Home Blog Page 332

நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்: கர்ப்பிணிகளே உஷார்!

0
நச்சுக் காய்கறிகள் கர்ப்பிணிகளே உஷார் பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது?

நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்: கர்ப்பிணிகளே உஷார்! பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுவதை தவிருங்கள். பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது?

நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள். நாம் உண்ணும் உணவில் நமக்கே தெரியாமல் விஷம் கலக்கப்படுகிறது. அதில் விஷம் இருப்பதை அறியாமல் உட்கொள்கிறோம். அந்த விஷம் உங்களை மெல்லக்கொல்லும்.

நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்

நீங்கள் வாங்கும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கிய காய்கறிகள், ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

ஆர்கானிக் முறையில் உற்பத்தியான காய்கறிகள் எனக்கூறி 75 சதவீதம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த காய்கறிகளே விற்கப்படுகின்றன என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், பூச்சிக்கொல்லி மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது உடல் உறுப்புகளை பாதித்துக்கொண்டு இருக்கலாம்.

இன்றைக்கும் இருக்கும் விவசாயிகள் அவர்களுடைய கடன் பிரச்சனை, காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளை சமாளித்து விவசாயம் செய்வதே ஆச்சரியமான ஒன்று.

அவர்களிடம் பூச்சிக்கொல்லி அடிக்காதே என்று கூறுவதை விட நாம் எவ்வாறு விழிபுணர்வுடன் இருக்கிறோம் என்பதே முக்கியம்.

கர்ப்பிணிகளே உஷார்! பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உண்டாகும் பாதிப்பு. 

  • கேன்சர் உருவாகின்றது.
  • நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
  • இனப்பெருக்க விருத்தி குறைகின்றது.
  • நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
  • கர்ப்பிணி பெண்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் உட்கொள்ளும்போது, குழந்தைகள் பிறவிக்குறைபாட்டுடன் பிறக்கும்.

காய்கறி மற்றும் பழங்களில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது?

வினிகர்

1:3 விகிதத்தில் வினிகர் மற்றும் நீர் கலந்து, அதில் காய்கறிகளை சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினால் 94% வரை பூச்சிக்கொல்லி மருந்துகளை அகற்றலாம்.

வினிகர் விலை அதிகம் என்பதால், எல்லாத் தரப்பு மக்களும் பயன்படுத்துவது கடினம்.

சோடா உப்பு

காய்கறிகள் மற்றும் பழங்களை தூயநீரில், சிறிது நேரம் ஊறவைத்து அலசுவதன் மூலம், பாதி பூச்சிக்கொல்லி மருந்துகளை அகற்ற முடியும்.

அதே தண்ணீருடன், 1 லிட்டருக்கு 10 கிராம் சோடா உப்பு சேர்த்து, காய்கறிகளை 10 முதல் 15 நிமிடம் ஊறவைத்து அலசுவதன் மூலம், கிட்டத்தட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை முழுமையாக அகற்றி விடலாம்.

சோடா உப்பு, வெளிப்புறத்தில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமல்லாமல், காய்கறிகளின் உட்புறத்தில் படிந்துள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அகற்றும் சக்தி கொண்டது.

நீங்கள் ஆர்கானிக் காய்கறிகள் வாங்கினால் கூட, இம்முறையில் காய்கறிகளை கழுவுவதன் மூலம், 100% பாதுகாப்பான முறையில் உணவுகளை உட்கொள்ளலாம்.

3

NOTA Movie Review | நோட்டா – ஜெ.வோட சீக்ரெட்டா?

0
NOTA Movie Review

NOTA Movie Review | நோட்டா ஜெ.வோட சீக்ரெட்டா? கதையில் வரும் காட்சிகள் யாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அது ஆனந்த் ஷங்கருக்கே வெளிச்சம்.

நோட்டா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம். முழுக்க முழுக்க தமிழக அரசியலை பின்னணியாக வைத்து, தன்னுடைய கற்பனையை திணித்துள்ளார் ஆனந்த் சங்கர்.

ஜெ. கோமாவில் இருக்கும்போது, அவருக்கு ஒரு மகன் இருந்து, மகனை முதலமைச்சராக்கினால் என்ன நடந்திருக்கும். இது தான் படத்தின் ஒன்லைன்.

உண்மையில் இது ஜெ. பற்றியதா, அவரை மனதில் வைத்துதான் இந்த கதை எழுதப்பட்டதா என ஆனந்த் சங்கர் தான் விளக்க வேண்டும்.

நோட்டா படத்தை கட்சியுடனும், ஜெ.வுடனும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு காட்சிகளும் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன.

படம் எப்படி?

இதுவரை ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வந்த தேவரகொண்டா, வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். இதில் ரொமான்ஸ் செய்வதற்கு வேலையே இல்லை. காதலியும் இல்லை.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே தேவரகொண்டா முதலமைச்சர். அடுத்தடுத்து சூடுபிடிக்கும் காட்சிகள். ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டும் இசை, படத்திற்கு பலம்.

ஆனால் இரண்டாம்பாதி ஏமாற்றமே. அரசியலில் பின்னிப்பெடலெடுப்பார் எனப் பார்த்தால், நாற்காலியை தக்கவைக்கும் போட்டியாக கதை மாறிவிட்டது. இதனால் படத்தில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது.

