Home Blog Page 333

மழையின் போது மண்வாசம் ஏன் உருவாகின்றது தெரியுமா?

0
மழையின் போது மண்வாசம்

மழையின் போது மண்வாசம் ஏன் உருவாகின்றது தெரியுமா? டிம் லோகனின் ஆராய்ச்சி முடிவுகள்.

மழையின் போது ஒரு வகையான மண்வாசனை உருவாகும். உண்மையில் அது மண்ணின் வாசம் கிடையாது. ஒரு சில பாக்டீரியாக்களால் உருவாகும் வாசனையாகும்.

இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. இறுதியாக, டிம் லோகன் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியல்  பேராசிரியர், ஆராய்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டார்.

அந்த மண்வாசனையை, பெட்ரிகோர் (Petrichor) எனக் குறிப்பிட்டுள்ளார். பெட்ரிகோர் என்றால், மழையின்போது உருவாகும்  மண்வாசனை என்று பொருள்.

வறண்ட நிலம் அல்லது நீண்ட நாட்களுக்கு பிறகு மழையானது, பூமியின் நிலப்பரப்பை அடையும்போது, இந்த வகையான மண்வாசனை உருவாகும்.

ஸ்ட்ரெப்டோமைசிஸ் மற்றும் சைனோ பாக்டீரியா மூலம் ஏற்படும் வேதியியல் வினைகளால், பெட்ரிகோர் வாசம் உருவாகிறது. இந்த வேதியியல் மாற்றத்திற்கு ஜியோஸ்மின் (Geosmin) என்று பெயர்.

ஸ்ட்ரெப்டோமைசிஸ் மற்றும் சைனோ பாக்டீரியா இவை மண்ணில் கலந்திருக்கும் பாக்டீரியா. இறந்த உயிர்களை சிதைக்கும் வேலைகளிலும் இவ்வகை பாக்டீரியா ஈடுபடும்.

இவ்வகை பாக்டீரியா மீது தண்ணீர் படும்போது, உடனே வேதிவினை நடைபெற்று பெட்ரிகோர் வாசத்தை உருவாக்குகின்றது.

வாசல் தெளிக்கும்போது கூட பெட்ரிகோர் வாசத்தை உடனே உணர முடியும்.

3

7 சர்வேதேச நடிகர்களை வீழ்த்தி விருது வென்ற விஜய்

0
7 சர்வேதேச நடிகர்களை

7 சர்வேதேச நடிகர்களை வீழ்த்தி விருது வென்ற விஜய். IARA விருதுகள் 2018-ம் ஆண்டிற்கான சர்வேதச சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்.

IARA சிறந்த நடிகருக்கான விருதுகளில், மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர். இதில், மக்களின் வாக்குகளை அதிகம் பெற்று நடிகர் விஜய் விருது வென்றுள்ளார்.

ஐரா 2018 சிறந்த நடிகருக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள் முழுவிவரம் பின்வருமாறு:-

7 சர்வேதேச நடிகர்களை

1. David Tennant (Don Juan in Soho)

Don Juan in Soho இது ஒரு பிரிட்டிஸ் நாடகம். அந்த நாடகத்தில் நடித்த டேவிட் டெனன்ட் என்ற நடிகர் இந்த விருதிற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

2. John Boyega (Star Wars:The Last Jedi)

‘Star Wars:The Last Jedi’ இது ஒரு அமெரிக்க படம். இப்படத்தை ரியான் ஜான்சன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடித்த ‘ஜான் பாயகா’ லண்டன் நடிகர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

3. Chris Attoh (Swing)

‘க்ரிஷ் அட்டோக்’ கானா நாட்டை சேர்ந்த நடிகர். ‘ஸ்விங்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக IARA விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

4. Jack Perry Jones (Bang)

‘பேங்’ இது ஒரு பிரிட்டிஸ் டிவி சீரியஸ். இதில் நடித்த ‘ஜாக் பெர்ரி ஜான்ஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5. Daniel Kaluuya (Get Out)

