Home Blog Page 334

Teaser Mistake 2 0 | 2.ஓ டீசர் குறைகள்

0
Teaser Mistake 2 0

Teaser Mistake 2 0 | 2 பாயிண்ட் ஓ டீசரில் உள்ள குறைகள் ஓர் அலசல்.

ஷங்கர் படம் என்றாலே கிராபிக்ஸ் மிரட்டலுக்கு பஞ்சம் இருக்காது. அதேவேளையில் கிராபிக்ஸ் பணிகள் அரைகுறையாக உருவாக்கப்பட்ட காட்சிகள் அப்பட்டமாக தெரியும்.

2 பாயிண்ட் ஓ படத்தின் டீசரிலும் சில குறைகள் அப்பட்டமாக தெரிகின்றது. சிறுவர்கள் கூட எளிமையில் கண்டுபிடிக்கும் அளவிற்கு பெரிய பெரிய ஓட்டைகள் டீசரில் உள்ளன.

செல்போன் வெளிச்சம்

ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் நபரை சுற்றி திடீரென செல்போன்கள் சூழ்ந்துகொள்ளும். அவரை முன்பக்கம் காட்டும்போது அறை இருளில் இருக்கும். பின்பக்கம் காட்டும்போது வெளிச்சமாக இருக்கும். இது டீசரில் உள்ள மிகப்பெரிய ஓட்டை.

சிட்டி லோகோ

சிட்டி ரோபோவின் வலது கையில், சிட்டி என்ற லோகோ இடம் பெற்று இருக்கும். கட்டிடத்திற்குள் பறக்கும் காட்சியில், வலது கையில் அந்த லோகோ இருக்காது. இவை இரண்டும் டீசரில் உள்ள மிகப்பெரிய குறை.

ஒரு டீசரிலேயே மிகப்பெரிய குறைகள் உள்ளது. இது கிராபிக்ஸ் பணியின்போது எளிதாக கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்றே. அதைக்கூட கவனிக்காமல் டீசரை வெளியிட்டுள்ளனர்.

2.ஓ டீசர் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் குறைகளுடனே ரிலீஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரில் பறக்கும் செல்போன்:

காரில் செல்போனில் ஒருவர் பேசிக்கொண்டு இருப்பார். அவருடைய செல்போன் மட்டும் பறக்கும். அவர் பின்னால் பைக்கில் உள்ளவர்கள் செல்போன்கள் வைத்திருக்கவில்லையா? அல்லது அவர்களுடைய பாக்கெட்டில் இருப்பதால் மேக்னடிக் பவர் வேலை செய்யவில்லையா எனத்தெரியவில்லை.

தேவையில்லாத செல்பி:

கட்டிடத்தின் கீழ் இருக்கும் அனைவரும் காரணமே இல்லாமல் செல்பி எடுத்துக்கொண்டு இருப்பார்கள். செல்பி எடுப்பது என்பது வாடிக்கையே. அதற்காக கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லோரும் செல்பி எடுப்பது என்பது அரிதான ஒன்று.

பருந்தின் இறக்கை

பருந்தின் இறக்கை ஆடிக்கொண்டே இருக்கும். ஆனால் கட்டிடத்தின் உள்ளே இருந்து பார்க்கும்போது, பறப்பது போன்று இருக்காது. இறக்கைகள் அசையாமல் கிராபிக்ஸ் மூலம் இயங்குகின்றது என்பது அப்பட்டமாக தெரியும்.

500 கோடி செலவு

கிராபிக்ஸ் படம் என்றாலே குறைகள் இருப்பது சகஜம் தான். ஆனால் டீசரிலேயே இத்தனை குறைகள் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. கிராபிக்ஸ் பணிக்காக 500 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர், கிராபிக்ஸ் பணிகளை கவனமுடன் கையாளும் தொழில்நுட்ப இயக்குனர்களை உடன்வைத்து கொள்வதே அவருடைய படங்களுக்கு நன்மை.