தமிழகத்தின் அவலங்களை மறைமுகமாக ஆனந்த்சங்கர் சுட்டிக்காட்டினாலும், திரைக்கதையை பலவீனமாக அமைத்துவிட்டார். திரைக்கதையை மட்டும் இன்னும் பலப்படுத்தியிருந்தால் முதல்வன் 2 என்று கூடப் பேசப்பட்டிருக்கும்.

அரிமா நம்பி போன்ற படம் கொடுப்பார் என நினைத்தால், இருமுகன் போன்ற படத்தை கொடுத்துள்ளார் ஆனந்த்ஷங்கர்.

மொத்தத்தில் நோட்டா ஜெ.வோட சீக்ரெட்டா?

3

Movie Review Ratsasan | ராட்சசன் – ரண கொடூரன்

0
Movie Review Ratsasan

Movie Review Ratsasan | ராட்சசன். கொடூரக் கொலை பாக்குறவங்க… நோ நோ. திரில்லர் படம் பாக்குறவங்க, சீரியல் கில்லர் படம் பாக்குறவங்க கண்களுக்கு விருந்து.

படம் ஆரம்பமான வேகத்தில் பரபரப்பாக செல்கிறது. அதே வேகத்திலேயே மெர்சலாக முடிகின்றது. படத்தை மெருகேற்றும் விதமாக இசையும், சண்டைக் காட்சிகளும் அமைந்துள்ளது.

ஏற்கனவே நிறைய சீரியல் கில்லர், சைக்கோ சீரியல் கில்லர் படங்கள் வந்துவிட்டது. அதையும் மீறி படத்தை பரபரப்பு திரைக்கதையுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்குமார்.

கதைச் சுருக்கம்

படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு, இயக்குனராக வேண்டும் என்பதே ஆசை. அவருடைய சைக்கோ கில்லர் கதையை யாரும் தயாரிக்க முன்வரவில்லை.

வேறு வழியில்லாமல் அப்பா மூலம் கிடைத்த போலீஸ் கோட்டாவில், எஸ்.ஐ.யாக பணியில் சேருகின்றார். அப்போது சைக்கோ கில்லர் கொலை நடக்கிறது.

ஏற்கனவே இவர் படத்திற்காக திரட்டி வைத்திருந்த தகவல், அந்தக் கொலையை கண்டுபிடிக்க உதவுகின்றது. இதுதான் படத்தின் கதைச் சுருக்கம்.

படம் எப்படி

பழைய கதை என்றாலும், பக்கா என்டர்டெயின்மென்ட். ஆர்ட் டைரக்டரை சும்மா சொல்லக்கூடாது. எங்கங்க பேப்பர் கட்டிங் உருவனுமோ உருவி, ரூம் ஒன்ன ரெடி பண்ணி குடுத்துட்டார்.

இதெல்லாம் எத்தனையோ படத்துல பாத்தாச்சு, இருந்தாலும் இவங்க எங்கபோய், புதுசுபுதுசா பேப்பர் கட்டிங் கொண்டு வராங்கன்னு தான் தெரியலை. இதுபோன்ற படத்துக்காகவே, நிறைய சேகரிச்சு வச்சிருப்பாங்கபோல.

விஷ்ணுவிஷாலின் படத்தேர்வு சிறப்பு. சும்மா நாலு மொக்கப்படம் நடிச்சோம். கல்லா கட்டுனோம்னு இல்லாம, படம் பாக்க வாரவங்களுக்கு தலைவலி இல்லாத கதையா, செலக்ட்பண்ணி நடிப்பதற்கே பாராட்டனும்.

அமலாபால் தேவையே இல்லை. இருந்தாலும் கொஞ்சம் கிளுகிளுப்பு காட்ட அப்பப்போ யூஸ் பண்ணிருக்காங்க. அப்டி ஒன்னும் பெருசா இல்லனாலும், சிறுசா ஒர்க் அவுட் ஆயிருக்கு.

சைக்கோ மனிதன், கொடூர கொலை செய்வதை கடைசிவரை காட்டவே இல்லை. பின்பக்கம் இருந்த குழந்தை, வில்லன் என்ட்ரியில் கண்ணா மூடிச்சு, கடைசிவரை கண்ணத் தொறக்கவே இல்லையே.

இதுல கொடூரக் கொலைய வேற காட்டுனா அவ்ளோ தான். படம் பாக்க வந்தவன் பாதிலயே ஓடிருவான். அந்த அளவுக்கு கொடூர முகம் கொண்ட வில்லன்.

பலஇடங்களில் நமக்கே ஒருவித படபடப்பு தொற்றிக்கொள்கிறது. இறுதிவரை அந்த பீல்லயே திரைக்கதை செல்கிறது. குத்துசாங்கு, லவ்சாங்கு போட்டு சாவடிக்காம நச்சுன்னு திரைக்கதை அமைச்சிருக்காறு இயக்குனரு.

குறைகள்

படத்தில் குறைகள் என்றால், லேடி போலீஸ் தான். அந்த மூஞ்சிய பாத்தாலே எரிச்சல் வருது. அந்த அளவுக்கு அந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.

இருந்தாலும் ஒரு சீரியல் கொலை நடக்கும் இடத்தில், இந்த அளவிற்கு கவனக்குறைவாக ஒரு அசிஸ்டன்ட் கமிஷ்னர் செயல்படுவாரா என்பது சந்தேகமே.