‘கெட் அவுட்’ இது ஒரு அமெரிக்கன் ஹாரர் படம். சிறந்த ஒரிஜினல் ஸ்கிரீன் ப்ளேவுக்காக ஆஸ்கர் விருது வென்றது. அப்படத்தில் நடித்த ‘டேனியல்  கலுயா’ சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. Zack Morris (Eastenders)

‘ஈஸ்டேண்டர்ஸ்’ இது ஒரு பிரிட்டிஸ் டிவி தொடர். இத்தொடரில் நடித்த ‘ஜாக் மோரிஸ்’, IARA விருதிற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

7. Jamie Lomas (Hollyoaks)

‘ஹாலியோக்ஸ்’ இது சேனல் 4-ல் வெளியாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. இதில் நடித்த ‘ஜேமி லோமஸ்’, IARA விருதிற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

8. Vijay Joseph (Mersal)

மெர்சல். இப்படம் ‘அட்லி’ இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இப்படத்தில் நடித்த ‘ஜோசப் விஜய்’, மேலே உள்ள ஏழு நடிகர்களையும் ஓரம் கட்டிவிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

3

விஜய் தேவரகொண்டா vs விஜய் சேதுபதி

0
விஜய் தேவரகொண்டா vs விஜய் சேதுபதி

விஜய் தேவரகொண்டா vs விஜய் சேதுபதி. ஒரே நேரத்தில் இரண்டு விஜய் படங்கள் மோத உள்ளன. வரும் அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதியில் இரண்டு விஜய் படங்கள் ரிலீஸ்.

விஜய்சேதுபதி நடிப்பில் ’96’ படம் வரும் அக்டோபர் 4-ல் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ட்ராவல் போட்டோகிராப்பராக விஜய்சேதுபதி நடித்துள்ளார். த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடித்த ‘நோட்டா’ படம் அக்டோபர் 5ல் வெளியாக உள்ளது. இப்படம் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் நேரடி தமிழ் படம் இது. நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுக நடிகராகியுள்ளார். அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றவர்.

தெலுங்கில் பேசி தமிழ் ரசிகர்களை கவர்ந்த தேவரகொண்டா, தற்பொழுது தமிழில் பேசி நடித்துள்ளார். இதனால் அர்ஜுன்ரெட்டி படத்தின் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

அக்டோபர் 4,5 ஒரே நேரத்தில் இரண்டு விஜய் படங்கள் வெளிவரவுள்ளது. ரசிகர்களின் ஆதரவு விஜய்சேதுபதிக்கா, விஜய்தேவரகொண்டாவிற்கா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

3

விராட் கோலி, அனுஷ்கா மோதல் – படம் ரிலீஸ்

0
விராட் கோலி, அனுஷ்கா மோதல்

விராட் கோலி, அனுஷ்கா மோதல். விராட் கோலி அறிமுகமாக நடிக்கும் ‘ட்ரைலர் தி மூவி’ மற்றும் அனுஷ்கா ஷர்மா நடித்த ‘சுய் தாகா’ ஒரே நாளில் ரிலீஸ்.

விராட்கோலி, சற்றுமுன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு ட்வீட் தட்டி எல்லோரையும் குழப்பிவிட்டுள்ளார். பாலிவுட்டில் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அறிமுகமாகும் ‘ட்ரைலர் தி மூவி’ என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில், வரும் 29-ம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. trailerthemovie.com என்ற இணைய முகவரியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது நிச்சயம் திரையில் வெளியாகும் படமாக இருக்காது. குறும்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. trailerthemovie.com இணையத்தில் இக்குறும்படம் வெளியிடப்படலாம்.

மேற்கண்ட இணையத்தில் விராட்கோலி துப்பாக்கியுடன் உள்ள போஸ்டர் உள்ளது. எனவே திரில்லர் குறும்படமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

அதேநாளில், அனுஷ்காஷர்மா நடித்த ‘சுய்தாகா’ என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விராட்கோலியும் அதேதேதியில் தன்னுடைய படம் ரிலீசாகும் எனக்கூறியதால் ஒரே நாளில் இருவரும் மோதிக்கொள்ள உள்ளனர்.