3

2.ஓ டீசர் – ரசிகர்களை ஏமாற்றிய ஷங்கர்

1
2.ஓ டீசர்

2.ஓ டீசர் விநாயகர் சதுர்த்தியான நேற்று யூடியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

2.ஓ தமிழ் டீசர், இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. இந்த டீசர் பலரால் பாராட்டப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

காரணம், இது ஒரு வருடம் முன்பே வெளியிடப்பட்ட டீசர். துபாயில் நடந்த 2.0 இசை வெளியீட்டின் போதே, இந்த டீசர் திரையிடப்பட்டு விட்டது.

திரையிட்டபோதே, மொபைலில் படம் பிடிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து இணையத்திலும் கசிந்தது. அந்த டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட ஷங்கர் ஒரு வருடம் எடுத்துக்கொண்டு உள்ளார்.

புதிய காட்சிகளுடன் 2.o டீசர் வெளியாகும் என நினைத்த ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றம். இருப்பினும் 3D டீசரை திரையரங்குகளில், ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிப்பது ஆறுதலான விஷயம்.

விரைவில் சங்கர் படத்தின் ட்ரைலரை புதிய காட்சிகளுடன் வெளியிட வேண்டும் என ரசிகர்களை அன்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

3

விஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு

0
விஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு

விஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு என்றும் விஜய் மல்லைய்யா நாட்டைவிட்டுத் தப்ப நினைத்தது பாஜகவிற்கு முன்பே தெரியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தப்பி ஓட்டம்:

வங்கியில், 9000 கோடி கடன்பெற்று நாட்டைவிட்டு தப்பி ஓடியவர், தொழிலதிபர் விஜய் மல்லைய்யா. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

நீரவ்மோடியும், விஜய் மல்லைய்யா பாணியில் கடன்பெற்று நாட்டைவிட்டு வெளியேறினார். இது பாஜகவின் அரசியல் எதிர்காலத்திற்கு மேலும் சறுக்கலாக அமைந்துவிட்டது.

டீலிங் பேசிய ஜெட்லி:

தேர்தல் நெருங்குவதால், மல்லைய்யாவை இங்கிலாந்திலிருந்து, இந்தியா கொண்டுவர பாஜக அரசு தீவிரம் காட்டிவருகின்றது. இதனால், ஆத்திரமடைந்த விஜய் மல்லைய்யா, அருண் ஜெட்லியிடம் டீலிங் பேசியதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

சிபிஐயின் வற்புறுத்தல் காரணமாக, வங்கிகள் விஜய் மல்லைய்யா மீது புகார் அளித்துள்ளது. இதன்மூலம், கைது செய்யப்பட இருப்பதை அறிந்தே அருண் ஜெட்லியிடம், மல்லைய்யா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால், பேச்சுவார்த்தை நடந்த இரண்டே நாளில் மல்லைய்யா, இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

மல்லைய்யாவை பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்ததே பாஜக அரசு தான். தேர்தல் நெருங்குவதால் மல்லைய்யாவை இந்தியா கொண்டுவரத் துடிப்பதும் பாஜக அரசு தான்.

இதன் காரணமாகவே, விஜய் மல்லைய்யா ஆத்திரத்தில், அருண் ஜெட்லியுடன் பேசிய டீலிங்கை பற்றி மறைமுகமாக தெரிவித்துள்ளார். என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விஜய் மல்லைய்யா வாய் திறந்தால், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் எனவும் இவ்விசயத்தை ஊதிப் பெரிதுபடுத்தத் துவங்கியுள்ளனர்.

அருண் ஜெட்லி மறுப்பு:

ஆனால், அருண் ஜெட்லி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் மல்லைய்யா கடனை அடைப்பது பற்றி என்னிடம் பேசினார். நீங்கள் வங்கியிடமே இதைப்பற்றி பேசிக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டேன். இந்த சந்திப்பு வெறும் இரண்டு நிமிடங்கள் தான் நடைபெற்றது எனத்தெரிவித்துள்ளார்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘மல்லைய்யாவிடம் அருண் ஜெட்லி 15 நிமிடங்கள் பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

பலி ஆடு:

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு விஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

3

சர்தார் வல்லபாய் படேல் சிலை; சீனாவின் சொத்து!

0
சர்தார் வல்லபாய் படேல் சிலை

சர்தார் வல்லபாய் படேல் சிலை, உலகின் மிகப்பெரிய சிலையாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்கின்றார்.

