Home Blog Page 2

ஜெய்ஹிந்த் வார்த்தை உருவான வரலாறு!

0
ஜெய்ஹிந்த் வரலாறு

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை எப்படி உருவானது? ஜெயஹிந்த் என்ற வார்த்தை எப்படி பிரலம் அடைந்தது? அதன் அர்த்தம் என்ன? வந்தே மாதரம் விடுதலைப் போராட்டம்.

வார்த்தை வரலாறு

புதிய வார்த்தைகள் எப்படி உருவாகிறது? யாரால் உருவாக்கப்படுகிறது? என இன்று நம்மிடம் தரவுகள் சேமிக்கும் தொழில்நுட்பம் இருக்கலாம். ஆனால், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆதாரங்கள் திரட்டுவது சுலபமான காரியம் அல்ல.

மன்னர்கள் காலம் தொட்டே எத்தனையோ ஆதாரங்கள், எதிரி நாட்டு அரசர்களால் அழிக்கப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள கோவில் கல்வெட்டு, சிற்பம், ஓவியம், ஓலைச்சுவடி, இலக்கிய பாடல்கள் மூலம் வரலாறுகளை அறிந்து வைத்து இருக்கிறோம்.

அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழ் தான் உலகின் மூத்த மொழி என நாளுக்கு நாள் புதிய புதிய ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது.

இவைகளைத் தவிர, பல செவி வழி சொற்கள் உள்ளன. ஆனால் அவற்றிக்கு ஆதாரம் எனக் கேட்டால் கொடுப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. அவை காலம் தொட்டே நாம் செவி வழியாக கேட்ட ஒன்று.

யார் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்? என இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்தக் கேள்வி எழுப்பினால் ஒரே மாதிரி பதில்கள் கிடைக்காது.

ஏன் என்றால்? அவரவர் தங்கள் இனத்தைச் சேர்த்தவர்களை அடையாளப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி ஒருவர் பெயரை கூறுவார்கள்.

இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு பெயர் சூட்டி அதை ஆட்சி செய்து, அதற்கு சுதந்திரம் கொடுத்து இன்று வரை நம்மை பேச வைத்துவிட்டு சென்றவர்கள் ஆங்கிலேயர்கள்.

ஆங்கிலேயருக்கு முன் எத்தனையோ மன்னர்கள் கிட்டத்தட்ட இந்தியாவின் பலபகுதிகளை கையகப்படுத்தி பெரிய சாம்ராஜ்ஜியம் உருவாக்கி உள்ளனர். ஆனால் உருவாக்கிய வேகத்தில் சரிந்தும் விழுந்தனர்.

ஆங்கிலேயர்களால் மட்டுமே ஒரு மிகப்பெரிய நாட்டை ஒற்றுமைப்படுத்தி ஆட்சி செய்து, மக்களாட்சி நாடக மாற்றி இந்தியா என்ற நாட்டை உருவாக்கினர்.

எல்லோரையும் இந்தியர்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதன்பிறகே நமக்கு இந்தியர்கள் என்ற உணர்வும், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது.

அந்த உணர்வை உருவாக்கும் ஒரு மந்திரச்சொல் தான் ஜெய்ஹிந்த். மொழி எதுவாகினும் உணர்வு ஒன்று தான்.

ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் என்றால் “இந்தியா வெல்க” என்று பொருள் படும். “இந்துஸ்தான் கி ஜெய்” என்ற வார்த்தையின் மறுஉருவாக்கம் தான் “ஜெய்ஹிந்த்”.

இந்த வார்த்தையை யார் முதலில் முழங்கியது எனக் கேட்டால் அதற்கும் ஒரு பெரிய வரலாறே உள்ளது.

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதலில் கூறியவர்கள் என இருவர் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் பிள்ளை மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஆபித் ஹசன் சப்ரானி.

செண்பகராமன் பிள்ளை

செண்பகராமன் பிள்ளை இளம் வயது முதலே சுதந்திர போராட்ட வேட்கை கொண்டவர். புரோ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார்.

செண்பகராமன் பிள்ளைசர் வால்டர் வில்லியம் என்ற ஜெர்மானிய ஒற்றர் மூலம் ஜெர்மனி சென்றவர் அங்கேயே பட்டப்படிப்பை முடித்தார். ஹிட்லர் வழியைப் பின்பற்றி இந்திய விடுதலைக்காக பாடுபட்டார்.

