விமானங்களில் ஆக்சிஜன் மாஸ்க் இருந்தும் உயிர் பிரியும்! ஆக்ஸிசன் மாஸ்க் எப்படி வேலை செய்யும்? ஆக்சிஜன் கேண்டில் தொழில் நுட்பம் என்றால் என்ன?
ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் ஆக்ஸிசன் மாஸ்க் எப்படி வேலை செய்யும்?
விமானம் திடீரென வானிலை மோசமாக உள்ளது எனில் தாழ்வாகவோ அல்லது உயர்வாகவோ பறக்க வாய்ப்பு உண்டு.
பறவைகள் விமானத்தின் எதிரில் திடீரென வந்தாலும் விமானிகள் சட்டென விமானத்தை அதிக உயரத்திற்கு பறக்க வைப்பார்கள்.
விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது, ஆக்ஸிசன் மண்டலத்தை விட்டு வெளியில் செல்ல நேரிடும். இதனால் விமானத்தில் ஆக்ஸிசன் குறைபாடு உண்டாகும்.
விமானங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. இருப்பினும் ஆபத்து நேரங்களில், ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்தப்படுகின்றது.
விமானத்தில் பொதுவாக அதிக எடையுடைய பொருட்கள் ஏற்றப்படுவதில்லை. அதிக சுமையுடன் விமானம் பறப்பது ஆபத்து. இதன் காரணமாக, ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்வதில்லை.
ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், ஆக்சிஸன் மாஸ்க் எப்படி வேலை செய்யும்? ஆபத்து நேரத்தில் ஆக்சிஜன் மாஸ்க்கை பயன்படுத்தியே மக்கள் உயிர் தப்பிக்க முடியும்.
ஆக்சிஜன் கேண்டில் தொழில் நுட்பம் என்றால் என்ன?
ஆக்சிஜனை உருவாக்க, விமானங்களில் ஆக்சிஜன் கேண்டில் (oxygen candle) என்கின்ற தொழில்நுட்பமுறை பயன்படுத்தப்படுகிறது.
அதாவது, சில வேதிப்பொருட்களை கொண்டு அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் ஜெனரேட் செய்யப்படுகின்றது.
சோடியம் குளோரைடு அல்லது பேரியம் பெராக்சைடு வேதிப்பொருளை வெப்பப்படுத்தும்போது அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் உருவாக்கப்படுகிறது.
அப்படி உருவாக்கப்படும் ஆக்சிஜன்கள், எமர்ஜென்சி மாஸ்க்குகள் வழியாக பயணிகளுக்கு கொடுக்கப்படும்.
விமானங்களில் ஆக்சிஜன் மாஸ்க் இருந்தும் உயிர் பிரியும்!
ஆக்சிஜன் மாஸ்க்குகளை 10 முதல் 30 வினாடிகளுக்குள் அணிந்துவிடுவது உயிருக்கு பாதுகாப்பு. இல்லையெனில், பதற்றத்தில் மயக்கமடைய நேரிடும். உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு.
இந்த ஆக்சிஜன் சப்ளை 20 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். அதற்குள் விமானி, விமானத்தின் உயரத்தை குறைத்து ஆக்சிஜன் மட்டத்தை அடைந்துவிடுவார்.
ஒருவேளை, விமானி சுயநினைவிழந்து ஆக்சிஜன் மட்டத்தை அடையவில்லையெனில், ஆக்சிஜன் தீர்ந்து விமானத்தில் உள்ள அனைவரும் உயிரிழக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு.
விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது? படிக்க கிளிக் செய்யவும். முகநூல் பக்கம்