சர்தார் வல்லபாய் படேல் சிலை, குஜராத்தின் நர்மதா அணை அருகே, 182 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட உள்ளது. இதனை 2000 கோடி செலவில் உருவாக்கியுள்ளனர். இதுவே இனி உலகின் மிக உயரமான சிலை.

இதுவரை சீனாவின் புத்தர் சிலையே, உலகின் உயரமான சிலையாக இருந்தது. 128 மீட்டர் சிலையின் உயரம் மட்டும்.

படேல் சிலை இந்தியாவில் உருவாகியது. ஆனால், இந்தியர்கள் உருவாக்கவில்லை. இந்த சிலையை உருவாக்கும் பணியில் 700க்கு மேற்பட்ட சீனர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவந்த பாஜக அரசே, வெளிநாட்டினரை வைத்து சிலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சிலை இந்தியாவில் உருவாகியிருந்தாலும், பெரும் பங்கு சீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிலை வடிப்பாளர் ராம் வி.சுந்தர், படேலின் சிலையின் அச்சு மாதிரிகளை மட்டுமே உருவாக்கி கொடுத்துள்ளார். சிலையை சீன தொழில்நுட்பங் கொண்டே உருவாக்கியுள்ளனர்.

சீனர்களை பயன்படுத்தியதால், இந்திய கட்டிடக் கலைஞர்களின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. படேல் சிலையால் இந்திய கட்டிடக்கலைஞர்களுக்கு எந்த பெருமையும் இல்லை.

மேலும், மகாராஸ்டிரா பாஜக அரசு 4000 கோடி செலவில், 212 மீட்டர் உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை, அரபிக்கடலில் நிறுவ உள்ளது. இது சீனாவின் புத்தர் சிலை மற்றும் பீடத்தை விட உயரமானது. 208 மீட்டர்.

இதன்மூலம், இந்தியா உயரமான சிலைகளை கொண்ட நாடாகும். இந்த சாதனை எத்தனை வருடம் நிலைக்கும்? நேற்று சீனா. இன்று இந்தியா. நாளை வேறு ஒரு நாடு.

இந்தியாவின் பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ள நிலையில், இவ்வளவு பொருட்செலவில் இரண்டு சிலைகள் தேவைதானா?

3

குழந்தை பிறந்தவுடன் கடத்தப்படலாம்? கர்ப்பிணிகளே உஷார்!

0
குழந்தை பிறந்தவுடன் கடத்தப்படலாம்

குழந்தை பிறந்தவுடன் கடத்தப்படலாம்? கைக்குழந்தைகளை கடத்தி மில்லியன் ரூபாய்களுக்கு விற்கப்படுவதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் தினம் தினம் பிறந்தவுடன் குழந்தை காணமல்போவதாக வழக்குகள் பதிவாகின்றன. ஒரு நாளைக்கு இந்தியா முழுவதும் 15 முதல் 25 குழந்தைகள் காணமல்போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் எதற்காக கடத்தப்படுகின்றனர்? ஏன் கடத்தப்படுகின்றனர்? இவர்கள் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவை குறித்து பல அதிர்ச்சி தகவலை சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பாலியல் தொழில்

குழந்தைகளை கடத்தி, சிறுவயது முதலே பாலியல் தொழிலில் ஈடுபட பழக்குகின்றனர். மும்பை போன்ற ரெட்லைட் நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர்.

பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை மட்டுமே கடத்துகின்றனர். பாலியல் புரோக்கர்களிடம் சிக்கும் குழந்தைகள், ஒரு வழிப்பாதையில் செல்வதற்கு சமம். சென்றால் சாகும்வரை திரும்பிவர முடியாது.

பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் குழந்தைகள் பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறனர்.

பிச்சை எடுக்கும் குழந்தைகள்

ரோட்டோரம், தெருவோரம், சிக்னல் என மாநகரங்களில் நிறைய குழந்தைகள் பிச்சையெடுப்பார்கள். இவர்கள் பின்னணியை விசாரித்தால் பெற்றோர் என பிச்சைகாரர்கள் சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

ஆனால், இவர்களின் உண்மையான பெற்றோர்கள் யார் என்று அவர்களுக்கே தெரியாது. டி.என்.ஏ. பரிசோதனை நிகழ்த்தினால் 75 சதவீதம் நெகடிவ் ரிசல்ட் கிடைக்கும்.