1933-ல் சுபாஸ் சந்திரபோஸ் வியன்னாவில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொண்டபோது, சுபாசிடம் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை செண்பகராமன் தெரிவித்ததாக இரண்டு புத்தகங்களின் தரவு கூறுகிறது.

Madras Presidency in Pre-Gandhian Era என்ற புத்தகத்தை எழுதிய சரோஜா சுந்தராஜன், புத்தகத்தில் வியன்னா மாநாடு பற்றி எழுதியுள்ளார்.

Germany’s Asia-Pacific Empire என்ற புத்தகத்தை எழுதிய சார்லஸ் ஸ்டீபன்சன், அந்த புத்தகத்தில் ஜெய்ஹிந்த் பற்றியும் செண்பகராமன் பிள்ளை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.

ஆபித் ஹசன் சப்ரானி

ஆபித் ஹசன் சப்ரானிஆபித் ஹசன் ஜெர்மனி சென்று பொறியியல் பட்டம் பெற்றவர். சந்திரபோஸ் பேச்சால் ஈர்க்கப்பட்டு விடுதலைப்போரில் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார்.

இந்திய தேசிய ராணுவத்திற்கும், சுபாஸ் சந்திரபோஸுக்கும் மொழிப் பெயர்ப்பாளராக செயலாற்றினார். ஆபித் ஹசன் தான் “ஜெய் ஹிந்த்” என்ற வார்த்தையை சுபாசிற்கு பரிந்துரை செய்தார் என்றும் கூறப்படுகிறது.

தாகூர் யஸ்வந் சிங் அவர்கள் கூறிய ஹிந்துஸ்தான் ஹி ஜெய் என்ற வார்த்தையைத் தழுவி ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆபித் ஹசன் உருவாக்கியதாக குர்பச்சன் சிங் மன்கட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

ஜெய்ஹிந்த் பிரபலம் ஆனது எப்படி?

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை யார் முதலில் கூறினார் என்பதைவிட அதை பிரபலப்படுத்தியது சுபாஸ் சந்திரபோஸ்.

இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற காரணமான இந்திய தேசிய இராணுவத்தில், சுபாஷ் தன்னுடைய உரையை முடிக்கும் போது ஜெய்ஹிந்த் எனக் கூறி முடிப்பார்.

அதன்பிறகு, இந்தியா விடுதலை பெற்றதும் முதலில் கொடியேற்றிய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜெய்ஹிந்த் எனக்கூறி உரையாற்றினார்.

ஆகஸ்டு 15, 1947 முதல் அனைத்து அஞ்சல்களில் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.

அனைத்து அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளும், ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்லுடன் முடிவு பெரும்.

1947-ல் நடந்த பிரித்தானிய அரசி எலிசபத் – பிலிப் திருமணத்திற்கு, மகாத்மா காந்தி தன் கையால், “ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்” சால்வையை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.

இன்று வரை, ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் தேசபற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக முழங்குகின்றனர்.

3

சுவாமி விவேகானந்தர் பார்வையில் எதிர்கால இந்தியா

0
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்

சுவாமி விவேகானந்தர் பார்வையில் எதிர்கால இந்தியா கட்டுரை? சுதந்திர தினம், விவேகானந்தர் பிறந்த தினம் கொண்டாடும் நாம் உண்மையில் சுதந்திரமாக உள்ளோமா?

சுதந்திர இந்தியாவில் மக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் தமது காலத்தை பெரும்பாலும் இணையம், இணைய விளையாட்டு, கைபேசியில் தேவையற்ற உரையாடல்களில் தான் நேரத்தை செலவிடுகிறார்கள்.

எவரும் தங்களின் எதிர்காலம் குறித்த எண்ணங்களை முறைப்படுத்துவதும் இல்லை, எண்ணுவதும் இல்லை.

இந்த நிலையில் இளைய தலைமுறை ஒன்றே எதிர்கால இந்தியாவை வளமாகவும், வலிமையாகவும் மாற்றும் என்று கூறிய பெருமகனார் சுவாமி விவேகானந்தர்.

இவரின் எண்ணத்தில் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி நிலை குறித்த சிந்தனைகள் மேலோங்கி இருந்தன.