சைக்கோ ஆசிரியர். அவர ஓப்பனிங் காட்டுனதுமே, இந்த பீஸ் கொலை பண்ணுற அளவு ஒர்த் இல்லைன்னு நமக்கே தெரிஞ்சிடும். இருந்தாலும், இந்த பீஸ்தான் கொலை பண்ணிச்சுன்னு ஒரு நிமிஷம் நம்ப வச்சு ஏமாத்திட்டாரு இயக்குனர் .

சில காட்சிகள் யூகிக்கும் அளவுக்கு இருந்தாலும், சண்டைக்காட்சிகள் நம்மை படத்தோடு ஒன்றச்செய்கிறது. ஒளிப்பதிவு இல்லாமய, அதுவும் சிறப்பு. ஒளிப்பதிவு ஒழுங்கா இல்லன இந்த மாதிரி படத்தை எப்படி ரசிக்க முடியும்.

மொத்தத்தில் ராட்சசன் ரண கொடூரன்…

3

Movie Review 96 – காதல் தோல்வியின் மலரும் நினைவுகள்

0
Movie Review 96

Movie Review 96. இப்படம் ஆட்டோகிராப் அல்ல. இது வேறு ரகம். ஆட்டோகிராப் மாதிரி இப்படம் உள்ளது என சொல்வதே தவறு. இப்படம் காதல் தோல்வியின் மலரும் நினைவுகள்.

96, விஜய்சேதுபதி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் 4-ம் தேதியே வெளியாக வேண்டியது. விஷால் செய்த பிரச்சனையால் தாமதமாக மறுநாள் வெளிவந்துள்ளது.

இப்படத்தை இளம் காதல்ஜோடி ரசிப்பது மிகக்குறைவே. 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இப்படத்தைப்பற்றி அதிகம் பேசுகின்றனர். தங்களுடைய பள்ளி பருவத்தின் மலரும் நினைவுகளாக இப்படம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதில் ஒரு காதலே. ஒரே ஒரு காதலியே. அட்லி மாதிரி உள்ள பையனுக்கு பின்ன, இட்லி மாதிரி ஒரு காதல் கதை இருக்கும். கருப்பா இருக்கவன் தான் அந்த நேரத்தில் பெண்களால் அதிகம் ரசிக்கப்பட்டவன்.

வெளியில கெத்து ஆனா, காதலி முன்ன பேச தயங்குவது. படபட இதயத் துடிப்பு. காதலி தைரியமாக பேசுவது. இப்படி ரசிக்க வைக்கும் காட்சிகள் நிறையவே உள்ளது.

படத்தின் முதல் அரைமணி நேரம், புகைப்படக் கலைஞர்கள் கண்களுக்கு விருந்து. அவ்வளவு அழகாக சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு பிரேமும் ரசிக்க வைக்கிறது.

ஆனால் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் தேவையற்ற நகர்வுகள், இழுவை, அமைதி என நல்ல காட்சிகளுக்கு இடையில் ஆங்காங்கே தொந்தரவு செய்கின்றன.

படத்தை ஒரு ஆர்ட் மூவியாகவும், காமர்சியலாகவும் கொடுக்க நினைத்ததே இந்த தொய்விற்கு காரணம். விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடிப் பொருத்தம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

க்ளைமேக்ஸ் காட்சியில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்வார்கள் அல்லது லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

விஜய்சேதுபதி இறுதியாக த்ரிஷாவின் துணியை மீண்டும் பொக்கிசமாக பைக்குள் திணிக்கும்போது, நீ இதுக்கு மட்டும் தான் லாயக்கு என ரசிகர்கள் குரல் கொடுப்பதிலேயே அவர்கள் ஏமாற்றம் புரிகின்றது.

கொஞ்சம் நீளமான க்ளைமேக்ஸ். இயக்குனர் மூக்கை நேராக தொடுவதற்கு பதில் தலையை சுற்றித் தொட்டுள்ளார். அதனாலேயே இந்த இழுவை.

தேவதர்சினியின் பள்ளிப்பருவ, முகத்தேர்வு அருமை. அவரை போன்ற அதே சாயல், அதே வால் தனம். அது அவருடைய மகள் தான். பள்ளிப்பருவத்தில் வரும் காதல் ஜோடியிடம் இருந்த கெமிஸ்ட்ரி, விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷாவிடம் இல்லை.

இருப்பினும் இப்படம் காதல் தோல்வியின் மலரும் நினைவுகளாக ரசிகர்கள் மத்தியில் இடம்பெரும்.

3

Movie Review | Pariyerum Perumal – பரியேறும் பெருமாள்

0
Movie Review

பரியேறும் பெருமாள் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது. இன்னும்சில இடங்களில் இப்படம் வெளியாகவில்லை. எப்படியோ ஒருவழியாக இப்படத்தை திரையில் கண்டு, இவ்வளவு தாமதமாக விமர்சனம் எழுதியுள்ளேன்.

இப்படத்தைப் பற்றி பலவிமர்சனங்கள் வந்துவிட்டது. எனவே படத்தை பற்றி கூறுவதைவிட, படம் ஏற்படுத்திய விளைவுகளை இந்த விமர்சனத்தில் கூறியுள்ளேன்.