இதுபோன்ற குழந்தைகள், பிறந்தவுடன் கடத்தப்பட்டிருக்கும். நாங்கள் தான் பெற்றோர்கள் என கடத்தல் கும்பல், குழந்தைகளை பிச்சை எடுக்கவைத்து; அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசாக வாழ்வார்கள்.

பரிசோதனை விலங்குகள்

புதிதாக கண்டுபிடித்த மருந்துகள் முதலில் விலங்குகளுக்கு கொடுத்துப் பரிசோதிக்கப்படும். பிறகு மனிதனுக்கு கொடுத்துப் பரிசோதிக்கப்படும். இதற்காக பல கோடிகளை மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் செலவு செய்யும்.

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை பரிசோதிக்க எந்த பெற்றோராவது குழந்தைகளை விற்பார்களா? இதுபோன்ற மருந்துகளை சட்டத்திற்கு புறம்பாக பரிசோதனை செய்வதாக தகவல் கசிந்துள்ளன.

கடத்தல் குழந்தைகளை கொண்டு பரிசோதிப்பதால் செலவும் குறைவு, இறந்தாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை. இதற்காக பல மில்லியன் ரூபாய்க்கு குழந்தைகள் விற்கப்படுகின்றார்கள்.

தீவிரவாதம் மற்றும் நரபலி

குழந்தைகளை நரபலி கொடுப்பதற்காக சில மூடர்கள், அவ்வப்போது கடத்துவதை நாம் நிறையவே கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் கடத்தப்பட்டு சிறுவயது முதலே மூளைச்சலவை செய்து தீவிரவாதியாகவும் மாற்றப்படுகின்றனர்.

குழந்தைகள் எப்படி கடத்தப்படுகின்றனர்?

கண்காணிப்பு குறைவாக உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில், இந்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. குழந்தை பிறந்த சிலமணி நேரங்களிலேயே கடத்தப்படுகின்றன. இதனால், பெற்றோரே சில நாட்களில் குழந்தையின் முகத்தை மறந்து விடுகின்றனர். குழந்தைகளின் முகத்தோற்றமும் சில நாட்களில் மாறிவிடும். இது கடத்தல்காரர்களுக்கு வசதியாக இருக்கும்.

மேலும், வீட்டின் வெளியே விளையாடும் குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகள், தனிமையில் இருக்கும் குழந்தைகள் என கடத்தல் கும்பல் கண்ணில் பட்டவுடன், கடத்தலுக்கு வசதியான இடமானால் யோசிக்காமல் கடத்தலில் ஈடுபடுவார்கள்.

இப்படி கடத்தப்படும் குழந்தைகள், மொட்டையடிக்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவு மாற்றப்பட்டு விற்கப்படுவார்கள். சர்வேதச மாப்பியாவிடம் செல்லும் குழந்தைகள் பல இடைத்தரகர்கள் மூலம் கைமாற்றப்படுகின்றது. இதுபோன்ற சம்பவங்கள் கப்பல்கள் மூலமே நிகழ்த்தப்படுகின்றது.

கர்ப்பிணிகளே உஷார்!

நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால், குழந்தை பிறந்தவுடன் சில நிமிடங்கள் கூட தனியாக மருத்துவமனைகளில் இருக்கவேண்டாம். தனியாக இருக்கும்நிலை வந்தால் கண் அசராமல் விழிப்புடன் இருக்கவும்.

குழந்தையை முந்தானையுடன் முடிந்துகொண்டு உறங்கிய, ஒரு தாயின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உங்களை சுற்றி மருத்துவமனை உழியர்போன்றே போலியான ஆட்கள் நடமாடலாம். உடல்நலம் சரியில்லை என கடத்தல் கும்பல் உங்கள் அருகிலேயே இருக்கவும் வாய்ப்புண்டு.

குழந்தையை உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் தவிர வேறு யார் பொறுப்பிலும் விடவேண்டாம். எந்த நிமிடம் வேண்டுமானாலும், பத்து மாதம் பேணிப்பாதுகாத்து பெற்றெடுத்த குழந்தை காணமல்போக வாய்ப்பு உள்ளது.

