸ்லாண்ட் பீச் (Padre Island beach)

அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்கரை இதுவாகும். டாக்சஸ் மாகாணத்தில் கல்ஃப் ஆஃப் மெக்சிகோ கடல் பகுதியில் அமைந்துள்ளது. 113 Miles.

2. எய்ட்டி மைல் பீச் (Eighty Mile Beach)

ஆஸ்திரேலியாவின்  மிகப்பெரிய கடற்கரை. உலகின் மூன்று பெரிய கடற்கரைகளை கொண்ட பெருமை ஆஸ்திரேலியாவையே சேரும். 140 Miles.

1. ப்ரையா டூ கேஸினோ (Praia do Cassino)

உலகின் மிகப்பெரிய கடற்கரையைக் கொண்ட நாடு ப்ரேசில். இங்கு தான் உலகின் நீளமான கடற்கரை அமைந்துள்ளது. 158 Miles.

மெரினா கடற்கரை (marina beach)

நம்ம ஊர் மெரினாவின் மொத்த நீளம் 8 மைல் தொலைவு. இதன் நீளத்தின் அடிப்படையில் பார்த்தால் உலக அளவில் 25 லிருந்து 30க்குள் இடம் பெரும்.

ஆனால் மெரினா உலகின் இரண்டாவது பெரிய அர்பன் பீச் (urban beach). அதாவது நகர்புறத்தில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட பீச்.

இந்த வகை பீச்களில் வாட்டர் பார்க், ரிசார்ட், ஸ்விமிங் பூல், இலவச நுழைவு, குடைக்கு கீழ் அமர்தல், டேட்டிங், பொழுதுபோக்குதல் மற்றும் நகரத்தை ஒட்டியே உள்ள கடற்கரை.

இது போன்ற சிறப்பு அம்சங்கள் அமைந்த கடற்கரையைத்தான் அர்பன் பீச் என்று அழைப்பார்கள். அந்த வகையில் தான் மெரினா இரண்டாவது இடம் வகிக்கிறது.

பெரும்பாலனோர் உலகின் நீளமான கடற்கரைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

marina beach tamil. top 10 longest beach என்பதை விட டாப் 2, உலக அளவில் இரண்டாவது நகர்புற பீச் என்பதே சரி. top 10 longest river

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை
உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்
இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா? 
3

பவர்புல் லைட்வெயிட் ப்ரவ்சர் 2018

0
lightweight browsers, லைட்வெயிட் ப்ரவசர்

லைட்வெயிட் ப்ரவ்சர் நிறைய இருந்தாலும், அதில் எது சிறந்தது என நிறையப்பேருக்கு தெரியாது. ப்ளே ஸ்டோரில் சர்ச் செய்தால் எக்கச்சக்க ப்ரவ்சர் வகைகளை காட்டும். அதில் எது சிறந்த ப்ரவ்சர் என இப்போது பார்க்கலாம்.

குறைந்த ரேம் திறன் கொண்ட போன் வைத்திருப்பவர்கள் படாதபாடு படுவார்கள். ஏன் என்றால் அவர்கள் போனில் அதிக ரேம் பயன்பாடு உடைய ஆப்களை இன்ஸ்டால் செய்தால் போன் படுத்துவிடும். அவர்களின் குறைகளை போக்கவே சில ப்ரவ்சர்கள் வரப்பிரசாதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

LightWeight Browsers For Android (2018) – லைட்வெயிட் ப்ரவ்சர்

1.ஃபயர்பாக்ஸ் ராக்கெட் (Firefox Rocket) – size 2.7 MB

மொசில்லாவின்(Mozilla) புதியவகை ப்ரவ்சர். இது சில நாடுகளில் மட்டும் தான் உபயோகிக்க முடியும். இந்தியாவில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் சிறப்பு அம்சங்கள்

1.A Lightweight Web Browser, 2.Lightning Fast Browsing Speed, 3.Save Data – and Cash, 4.Goodbye, Stubborn Tracking Ads, 5.Private Browsing, 6.Tracking Protection, 7.Screenshot the Whole Page, 8.Save Phone Space, 9.Multiple Tab Browsing, 10.Parallel Download.