3

வெள்ளை நிறம் பறவைகளுக்கு எச்சரிக்கை மணி

0
வெள்ளை நிறம் பறவைகளுக்கு எச்சரிக்கை மணி நேசனல் ஒயில்ட் லைப் ரிசர்ச் சென்டர்

வெள்ளை நிறம் பறவைகளுக்கு எச்சரிக்கை மணி என நேசனல் ஒயில்ட் லைப் ரிசர்ச் சென்டர் தெரிவித்துள்ளது. விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது?

பஸ், கார், சைக்கிள், பைக், லாரி மற்றும் மெட்ரோ ட்ரைன் வரை ஜிகுஜிகு என ஜிகுனா தடவியதுபோல் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் நம்மை கடந்து செல்லும்.

ஆனால் ஒரே ஒரு ஊர்தி மட்டும் பல வருடங்களாக ஒரே கலரில் நம்மை கடந்து செல்வதை கவனித்தது உண்டா?

விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது?

விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது?விமானங்கள் பொதுவாக வெள்ளை நிறத்தில் அதிகம் காணப்படும். தரையில் ஊறும் ஊர்திகளுக்கே கலர் கலராக பெயிண்ட் பூசும்போது, பலகோடி மதிப்புள்ள விமானம் ஏன் கலர் வண்ணத்தில் இருப்பதில்லை?

விமானத்தில் வெள்ளை வண்ணம் குறைய குறைய, அந்த விமானத்திற்கு ஆபத்துக்கள் அதிகம். அப்படி என்ன ஆபத்து?

வண்ணத்திலேயே கருப்பு வண்ணம் அதிக வெப்பத்தை கவரக்கூடியது. ஆனால் வெண்ணிறம் வெப்பத்தை கவர்ந்து இழுக்காது. இதனால் விமானம் அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்கப்படும்.

அல்ட்ராடெக் வயலெட் (புற ஊதா) கதிர்களால் வெள்ளை நிறம் எளிதில் வெளுக்காது. நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும். அதனால் விமானத்திற்கு அடிக்கடி வண்ணம் பூசும் செலவு குறையும்.

விமானத்திற்கு ஒருமுறை வண்ணம் பூச 50 லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெள்ளை நிறத்தால் உயிரிழப்பும் தவிர்க்கப்படும்.

வெள்ளை நிறம் பறவைகளுக்கு எச்சரிக்கை மணி

வெள்ளை நிறம் பறவைகளை எச்சரிக்கை செய்யும். குறைவான ஒளியில் கூட கண்ணுக்குப் புலப்படும்.

இதனால் பறவைகள் விமானத்தின் மீது மோதுவது தவிர்க்கப்படும். நேசனல் ஒயில்ட் லைப் ரிசர்ச் சென்டர் 2011-ல் விமானத்தை பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளியிட்டது.

அதில், வண்ணங்கள் அதிகம் உள்ள விமானங்களை விட, வெள்ளை நிற விமானங்களில் பறவைகள் மோதுவது குறைவாகவே நிகழ்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் பல பறவைகள் அழிந்து வரும் நிலையில், விமானங்கள் வெள்ளைநிறத்தில் பறக்கவிட்டு பறவைகளின் இறப்பை கட்டுப்படுத்துவது சற்று ஆரோக்கியமான விஷயம்.

3

உறியடி 2 – சூர்யாவுடன் கைகோர்த்த இளம் இயக்குனர்

2
உறியடி 2

உறியடி 2 – ஜாதி இயக்குனர்களுக்கு மத்தியில் மாறுபட்ட இயக்குனர், உறியடி விஜய் குமார்.

உரியடி 2016-ல் வெளிவந்த திரைப்படம். புதுமுகங்களுடன் வெளிவந்த படம். விஜய்குமாரே எழுதி, இயக்கி, தயாரித்தார். பத்திரிகையாளர்கள் காட்சி திரையிடப்பட்டவுடன் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இணையதளங்கள் மூலம் பார்த்தவர்கள் ஏராளமானோர். அந்த அளவிற்கு படத்தின் தாக்கம், இளைஞர்களை சுண்டி இழுத்தது.