நீங்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது எவ்வளவு கவனமாக இருந்தீர்களோ, அதைவிட நூறு மடங்கு கவனத்துடன் குழந்தை பிறந்தவுடன் இருப்பது அவசியம்.

3

Tamil WhatsApp Status | விவேகானந்தர் பொன்மொழிகள்

0
tamil whatsapp status vekananda quotes

Tamil WhatsApp Status விவேகானந்தரின் பொன்மொழிகள்

நரேந்திரநாத் தத்தா சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர். தோல்வியில் துவண்டுபோனவர்கள், விவேகானந்தரின் பொன் மொழிகளை படியுங்கள். அவருடைய பொன் மொழிகளுக்கு, யானை பலத்தை கொடுக்கும் வல்லமை உண்டு.

விவேகானந்தர் 19ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மீகவாதியாக விளங்கியவர். மதங்கள் அனைத்தும், ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்ற ராமகிருஷ்ணரின் கொள்கையால் அவரின் சீடராக மாறினார்.

தமிழர்களே, தமிழகத்தில் இருந்து பரந்துவிரிந்து, இவ்வுலகில் பல மதங்களை தோற்றுவித்தவர்கள் என்பது விவேகானந்தரின் கருத்து. உலக அளவில் புகழ்பெற்ற அவருடைய பொன்மொழிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

[Modula id=’1′]

tamil whatsapp status vekananda quotes விவேகானந்தர் பொன்மொழிகள்

tamil whatsapp status vekananda quotes விவேகானந்தர் பொன்மொழிகள்

tamil whatsapp status vekananda quotes விவேகானந்தர் பொன்மொழிகள்

tamil whatsapp status vekananda quotes விவேகானந்தர் பொன்மொழிகள்

tamil whatsapp status vekananda quotes விவேகானந்தர் பொன்மொழிகள்

tamil whatsapp status vekananda quotes விவேகானந்தர் பொன்மொழிகள்

tamil whatsapp status vekananda quotes விவேகானந்தர் பொன்மொழிகள்

இந்த இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். வியாபார நோக்கத்துடன்  இந்தப்புகைப்படங்களை மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த இணையதளத்தில் மேலும் பல தகவல்கள் பெற எங்கள் சமூக வலைதள பக்கத்தை பின்தொடரவும். இந்த இணையதளத்தை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

3

ரஜினியின் பேட்ட: சன் பிக்சர்ஸ் மேஜிக் எங்கே?

0
ரஜினியின் பேட்ட

ரஜினியின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதுவரை 16 லட்சம்பேர் பார்த்துள்ளனர்.

ரஜினிகாந்த் 2.ஒ முடிந்த கையோடு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கின்றார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள், மெழுவர்த்தி ஸ்டாண்டை ஆக்ரோசமாக வீசியபடி நடந்து வருகின்றார். இசை கீபோர்டுகள் நொறுங்குகின்றன. பேப்பர் தாள், மொபைல், கண்ணாடி, கத்தி ஆகியவை பறக்கின்றன.

சன்பிக்சர்ஸ் வெளியிட்ட முதல் படம் காதலில் விழுந்தேன். நிறைய புதுமுகங்களுடன் வெளிவந்த இப்படத்தை, மீண்டும் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பி சூப்பர் ஹிட் படமாக மாற்றினர்.

கருணாஸ் நடிப்பில் வெளிவந்த ‘திண்டுக்கல் சாரதி’ படமும் அதே பாணியில் வெற்றிப்படமாகியது. ஆனால் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்தவர்கள் எண்ணிக்கை மிகமிக  குறைவு என்பது அதிர்ச்சியளிக்கின்றது.

இதுவரை பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரை 16 லட்சம்பேர் பார்த்துள்ளனர். இதை சன்டிவியின் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். அந்த சேனலின் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 16 லட்சம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் சேனலின் சப்ஸ்கிரைபர் மட்டுமே போஸ்டரை பார்த்துள்ளனர். சன்பிக்சர்ஸ் இப்படத்தை சரியாக புரோமோஷன் செய்யவில்லை. மேலும், 2.ஒ டீசர் அறிவிப்பை சங்கர் ட்விட்டரில் நேற்று வெளியிட்டார்.