தீக்குச்சி

பரியேறும் பெருமாள் அனைத்து ஜாதியினரும் பார்த்தே தீரவேண்டிய ஒரு புரட்சிப் படம். இது ஒரு தீக்குச்சி தான். சுடராக மாறுவது வருங்கால இயக்குனர்கள் மத்தியில் தான் உள்ளது.

வீழ்ச்சியும், ஜாதிவெறியும்

1957-ல் மாயாபஜார் படம் வெளியானது. தமிழ் சினிமாவும், ஹாலிவுட் சினிமாவும் ஒரே தொழில்நுட்ப வளர்ச்சியில் சமஅளவில் இருந்தன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்க தமிழ்சினிமாவும், தமிழ் சமூகமும் வளரவேண்டிய நேரத்தில் வீழ்ச்சியை சந்தித்தது.

80-கள் மற்றும் 90-களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அதில் காதல் கதைகள் அதிக அளவில் வெளியாகின. அதனால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் காதல் மோகம் தொற்றியது.

அதே நேரம், ஒவ்வொரு ஜாதிகளின் பெருமை பேசும் படங்கள் வெளியாகின. ஜாதிகளை வைத்து அரசியல் கட்சிகள் உருவெடுத்தன. ஓட்டிற்காக ஒவ்வொரு ஜாதியையும் ரத்த வெறியுடன் வளர்த்து விட்டனர்.

(ஜாதிய புரட்சி படங்கள் வெகுசில படங்களே வெளிவந்தன. அதிலும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். ஒரு தரப்பினர் முகம் சுழிக்கும் படியாககூட இருக்கும்.)

விளைவு 20ம் நூற்றாண்டிலும் ஜாதி அழிக்க முடியாத சக்தியாக மாறியுள்ளது. ஜாதிவெறி கொண்டவர்களின் மனநிலையை மாற்றுவது கடினம். ஆனால், வளரவிடாமல் தடுப்பது எளிது.

ஜாதிய நிலை

பரியன் படத்தில் வரும் ஒரு முதியவர், ஜாதிய கொலையை கொலசாமிக்கு செய்வதாக கூறுவார். அதேநேரம் தழ்ந்தவனிடம் அடிவாங்கிய வேதனையில் தற்கொலையும் செய்துகொள்வார். அம்முதியவர் போன்ற மக்களை மாற்றுவது கடினம். அவர்கள் சாகும்வரை அதே மனநிலையுடன் இருப்பார்கள். அம்மனநிலையிலேயே செத்து மடிவர். ஆனால் வருங்கால இளைஞர்களை மாற்றுவது எளிது.

அடிமையாக இருப்பவர்கள், சரிக்குச் சமமாக இருக்க நினைப்பது புரட்சி. அதேநேரம் அடக்கி ஆண்டவரை, மீண்டும் அடக்க நினைப்பது குரூர மனப்பான்மை.

அப்படி நினைத்தால், இறுதிவரை அடிமைகள் ஒழிய மாட்டார்கள். எவரேனும் ஒருவர் அடிமையாக வாழும் சூழல் உருவாகும். இப்படி எண்ணம் கொண்ட இரு தரப்பினருமே ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.

வெளிச்சம்

பரியேறும் பெருமாள் படத்தின் முடிவுவே அதற்கான வெளிச்சம். கடைசிவரை நாயகத்தான் நான் இருக்க வேண்டும் என நினைத்தால், இங்க எதுவும் மாறாது.

இதை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் படி கூறினால் மட்டுமே ஜாதிகள் ஒழியும். ஒழிக்க முடியும்.

ஜாதிய தூண்டல்

தூங்கி எழுந்து பல்துலக்கும்போதே கொலை செய்வோம் (கருணாஸ்) மற்றும் ஸ்டைலா கெத்தா கால்மேல கால்போட்டு உட்காருவேன் (கபாலி). இப்படியனா வசனங்களைக் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் ஜாதியை ஒழிக்க முடியாது. இன்னும் நெருப்பாக வளர்க்கும்.

வளரும் தலைமுறையினர் மத்தியில் ஜாதியை வளர விடாமல் தடுப்பது, வருங்கால அரசியல்வாதிகள் மத்தியிலும், இயக்குனர்கள் கையிலுமே உள்ளது. நீங்கள் ஜாதியை ஒழிக்க நினைப்பவரா? வளர்க்க நினைப்பவரா?

பரியேறும் பெருமாள் ஜாதிய அரிதாரம் பூசியவர்களுக்கான சாட்டையடி.

3

விமானங்களில் ஆக்சிஜன் மாஸ்க் இருந்தும் உயிர் பிரியும்!

0
விமானங்களில் ஆக்சிஜன் மாஸ்க் இருந்தும் உயிர் பிரியும்

விமானங்களில் ஆக்சிஜன் மாஸ்க் இருந்தும் உயிர் பிரியும்! ஆக்ஸிசன் மாஸ்க் எப்படி வேலை செய்யும்? ஆக்சிஜன் கேண்டில் தொழில் நுட்பம் என்றால் என்ன?

ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் ஆக்ஸிசன் மாஸ்க் எப்படி வேலை செய்யும்?

விமானம் திடீரென வானிலை மோசமாக உள்ளது எனில் தாழ்வாகவோ அல்லது உயர்வாகவோ பறக்க வாய்ப்பு உண்டு.

பறவைகள் விமானத்தின் எதிரில் திடீரென வந்தாலும் விமானிகள் சட்டென விமானத்தை அதிக உயரத்திற்கு பறக்க வைப்பார்கள்.

விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது, ஆக்ஸிசன் மண்டலத்தை விட்டு வெளியில் செல்ல நேரிடும். இதனால் விமானத்தில் ஆக்ஸிசன் குறைபாடு உண்டாகும்.

விமானங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. இருப்பினும் ஆபத்து நேரங்களில், ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்தப்படுகின்றது.

விமானத்தில் பொதுவாக அதிக எடையுடைய பொருட்கள் ஏற்றப்படுவதில்லை. அதிக சுமையுடன் விமானம் பறப்பது ஆபத்து. இதன் காரணமாக, ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்வதில்லை.

ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், ஆக்சிஸன் மாஸ்க் எப்படி வேலை செய்யும்? ஆபத்து நேரத்தில் ஆக்சிஜன் மாஸ்க்கை பயன்படுத்தியே மக்கள் உயிர் தப்பிக்க முடியும்.

ஆக்சிஜன் கேண்டில் தொழில் நுட்பம் என்றால் என்ன?

ஆக்சிஜன் கேண்டில் தொழில் நுட்பம் என்றால் என்ன? ஆக்ஸிசன் மாஸ்க் எப்படி வேலை செய்யும்?ஆக்சிஜனை உருவாக்க, விமானங்களில் ஆக்சிஜன் கேண்டில் (oxygen candle) என்கின்ற தொழில்நுட்பமுறை பயன்படுத்தப்படுகிறது.

அதாவது, சில வேதிப்பொருட்களை கொண்டு அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் ஜெனரேட் செய்யப்படுகின்றது.

சோடியம் குளோரைடு அல்லது பேரியம் பெராக்சைடு வேதிப்பொருளை வெப்பப்படுத்தும்போது அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் உருவாக்கப்படுகிறது.

அப்படி உருவாக்கப்படும் ஆக்சிஜன்கள், எமர்ஜென்சி மாஸ்க்குகள் வழியாக பயணிகளுக்கு கொடுக்கப்படும்.

விமானங்களில் ஆக்சிஜன் மாஸ்க் இருந்தும் உயிர் பிரியும்!

ஆக்சிஜன் மாஸ்க்குகளை 10 முதல்  30 வினாடிகளுக்குள் அணிந்துவிடுவது உயிருக்கு பாதுகாப்பு. இல்லையெனில், பதற்றத்தில் மயக்கமடைய நேரிடும். உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு.

இந்த ஆக்சிஜன் சப்ளை 20 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். அதற்குள் விமானி, விமானத்தின் உயரத்தை குறைத்து ஆக்சிஜன் மட்டத்தை அடைந்துவிடுவார்.

ஒருவேளை, விமானி சுயநினைவிழந்து ஆக்சிஜன் மட்டத்தை அடையவில்லையெனில், ஆக்சிஜன் தீர்ந்து விமானத்தில் உள்ள அனைவரும் உயிரிழக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு.

விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது? படிக்க கிளிக் செய்யவும். முகநூல் பக்கம்

3

நிலாவில் செல்பி எடுத்தால் நட்சத்திரங்கள் தெரியாது!

0
நிலாவில் செல்பி

நிலாவில் செல்பி அல்லது புகைப்படம் எடுக்கும்போது நட்சத்திரங்கள் தெரிவதில்லை. வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் மங்களாகவே தெரியும்.

நீல் ஆம்ஸ்ட்ராங் எப்பொழுது நிலாவில் காலடி எடுத்துவைத்தாரோ அன்று முதலே, ஒரு சர்ச்சை நீடித்து வருகின்றது. அதாவது நிலாவிற்கு மனிதன் சென்றது கட்டுக்கதை என்று.

20-7-1969ம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் என்ற இரண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அப்பல்லோ 2 விண்கலத்தின் மூலம் நிலாவிற்கு சென்றனர்.

அப்பல்லோ நிலவில் களம் இறங்கியதும் நீல் ஆம்ஸ்டராங்,  ஆல்டிரின் அடுத்தடுத்து கால் பதித்தனர்.  அடுத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்புகைப்படத்தில் நட்சத்திரங்கள் தெரியவில்லை.

நட்சத்திரங்கள் தெரியாததால், நாசா போலியான புகைப்படத்தை வெளியிட்டு ஏமாற்றியுள்ளது என அப்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நிலவில் வெறும் கண்களால் நட்சத்திரங்களை பார்க்கும்போது, பூமியை விட சற்று மங்களாகவே தெரியும். நிலவில் உள்ள வளிமண்டலம் வலிமை இல்லாததே இதற்கு காரணம்.

பூமியை போன்ற வலிமையான காற்று மண்டலம் நிலவில் இல்லை. காற்று மண்டலம் வலியமையாக இருந்தால் மட்டுமே ஒளியை சிதறடிக்க முடியும்.

காற்றில், ஒளி சிதறுவதின் மூலமே நட்சத்திரங்கள் நன்கு வெளிச்சமாக நம் கண்களுக்கு புலப்படுகின்றன. நிலவின் வலிமையில்லா காற்று மண்டலம் காரணமாக, கேமராவின் லென்சுகளுக்கு நட்சத்திரம் புலப்படாது.