உறியடி படத்திற்கு புதுமுக இயக்குனர் விருது கொடுத்து ஆனந்த விகடன் இதழ், விஜய்குமாரை சிறப்பித்தது.

தற்பொழுது விஜய்குமார், உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். சூரியாவின் 2D எண்டர்டெயின்மென்ட், இப்படத்தை தயாரிக்க உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்குமாரின் படங்கள் மட்டுமல்ல, அவருடைய சிந்தனைகளும் ஜாதி ஏற்றதாழ்வுகளை உடைப்பதே. அதற்காக எந்த ஜாதியையும் உயர்த்திப் பிடிக்கவில்லை. அனைத்து ஜாதிகளும் அழிய வேண்டும் என்பதுதான் விஜய் குமார் எண்ணம்.

உறியடி இரண்டாம் பாகமும், உண்மை சம்பவங்களையும், சமூக அவலங்களையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சூரியாவின் 2D எண்டர்டெயின்மென்ட். சமூக அக்கறையும், சீரிய சிந்தனைகள் கொண்ட இயக்குனர்களை ஊக்குவிப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

3

ரஜினி ஸ்டைலில் கலக்கும் விக்ரம் – சாமி 2

0
ரஜினி ஸ்டைலில்

ரஜினி ஸ்டைலில் கலக்கும் விக்ரம். ஆறுச்சாமி திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என ரஜினி பாணியில் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார் விக்ரம்.

சாமி, 2003-ல் வெளிவந்த சூப்பர்ஹிட் படம். அதன் பிறகு சாமி 2-ம் பாகம் எடுக்க முயன்றார் ஹரி. ஆனால், சில காரணங்களால் படம் ட்ராப்பாகியது.

சாமி 2 படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து, சிங்கம் படமாக வெளிவந்தது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட். சிங்கம் படம் இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்து விட்டது.

இத்தனை வருடங்கள் கழித்து, சாமி 2 படத்தின் கதையை மீண்டும் உருவாக்கி உள்ளார் ஹரி. இப்படம் நாளை வெளியாக உள்ளது. சாமி 2 நிச்சயம் ரசிக்கும் படியாக இருக்கும் என ஹரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#AaruSaamyReturnsFromTomorrow என டிவிட்டரில் விக்ரமின் கதாப்பாத்திரம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹாஸ்டாக் ரஜினியின் கபாலி பட வசனத்தை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளது.

வந்துட்டேனு சொல்லு, 15 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ, அப்டியே ஆறுச்சாமி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என மாஸாக விக்ரம் ட்ரெண்டாகி வருகின்றார்.

3

முத்தலாக் தடைச் சட்டம்: பாஜகவின் அவசரம்!

1
முத்தலாக் தடை சட்டம்

முத்தலாக் தடைச் சட்டம். தலாக்… தலாக்… தலாக்… எனக் கூறும் முத்தலாக் முறைக்கு, விரைவில் தடைச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

தலாக் என்ற வார்த்தையை மும்முறை கூறினால், இஸ்லாமிய மதத்தில் விவாகரத்து கிடைத்து விடும். அதாவது மூன்று நொடிகள் போதும்.

இஸ்லாமிய மதம் மட்டுமே விரைவில் விவாகரத்து வழங்கும் மதம். இது ஒரு பக்கம் எளிமையாக கருதப்பட்டாலும், இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பாஜக தலாக் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா:

இந்த மசோதாவின் படி, தலாக் என மும்முறை சொல்லி விவாகரத்து பெரும் கணவர், கிரிமினல் குற்றவாளியாக கருதப்படுவார். ஜாமீன் கிடைக்காது. 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

முத்தலாக் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக, யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். இதுவே அந்த மசோதா. இம்மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

முத்தலாக் தடைச் சட்டம்:

தற்பொழுது, ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’வைச் சற்று திருத்தி ‘முத்தலாக் தடைச் சட்டம்’ என பாஜக ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது, காவல் நிலையத்தில் ஜாமீன் பெற முடியாது. ஆனால், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்.