இவற்றைவிட ரஜினியின் அரசியல் அறிவிப்பு, தெளிவில்லாத அரசியல் பேட்டிகள் மூலம் மக்கள் செல்வாக்கை ரஜினி இழந்துள்ளார். இதன் காரணமாக, மோஷன் போஸ்டரின் பார்வையாளர்கள் வெகுவாக குறைந்துவிட்டனர். .

3

அதிமுகவின் பவர்; பாஜகவின் வியூகம்!

0
அதிமுகவின் பவர்

அதிமுகவின் பவர் என்ன? தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவின் செல்வாக்கு என்ன? என அறிந்துகொள்ள பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளது.

இந்தியப் பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளே எப்படி நுழைவது என பாஜக பலவழிகளில் முயன்று வருகின்றது.

தற்போதைய எடப்பாடி அரசு பாஜகவிற்கு சாதகமாக நடந்துகொள்கின்றது. இதனால், அதிமுகவின் செல்வாக்கு நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகின்றது. தனிச்சையாக செயல்பட திறனற்ற அரசு என விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சி.பி.ஐ. ரெய்டு நடந்துள்ளது. சி.பி.ஐ. திடீரென சசிகலா பக்கமும் திரும்பியுள்ளது. இதனால் டி.டி.வி.யின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் குறையும். இதன்மூலம், தமிழக இடைதேர்தல்களில் யாருக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது எனத்தெரிந்துவிடும்.

இடைதேர்தலில் திமுகவின் பவர் என்ன? எடப்பாடி பவர் என்ன? தினகரன் நிலை என்ன? என பாஜக அறிந்துகொள்ளும். இது பாஜகவிற்கு பாராளுமன்றத் தேர்தல் வியூகத்தை வகுக்க உதவும்.

திமுகவுடன் கூட்டணிவைக்க பாஜக முயன்று, முடியாமற்போனது. எனவே திமுகவை உடைக்க தென்மாவட்டங்களில் அழகிரியை பயன்படுத்த பாஜக முயல வாய்ப்புண்டு. தொகுதிக்கு 10,000 ஓட்டுகள் பிரிந்தால் கூட திமுகவுக்கு பின்னடைவுதான்.

மேலும், தமிழக நடிகர்களை கட்சியில் இணைத்து எழுச்சியை ஏற்படுத்தவும் பாஜக முயன்று வருகின்றது. பாஜகவின் தூண்டுதலில், ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளார் என விமர்சனங்களை சந்தித்தார்.

மோடி எப்படியாவது மீண்டும் ஆட்சிக்குவர முயல்கின்றார். தமிழகத்தில் காலூன்றினால், தென்னிந்தியாவில் கோலோச்சியதற்கு சமம். அதற்காக தமிழகத்தை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.

3

கூகுள் க்ரோம்: அசரவைக்கும் மாற்றங்கள்!

1
கூகுள் க்ரோம்

கூகுள் க்ரோம் ப்ரவ்சர் உருவாகி பத்து வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

கூகுள் க்ரோம் இதுவரை 69 வெர்சன்களை வெளியிட்டுள்ளது. புதிதாக வெளிவந்துள்ள ப்ரவ்சரில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன எனப் பார்க்கலாம்.

கடவுச்சொல் உருவாக்கி (Password Generator):

ஏதேனும் ஒரு இணையதளத்தில் லாக்இன் செய்யும்போது அந்த கடவுச்சொல்லை சேமிக்கவா எனக்கேட்கும். நாம் அடிக்கடி லாக்இன் செய்யும்போது மறக்கமாட்டோம்.

ஒருவேளை எப்போதாவது பயன்படுத்தும் இணையதளங்களின் கடவுச்சொல்லை மறக்காமலிருக்க இவ்வசதி உதவும். இவ்வசதியுடன் கூடுதலாக பாஸ்வேர்ட் ஜெனரேட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் புதியதாக சைன்இன் செய்யும்போது, நீங்கள் சேமித்துள்ள பாஸ்வேர்டுகளை உங்களுக்கு நினைவூட்டும். சேமித்துள்ள பாஸ்வேர்டுகளைப்போன்று உருவாக்க அறிவுறுத்தும்.