பூமியில் உங்கள் மொபைல் மூலம் நட்சத்திரத்தை செல்பி அல்லது புகைப்படம் எடுத்தால் கூட நட்சத்திரம் தெரியாது. பூமியில் இருந்தே தெரியாதபோது, நிலவில் மட்டும் எப்படி தெரியும்.

நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி எடுத்த பர்ஸ்ட் மேன் என்ற திரைப்படத்தில் கூட அதன் காரணமாகவே நட்சத்திரங்களை காட்டவில்லை.

3

பரியேறும் பெருமாள்; குற்ற உணர்வில் அமெரிக்கத் தமிழர்கள்

0
பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில், பல இடங்களில் இப்படம் வெளியாகவில்லை. நம் இணையத்தில் கூட இன்னும் இப்படத்தின் விமர்சனத்தை பதிவு செய்ய முடியவில்லை.

பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் பரியேறும் பெருமாள். இப்படம், செக்கச்சிவந்த வானம் திரைப்படத்துடன்  இந்த வாரம் வெளியானது.

குறைந்த திரையரங்குகளில் மட்டுமே இப்படம் வெளியிடப்பட்டது. காரணம், ஏற்கனவே வந்த படங்கள் மற்றும் செக்கச்சிவந்த வானம் படமும் நிறைய திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டது.

ஆனால், விமர்சகர்கள் அனைவரும் இப்படத்தை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர். இதனால் இப்படத்தை திரையரங்குகளில் காண பெரும்பாலன மக்கள் விரும்புகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள தமிழர்கள், இப்படத்தை பைரசி இணையதளங்களில் பார்த்துள்ளனர். படம் மிக அருமையாக உள்ளதால், மனம் கேட்காமல் படக்குழுவிற்கு உதவ முன்வந்துள்ளனர்.

உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண்ணை அனுப்புங்கள். டிக்கெட் கட்டணத்தை இங்குள்ள மக்கள் தர தயாராக உள்ளோம் என படக்குழுவினருக்கு ட்வீட் செய்துள்ளனர்.

பரியேறும் பெருமாள்

சிறந்த படங்கள் வரும்பொழுது மக்கள் அதை வரவேற்கத் தயங்குவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். இதுபோன்ற சிறந்த திரைப்படங்கள் வெளிவந்தால், மக்கள் பைரசி இணையதளங்களையே மறந்துவிடுவார்கள்.

மொக்கை படங்களுக்கு அதிக விலையில் கட்டணம் நிர்ணயிப்பதால், சிறிய படங்களையும், தரமான படங்களையும் சேர்த்து பாதிப்பது வேதனையான விஷயம்.

அடுத்த வாரம் ‘நோட்டா’ மற்றும் ’96’ படங்கள் வெளியாக உள்ளன. எனவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் திரையரங்கை உயர்த்துவது கடினமே.

3

ஒரு பந்தில் 8 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது! தெரியுமா?

0
ஒரு பந்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 8 ரன்கள் most runs off single ball

ஒரு பந்தில் 8 ரன்கள் வரை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று முறை இந்த சாதனை படைக்கப்பட்டது. ஒரு பந்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் (most runs off single ball).

ஒரு பந்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் (most runs off single ball)

கிரிக்கெட் விளையாட்டில், ஒரு பந்தில் அதிகபட்சம் எத்தனை ரன்கள் எடுக்க முடியும் என்று கேட்டால், உடனே 6 ரன்கள் எனக் கூறுவோம்.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்தில் 8 ரன்கள் அடிக்கப்பட்ட சம்பவம் மும்முறை நிகழ்ந்துள்ளது. இருமுறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதல் சாதனை

1928-ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து  இடையே நடந்த டெஸ்ட் தொடரில், முதன்முதலில் இச்சாதனை படைக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் ‘பேட்ஸி ஹெண்ட்ரன்’ பந்தினை அடித்துவிட்டு நான்கு ஓட்டங்கள் ஓடியே எடுத்தார்.

நான்காவது ஓட்டத்தின்போது பந்தை, ஸ்டெம்பை நோக்கி எறிந்தார் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர். எதிர்திசையில் யாரும் பந்தை பிடிக்காததால், பந்து எல்லைக்கோட்டை தாண்டிச் சென்றது.

எனவே ‘ஓவர் துரோ’ முறையில், கூடுதலாக நான்கு ரன்கள் கொடுக்கப்பட்டது. மொத்தம் எட்டு ரன்கள் கிடைத்தது. எட்டு ரன்கள் அடித்த முதல் வீரர் பேட்ஸி ஆவார். ஒரே பந்தில் 8 ரன்கள் எடுக்கப்பட்டதும் இதுவே முதல் முறை.

இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் சாம்பவான் ‘டான் பிராட்மேன்‘ அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறை

1980-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதேபோன்று 8 ரன்கள் எடுக்கப்பட்டது.

நியூஸிலாந்தை சேர்ந்த ஜான் ரைட் (இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்) பந்தை அடித்துவிட்டு 4 ரன்கள் எடுத்தார். பந்தை ஸ்டெம்பை நோக்கி எறியும்போது எல்லைக்கோட்டைக் கடந்தது. இதன் மூலம் 8 ரன்கள் கிடைத்தது.

மூன்றாவது முறை

2004-ல் தென்ஆப்ரிக்காவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இச்சாதனை படைக்கப்பட்டது. மூன்றாவது முறை சற்று வித்தியாசமாக 8 ரன்கள் எடுக்கப்பட்டது.

வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன்லாரா, பந்தை அடித்துவிட்டு மூன்று ஓட்டங்கள் எடுத்தார். அப்போது, தென்ஆப்ரிக்காவின் விக்கெட்கீப்பராக இருந்த ‘மார்க் பவுச்சர்’ பந்தை வேகமாக எறிந்தார்.

பந்து மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கீப்பர் ஹெல்மெட்மீது பட்டுவிட்டது. கீப்பர் ஹெல்மெட்மீது பந்துபட்டால் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படுவது வழக்கம். எனவே மொத்தம் 8 ரன்கள் கிடைத்தது.

ஒருவேளை பிரையன் லாரா நான்கு ரன்கள் ஓடி இருந்தால் மொத்தம் 9 ரன்கள் கிடைத்திருக்கும். முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டிருக்கும்.

அவருடைய துரதிஷ்டவசம், அந்த போட்டிக்கு சிலநாட்கள் முன்புதான் ‘ஓவர் துரோ’ மூலம் கிடைக்கும் ரன்கள் பேட்ஸ்மேன் கணக்கில் சேர்க்கப்படாது என விதிமுறை மாற்றியமைக்கப்பட்டது.

அப்போட்டியில் 196 ரன்களில் லாரா அவுட். ‘ஓவர் துரோ’ ரன்களை பேட்ஸ்மேன் கணக்கில் சேர்த்திருந்தால், லாராவிற்கு இரட்டைச் சதம் கிடைத்திருக்கும். மேலும், ஒரு பந்தில் அதிக ரன் அடித்த வீரர் பட்டியலிலும் இடம்பெற முடியவில்லை.

ஒரு பந்தில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்கள் கணக்கிலேயே இச்சாதனை சேர்த்துக்கொள்ளப்பட்டது. இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.

3

Review Chekka Chivantha Vaanam | செக்கச்சிவந்த வானம்

0
Review Chekka Chivantha Vaanam

Review Chekka Chivantha Vaanam | செக்கச்சிவந்த வானம், மணிரத்னமிசம் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

மணி ரத்னம் படம் என்றாலே சில விதிமுறைகளுக்குட்பட்டு எடுக்கப்பட்டு இருக்கும். செக்கச்சிவந்த வானம் படமும் மணிரத்னமிசம் விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஓப்பனிங் வேலுநாயக்கர் போன்ற கதாப்பாத்திரத்தில் வரும் பிரகாஷ்ராஜ்யை, கொலை செய்ய முயற்சி நடக்கிறது. உடனே மனைவி ஜெயசுதாவை காரில் இருந்து தள்ளிவிட்டு, தானும் குண்டு வெடிப்பில் இருந்து தப்பிக்கின்றார்.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கொலை செய்யப்படுகின்றார். பிரகாஷ்ராஜ்-யை யார் கொலை செய்தது? இதுதான் படத்தின் ஒன்லைன் என சொல்லிவிட முடியாது. இப்படத்திற்கு பல ஒன்லைன் உள்ளது. 4 ஹீரோ என்றால் சும்மாவா?

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒருவித ஒன்லைன் உள்ளது. எல்லா ஒன்லைன்யும் சொல்லிட்டா சஸ்பென்ஸ் உடைஞ்சிரும். படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க.

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு மூவரும் பிரகாஷ்ராஜ் வாரிசு. விஜய் சேதுபதி அரவிந்த்சாமியின் பள்ளி தோழனாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர்.

அரவிந்த்சாமி, ஜோதிகா மற்றும் அதிதிராவை தன்வசமாக்கி கொண்டார். அருண்விஜய்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ். சிம்புவுக்கு டயானா. நான்கு ஹீரோயின் இருந்தும், விஜய் சேதுபதிக்கு ஜோடி கிடையாது.

ஹீரோயின்களில், ஜோதிகா மட்டுமே கிளைமேக்ஸ் வரை தாக்குப்பிடிக்கின்றார். மற்ற ஹீரோயின்கள் ஆங்காங்கே கழற்றிவிடப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை, ஜவ்வாக நீளும் கதைக்கு அவ்வப்போது வேகம் கொடுக்கிறது. சந்தோஷ் சிவனின் கேமரா கோணங்கள் தூங்க நினைக்கும் ரசிகர்களை கூட அவ்வப்போது சூடேற்றி விழித்திருக்க வைத்துள்ளது.

படத்தில் ரசிக்க வைத்த காட்சிகள்

பாம் பிளாஸ்ட்டில் உயிர்பிழைத்த ஜெயசுதா, ‘நா என்ன பேய் மாதிரி இருக்கேனா’ என மருமகள் ஜோதிகாவை பார்த்துக்கேட்க, ஆமா அப்படி தான் இருக்க என பதிலுக்கு ஜோதிகா சொல்வதும் காமெடி கலந்த பரிதாபம்.

இலங்கை தமிழில் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், மணி ரத்னம் படத்தில் அவ்வளவு அழகு. அழுக்கு முகத்துடன் கிராமத்துப் பெண்ணாக பார்த்த ஐஸ்வர்யாவை, ஒவ்வொரு பிரேமிலும் அழகாக காட்டியுள்ளார் சந்தோஷ் சிவன்.