100,000 மேற்பட்டோர் இன்ஸ்டால் செய்துள்ளனர். 10,000க்கும் மேற்பட்டோர் சராசரியாக 4.6 ரேட்டிங் கொடுத்துள்ளனர். ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கும் மேற்பட்ட போன்களில் இதை உபயோகிக்கலாம். இதன் அளவு 2.7MB மட்டுமே.

2. ஒபேரா மினி (Opera Mini)

லைட்வெயிட் ப்ரவ்சர்

இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒரு ப்ரவ்சர். மிகவும் பிரபலமான ப்ரவ்சரும் கூட. இதன் சிறப்பு அம்சங்கள்

1.Block ads, 2.Video download, 3.Add to home screen, 4.Keep track of your data, 5.Multi-task, 6.Browse privately, 7.Smarter downloads, 8.Night mode, 9.Switch up your search, 10.Sync your devices.

100,000,000 மேற்பட்டோர் இன்ஸ்டால் செய்துள்ளனர். 5,239,955க்கும் மேற்பட்டோர் சராசரியாக 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

3. வியா ப்ரவ்சர் (Via Browser)

lightweight browser லைட்வெயிட் ப்ரவ்சர்

இது சீனர்களால் உருவாக்கப்பட்ட ப்ரவ்சர். மிகவும் குறைந்த எம்.பி. கொண்ட லைட்வெயிட் ப்ரவ்சராக உருவாக்கியுள்ளனர். இதன் சிறப்பு அம்சங்கள்

1.Date saving, 2.Ad block, 3.Privacy Protect, 4.Adds-on, 5.Night-mode, 6.Computer – mode, 7.Translate, 8.Search engine switch, 9.Web page save, 10.Intelligence picture show.

1,000,000 மேற்பட்டோர் இன்ஸ்டால் செய்துள்ளனர். 36,601க்கும் மேற்பட்டோர் சராசரியாக 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். ஆண்ட்ராய்டு 2.3 மற்றும் அதற்கும் மேற்பட்ட போன்களில் இதை உபயோகிக்கலாம். இதன் அளவு 785 kb மட்டுமே.

4. யூசி மினி (UC Mini)

lightweight browser லைட்வெயிட் ப்ரவ்சர்

இதுவும் சீனர்களால் உருவாக்கப்பட்ட ப்ரவ்சர். யூசி ப்ரவ்சரின் மினி வெர்சன். அதிக பயனாளர்களை கொண்டது. இதன் சிறப்பு அம்சங்கள்

1.Tiny Size, 2.Navigation Cards, 3.Fast Browsing, 4.Smart Downloading, 5.Incognito Browsing, 6.Night Mode, 7.Data Saving, 8.Ad Blocker

100,000,000 மேற்பட்டோர் இன்ஸ்டால் செய்துள்ளனர். 3,699,686க்கும் மேற்பட்டோர் சராசரியாக 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். ஆண்ட்ராய்டு 4.0 மற்றும் அதற்கும் மேற்பட்ட போன்களில் இதை உபயோகிக்கலாம். இதன் அளவு 3.6MB.

5. டால்பின் ஜீரோ (Dolphin Zero)

lightweight browser லைட்வெயிட் ப்ரவ்சர்

இதுவே குறைந்த அளவை கொண்ட லைட்வெயிட் ப்ரவ்சர் ஆகும். டால்பின் ப்ரவ்சரின் மினி வெர்சன். இதன் சிறப்பு அம்சங்கள்

1.Flash player, 2.Adblock (pop up blocker), 3.Multiple tabs bar, 4.Bookmarks & Add-ons sidebar, 5.Incognito/private browsing, 6.Personalized search, 7.Fast download, 8.Sync, 9.Clean UI and fast navigation, 10.Gesture, 11.Sonar, 12.Themes

1,000,000 மேற்பட்டோர் இன்ஸ்டால் செய்துள்ளனர். 23,613க்கும் மேற்பட்டோர் சராசரியாக 4.2 ரேட்டிங் கொடுத்துள்ளனர். ஆண்ட்ராய்டு 2.2 மற்றும் அதற்கும் மேற்பட்ட போன்களில் இதை உபயோகிக்கலாம். இதன் அளவு 534kb மட்டுமே.