ஸ்மார்ட் ஆன்சர் (Smart Answer):

smart answer google chrome

நீங்கள் கூகுள் சர்ச் பாரில் ஏதாவது டைப் செய்யும்போது, நீங்கள் தேடமுயன்ற வார்த்தை உடனே தோன்றிவிடும். இது பழைய வசதி. தற்பொழுது வார்த்தையை டைப் செய்யும்போதே, அதற்கான விடையை கீழே காட்டிவிடும்.

வானிலை அறிக்கை, திரைப்படத்தை பற்றிய தகவல், படத்தின் டியுரேசன் என நீங்கள் சர்ச் செய்தால், புதிய பக்கத்திற்குச் செல்லாமல் சர்ச்பாரிலேயே காட்டிவிடும்.

எழுத்துப்பிழை நீக்கும் வசதி:

tamil spelling check google browser

தமிழ்மொழி உட்பட பல மொழிகளின் எழுத்துப்பிழைகளை நீக்கும் வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. ஏதாவது தவறாக டைப் செய்தால் அதை சிவப்புக் கோடிட்டுக்காட்டும். ஆனால், இவ்வசதி இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.

சரியான வார்த்தைகளையும் தவறு எனக்காட்டும். அப்படி காட்டினால், அதை ரைட் கிளிக் செய்து டிக்சனரியில் புதிதாக சேர்த்துக்கொள்ளலாம். மீண்டும் அவ்வார்த்தையை டைப் செய்தால் சரியானதாக எடுத்துக்கொள்ளும்.

3

Best Tamil YouTubers | தமிழ் யூடியூப் சேனல் – Series Intro

1
Best Tamil YouTubers, சிறந்த தமிழ் யூடியூப் சேனல்கள்

Best Tamil YouTubers அல்லது சிறந்த தமிழ் யூடியூப் சேனல்கள் பற்றி இத்தொடரில் விரிவாகப்பார்க்கலாம். சேனல்கள் எதை பற்றியது, எவ்வகையில் பயன்தரும் என்பதை பற்றிய விரிவான அலசல்.

உலக அளவில் சமூக வலைதளங்களில், அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ்மொழி முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது. நாளுக்குநாள் தமிழின் பயன்பாடு மெருகேறிக்கொண்டே வருகின்றது.

பத்து வருடங்களுக்குமுன் கூகுள் ட்ரான்ஸ்லேட் செய்தால் நமக்கே கடுப்படிக்கும். காரணம், தமிழை தவறாக ட்ரான்ஸ்லேட் செய்யும். தற்பொழுது 95% சரியாக ட்ரான்ஸ்லேட் செய்கின்றது.

மேலும் தமிழுக்கென எழுத்துருக்களை (Font) உருவாக்கியுள்ளது. ஒரு அமெரிக்க நிறுவனம், தமிழை இந்த அளவிற்கு வளர்க்க காரணம், வணிக நோக்கம். இருப்பினும் தமிழ் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்நாட்டில், தமிழக அரசின் வேகம் இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. காரணம், இங்குள்ள மக்கள் தமிழ் பேசவில்லை, தமிழில் எழுதவில்லை என்பது அல்ல.

முகநூலில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழும் ஒன்று. கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில், செம்மொழி மாநாடு, தமிழ் இணையம் குறித்த திட்டம், தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவது போன்றவை செயல்படுத்தப்பட்டன.

ஆனால் அத்திட்டங்கள் எல்லாம் சில வருடங்களிலேயே காணமல்போனது. தமிழ்மொழியின் மார்கெட் குறித்து கூகுளுக்கு புரிந்துவிட்டது. அதனாலேயே தமிழை மெருகேற்றி வருகின்றது. தமிழை மட்டுமல்ல உலகில் பலமொழிகளை மெருகேற்றிக்கொண்டு உள்ளது.

சமூக வலைதள புரட்சியில் தமிழ் அதிவேகமாக முன்னேறி வருகின்றது. வருவாய் ஈட்ட முடியும் என்பதால், பல வலைத்தளங்கள் மற்றும் பல யூடியூப் சேனல்கள் உருவாகியுள்ளன.

அவற்றில் சிறந்த சேனல்கள் எது? Best Tamil YouTubers யார் யார் என்பதை பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்க்கலாம்.

3