சிம்புவுக்கு ஏத்த டயானா. சிம்புவின் புஜபல பராக்ரமங்களுக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார். மேலாடை இல்லாமல், சட்டையை மாட்டும் காட்சியில் ரசிகர்களை கிளர்ச்சியடைய வைத்துள்ளார்.

ஆனால் அடுத்த நொடியே, பட்டென்று சுடப்பட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றார். சிம்புவுக்கு வாழ்க்கைலதான் லவ் செட்டாகல, படத்துலையுமா?

அரவிந்த்சாமி, சிம்பு என கொஞ்ச நேரம் திரையில் தோன்றினாலும் அதிதி, ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கி விட்டார்.

அரவிந்த்சாமியின் பில்டப் காட்சிகளுக்கு குறைச்சல் இல்ல. அதே நேரம் அரவிந்த்சாமியின் மாஸ் கொஞ்சம் மிஸ்ஸிங். ஜோதிகா, அதிதி என ப்ளேபாயாக வலம் வருகின்றார்.

அரவிந்த்சாமிக்கும் அதிதிக்கும் இருக்கும் கள்ளத்தொடர்பு தெரிந்தும், எவ்வித கோபமும் இல்லாமல் அதிதியிடம் எவ்ளோ காசு வாங்குற என ஜோதிகா கேட்பதும். அதற்கு அதிதி, காசுலாம் இல்ல ஓசி தான்னு சொல்லுறதும் தமிழ் சினிமாவுக்கு புதுசு.

அண்ணன் பொருள் தனக்கும் சொந்தம்னு அதிதியை கட்டிப் புரள்வதும். அரவிந்த் சாமியின் பிட் படத்தை பார்க்க அதிதியுடன், சிம்பு சண்டையிடும் காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் காதை கிழித்தது.

ஆக்ஷனுக்கு அருண் விஜய். தொப்பையும், தொந்தியுமாக இருக்கும் மற்ற ஹீரோக்களுக்கு மத்தியில், சிக்ஸ்பேக் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் அருண் விஜய் சற்று ஆறுதல்.

கடைசிவரை மொக்கை ஹீரோவாக வலம்வரும் விஜய்சேதுபதி, நான்தான் படத்தோட மெயின்ஹீரோ என ட்விஸ்ட் அடிப்பது யாரும் எதிர்பார்க்காத மொமண்ட்.

படத்தில் உள்ள குறைகள்

4 ஹீரோவுக்கும் சம பில்டப் கொடுப்பதில் மணிரத்னம் நிறைய மெனக்கெட்டுள்ளார். இதன் காரணமாகவே ஸ்கிரீன் பிளேயில் நிறைய தொய்வு. லாஜிக் ஓட்டைகள்.

துபாயில் கரண்ட் கட். வீட்டிற்குள் நுழையும் போதை கும்பல். அடுத்த நிமிடமே உள்ளே நுழையும் போலீஸ். ஒரு ஜெனரேட்டர், பவர்பேக்கப் சிசிடிவி கூடவா இல்லை. லாஜிக்கே இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெயிலுக்கு செல்கின்றார்.

பாலைவனமாய் இருந்த துபாய் இன்னிக்கு வல்லரசு நாடு, நீங்க இன்னும் எவ்ளோ நாள் இப்படி அடிதடின்னு போவீங்க என ரவுடிகளை அருண்விஜய் கேட்பார். ரவுடிகள் மனம் மாறி, அருண் விஜய்யுடன் மீண்டும் அடிதடியில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு எதற்கு துபாய் வல்லரசு நாடு டயலாக் எல்லாம்.

நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற சிம்புவையும், அருண்விஜய்யையும் போலீசைவைத்து தூக்கிய அரவிந்த்சாமி, சென்னை வந்ததும் ஓடி ஒளிந்து கொள்கின்றார்.

தனிஒருவன் அரவிந்த்சாமி போன்று பில்டப் உருவாக்கிவிட்டு, அடுத்த காட்சியில் மொக்க வில்லன் ரேஞ்சுக்கு பல்ப் கொடுப்பது லாஜிக் இல்லா மேஜிக்.

ஜோதிகாவை ஒரு புரியாத புதிராகவே காட்டுவதும். கிளைமேக்சில் புஸ்வானமாக்குவதும் பரிதாபம். ஜோதிகா யாருடன் பேசினாலும் ரோமன்ஸ் மூடிலேயே பேசுவது பலவிதங்களில் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

படத்தில் புரியாத காட்சிகளை, படம் முடிந்த பின் ஆங்கில எழுத்தில் பிளாஸ்பேக்காக காட்டியுள்ளார் மணிரத்னம். அத படிக்க தெரிஞ்சா நேர இங்கிலீஷ் படத்த பார்க்க போயிடமாட்டோமா? படத்தையும் இங்கிலீஷ்லவே எடுத்திருக்கலாமே.

படம் எப்படி

மணி ரத்னம் ரசிகர்களுக்கு 85 சவீதம் படம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஏ கிளாஸ் ரசிகர்களுக்கு 75 சதவீதம் பிடிக்கலாம். B & C யில் இப்படத்தை எந்த அளவு ரசித்துப் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறியே?

சிம்பு ரசிகர்கள் மட்டுமே பாசிடிவ் ரிவியூ என வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சில காட்சிகளை தவிர பெரும்பாலும் B & C திரையரங்கம் அமைதியாகவே இருந்தது.

படம் ஆவ்ரேச் ஹிட்.

3