முத்தலாக் விவாகரத்து தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும். வேறு எவரும் பெண்ணின் சார்பில் புகார் அளிக்க முடியாது.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கணவன் மற்றும் மனைவியின் இடையே சமரசம் ஏற்பட்டால், வழக்கை ரத்து செய்துவிட்டு சேர்ந்து வாழலாம்.

ஜனாதிபதி ஒப்புதல்:

மேற்கண்ட மூன்று திருத்தங்களுடன், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன், அடுத்த கூட்டத் தொடரில், இச்சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும்.

வெடித்தது சர்ச்சை:

விவாகரத்து என்பது சிவில் வழக்கு. இதை ஏன் கிரிமினல் குற்றத்தில் சேர்க்க வேண்டும். கணவர் சிறை சென்றுவிட்டால் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் குழந்தைகளை கவனிப்பது யார்? என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மதவாதத்தை ‘முத்தலாக்’ முறைக்குள் திணிக்க பாஜக முயல்கிறது என இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

3

சர்கார் சிங்கிள் ட்ராக் பாடல் இப்படிதான் இருக்கும்!

0
சர்கார் சிங்கிள் ட்ராக்

சர்கார் சிங்கிள் ட்ராக் வரும் 24-ம் தேதி வெளியிட உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சர்கார். முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

தன்னுடைய ஓட்டு திருட்டுத் தனமாக பதிவாகியதை கண்டு, முழுநேர அரசியல்வாதியாக உருவெடுப்பார் விஜய். இது தான் படத்தின் ஒன் லைன்.

படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், சர்கார் படத்தின் ‘சிங்கிள் ட்ராக்’ வரும் 24-ம் தேதி வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பாடல் எப்படி இருக்கும் என்பது பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளது.

பாடல் ஜாலியான மூவ்மெண்டுடன் துவங்கும். அதே நேரத்தில், கேலி கிண்டலுடன் பாடல் வரிகள் உள்ளனவாம். புது புது வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளனர்.

பாடல் வரிகள் நிச்சயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

3

சதி வலைக்குள் திமுக; நற்பெயர் நிலைக்குமா?

1
சதி வலைக்குள் திமுக

சதி வலைக்குள் திமுக. வரும் சட்டமன்றத் தேர்தல் வரையிலாவது, திமுகவின் நற்பெயர் நிலைக்குமா என பரிதாப நிலையை நோக்கி அக்கட்சி செல்கின்றது.

கலைஞர் மரணத்திற்கு பின், திமுகவிற்கு அனுதாப அலைகள் உருவாகியுள்ளது. தமிழக அரசியலில், சரியான தலைமை இல்லாமலிருப்பதும், திமுகவிற்கு சாதகமே.

இந்நிலையில், பிரியாணி கடை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம். செல்போன் கடை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம். பார்லர் பெண் தாக்கப்பட்ட சம்பவம். இப்படி, வீடியோ ஆதாரத்துடன் திமுகவின் செல்வாக்கை, அக்கட்சியினரே சரிப்பது வாடிக்கையாகிவிட்டது.

முதல் இரண்டும் எதேச்சையாக நடைபெற்ற சம்பவம் . ஆனால், சமீபத்தில் வெளியான பார்லர் பெண் தாக்குதல் வீடியோ, திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம். அதன் வீடியோவைப் பார்லர் பெண் சத்யா, தற்போது வெளியிட்டுள்ளார்.

திமுக பிரமுகர் செல்வகுமாருக்கும், மயூரி பியூட்டி பார்லர் முதலாளி சத்யாவுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. பின்னாளில் சத்யா, செல்வகுமாரை துண்டித்துவிட்டு திமுக பிரமுகர் பிரபாகரனுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

சத்யா அவ்வப்போது, செல்வாக்கில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும், பணத்திற்காக ஆட்களை மாற்றுவதும் வாடிக்கையே என அரசியல் கட்சியினர் சிலர் தெரிவித்துள்ளனர்.

நான்கு மாதங்கள் கழித்து அந்த வீடியோவை வெளியிட்ட பின்னணி என்ன? சத்யாவை தூண்டியவர் யார்? இதனால் அவருக்கு என்ன லாபம்? என  பல கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

3