3

மென்பொருள்கள் மூலம் கணினியில் டூப்ளிகேட் பைல்களை நீக்குவது எப்படி?

1
மென்பொருள்கள்

மென்பொருள்கள் உதவியுடன் கணினியில் டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்குவது?

வீட்டை சுத்தம் செய்வது போல் கணினியையும் தினம் தினம் சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில், தேவையில்லாத பைல்கள் குப்பைபோல் தேங்கிவிடும். மாதம் அல்லது வருடக்கணக்கில் தேங்கினால், அதை சுத்தம் செய்யவே பல நாட்கள் ஆகும். அதே நேரத்தில் ஒரே புகைப்படம் பல முறை உங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும், ஒரே மென்பொருள் பல முறை, வேறு வேறு ட்ரைவ்களில் காப்பி செய்யப்பட்டிருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து களை எடுப்பதற்கு, ஒரு யுகமே தேவைபட்டாலும் ஆச்சரியமில்லை.

இப்படி கணினியில் தேங்கிய டிஜிட்டல் குப்பைகளை எப்படி எளிதாக அகற்றுவது? இதற்காவே சில மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவரின் பெயர்களை கீழே வரிசை படுத்தியுள்ளேன். கீழே உள்ள மென்பொருள்களின் பெயர்களை கூகுளில் தேடினால், அவற்றை எப்படி டவுன்லோட் செய்வது என்று விளக்கம் தரப்பட்டு இருக்கும். அதில் கூறி உள்ளது போல் டவுன்லோட் செய்து பயன்பெறவும்.

மென்பொருள்கள் பெயர்கள்

CloneSpy
Auslogics Duplicate File Finder
Dupscout
Duplicate Finder
Advanced Duplicates Finder
Duplicate Cleaner Pro/Free [15 day trial]
Anti-Duplicate
Fast Duplicate File Finder

3

Tamil WhatsApp Message | மரண கலாய் – 1

0
Tamil WhatsApp Message

Tamil WhatsApp Message   | மரண கலாய் – 1

கீழே உள்ள ஒன்று முதல் பத்துக்குள் ஏதேனும் ஒரு எண்ணை எனக்கு அனுப்பவும், நீங்கள் எப்படி பட்டவர் என கூறுகின்றேன்.

1 – ஒன்று,

2 – இரண்டு,

3 – மூன்று,

4 – நான்கு,

5 – ஐந்து,

6 – ஆறு,

7 – ஏழு,

8 – எட்டு,

9 – ஒன்பது,

10 – பத்து.

Tamil WhatsApp Message | விடை

இன்னும் ஏராளமான தமிழ் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை மிஸ்டர் புயல் இணைய தளத்தில் உள்ளது. காதல் கவிதைகள், படங்கள், தத்துவங்கள், கதைகள், கலாய்ப்புகள் என வித விதமாக உள்ளன. உங்களுக்கு பிடித்தமானவற்றை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

இந்த இணையதளத்தை பற்றியும் உங்கள் நண்பர்களிடம் கூறுங்கள். இந்த இணையதளத்தில் வெளியாகும் படங்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், ஏதாவது பிழை இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். வாசகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படும்.

இன்னும் ஏதாவது வித்தியாசமான வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வேண்டுமானாலும் எங்களிடம் கூறுங்கள்.

3

தமிழ் வார்த்தை விளையாட்டு – 1

0
தமிழ் வார்த்தை விளையாட்டு

தமிழ் வார்த்தை விளையாட்டு. இன்றைய தலைமுறையினர் தமிழை மெல்ல மெல்ல மறந்துகொண்டு உள்ளனர். இதுபோன்ற நிலையில் அவர்களுக்கு, அவ்வபோது தமிழ் வார்த்தைகளை நினைவூட்டவே இந்த வார்த்தை விளையாட்டு. வாட்ஸ்ஆப், பேஸ்புக் மூலம் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் திறமைகளை பரிசோதிக்கலாம்.

தமிழ் வார்த்தை விளையாட்டு

கேள்வி:

படத்தில் உள்ள விடுபட்ட தமிழ் எழுத்துக்களை கண்டுபிடிக்கவும். ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையெனில் நீங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு, என்னிடம் தோற்றுவிட்டேன் என இந்த படத்துடன் ஸ்டேட்டஸ் இடவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதற்கான விடையை உங்களுக்கு சொல்லுவேன்.

டிப்ஸ்: ஒரு வார்த்தையில் முதலில் விடுபட்ட இரண்டு எழுத்துக்கள் தான் மீண்டும் வரும். முதல் இரண்டு வார்த்தைகளில் விடுபட்ட எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள். அடுத்த மூன்று வார்த்தைகளில் மெய் எழுத்தும், உயிர்மெய் எழுத்தும் அடுத்தடுத்து வரும்.

 

விடை:

1.அமலகமலம்

2.சடலபுடலம்

3.சட்டதிட்டம்

4.கண்டதுண்டம்

5.சட்டவட்டம்

1.அமலகமலம் என்றால் பசுவின் கோமியம் என்று பொருள்.

2.சடபுடலம் என்றால் பருத்த உடல் என்று பொருள்.

3.சட்டதிட்டம் என்றால் சட்ட விதிமுறைகள் என்று பொருள்.

4.கண்டதுண்டம் என்றால் பல துண்டுகள் என்று பொருள்.

5.சட்டவட்டம் என்றால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் என்று பொருள்.

3

Tamil WhatsApp Group | தமிழ் வாட்ஸ்ஆப் குழு

0

Tamil WhatsApp Group

தமிழ் வாட்ஸ்ஆப் குழுவை பற்றிய முழுவிவரம். முழுமையாக படித்த பின்பு குழுவில் இணையவும்

  • வாட்ஸ் ஆப் குழுவில் அட்மின்கள் மட்டுமே பதிவிட முடியும்.
  • தமிழ் சார்ந்த விஷயம்
  • தமிழ் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்
  • நடுநிலை செய்திகள்
  • தொழில்நுட்ப செய்திகள்
  • அரசியல்
  • அறிவில் வளர்ச்சி
  • கல்வி
  • மருத்துவம்
  • நகைச்சுவை போன்ற பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வழங்கப்படும்.

குழுவில் இணைய JOIN CHAT-யை கிளிக் செய்யவும்.

Tamil WhatsApp Group

குழுவில் இணைய இயலவில்லை அல்லது பாதுகாப்பு தன்மையுடன் எங்களுடைய செய்திகளை தனியாக வாட்ஸ்ஆப் மூலம் பெற விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்கள்  இந்த எண்ணிற்கு வாட்ஸ்ஆப் செய்யுங்கள்.

வேறு ஏதாவது தகவல்களுக்கு கீழே உள்ள லிங்க்யை கிளிக் செய்து வாட்ஸ்ஆப்பில் சேட் செய்யுங்கள்

 

தமிழ் பகிரி குழு. தமிழ் வாட்ஸ்ஆப் குழு எண்கள். வாட்ஸ்ஆப் சேட் நம்பர். வாட்ஸ்ஆப் செய்திகள். தமிழ் நியூஸ்பேப்பர் வாட்ஸ்ஆப்.

டெக்னாலஜி வாட்ஸ்ஆப் குரூப். சினிமா வாட்ஸ் ஆப் குரூப். நடிகைகள் வாட்ஸ்ஆப் குழு.

3