குடிசைகளில் மறைந்துள்ள இந்தியா

விவேகானந்தர் பிறந்த தினம் சுதந்திர தினம்ஆன்மீக பூமி என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில் மதமும், சாதியும் மக்களின் மனதிலும், உதிரத்திலும் கலந்துவிட்டது. மதம் என்பது மக்களை நெறிப்படுத்த மட்டுமே தவிர வேற்றுமைகளை தூண்ட இல்லை என்பதை மக்களிடம் ஆழமாக கொண்டுச் செல்ல வேண்டும்.

ஆன்மீகம், யுத்தம், கவிதை போன்ற அனைத்து துறைகளிலும் உலகை வென்ற தீரர்களே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர்.

உலகிலுள்ள அனைத்து முன்னேற்றத்திலும் தங்களுடைய உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் பாமர மக்களைப் பற்றி புகழவோ, எழுதவோ செய்கின்றனரா? முற்றிலும் இல்லை!

உயர் வர்க்கத்தினர் உயர்வதற்காக, பாமர மக்களின் உழைப்பை உறிஞ்சி வயிற்றை வளர்த்து வருகின்றனர். கவனிப்பாரற்று ஒருவேளை சாப்பாட்டிற்காக, மொத்த இந்தியாவும் குடிசைகளில் மறைந்து கிடக்கின்றன.

இத்தகைய நிலை மாற வேண்டும். இந்தியாவில் இரண்டு பெரும் தீமைகள் மேலோங்கி உள்ளன “பெண்களை காலின் கீழ் மிதித்து நசுக்குதல், சாதிக்கட்டுப்பாடுகள் மூலம் ஏழைகளை கசக்கிப் பிழிதல்”.

இந்து-இஸ்லாம் ஒற்றுமை

பெரும்பாலும் விவேகானந்தரை இந்துத்துவ ஆன்மீகவாதி என்ற வரையறைக்குள் வைத்துள்ளனர். ஆனால், அவர் மதங்களை கடந்தவர்.

மதம் என்பது அனைவரும் கடவுளை அடைவதற்கான பாதைகளை வகுத்தli அழிப்பது மட்டுமே. ஆனால் அனைவரும் சென்று சேர்கின்ற இடம் ஒன்று தான்.

“இந்தியா இந்து மற்றும் இஸ்லாம் இரண்டறக் கலந்த தேசம். இரு மதங்களின் ஒற்றுமையே இந்தியாவை சக்திமிக்க நாடாக மாற்றும்”

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்

  • நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
  • பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்
  • நல்லவர்களாக இருக்கவும், நன்மை செய்ய முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.

எதிர்கால இந்தியா கட்டுரை இந்தியாவின் எதிர்காலம்

கல்வி எப்படி இருக்க வேண்டும்?

கல்வி என்பது, உன் மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக வாழ்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக மாற்றக் கூடிய, நல்ல ஒழுக்கங்களை வளர்க்கக்கூடிய ஐந்து கருத்துக்களை கிரகித்து அவற்றை நாம் பின்பற்றி நிற்க வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரிய நூல் நிலையம் முழுவதும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட, நீயே அதிகம் கற்றவன் ஆவாய்.

இந்தியாவின் எதிர்காலம் (எதிர்கால இந்தியா கட்டுரை)

இந்தியாவின் எதிர்காலமானது இளைய சமுதாயத்தின் கையில் தான் உள்ளது. துறவும், தொண்டுமே இந்தியாவின் தேசிய இலட்சியங்களாகும். இந்த இரண்டையும் பேணி வளர்த்தால் தானாக முன்னேற்றம் வந்து சேரும்.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி; நாத்திகவாதியாக இருந்தாலும் சரி. உன் சுக துக்கங்களை மறந்து வேலை செய். இதுதான் நீ கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

இந்தியாவின் எதிர்காலம் அழிந்து விட்டா,ல் எல்லா ஞானமும் அழிந்து போய்விடும் நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.

கல்வி, மதம், பெண் சுதந்திரம், தனிமனித சுதந்திரம், உழைப்பு, சகோதரத்துவம் இவை மட்டுமே நாட்டை வளப்படுத்தும், என்பதனை மனதில் நிலை நிறுத்தி இளைஞர்கள் வீணாக நேரத்தை வீணாக்காமல் தம் வாழ்கையையும் நமது பாரத தாயையும் வளமாக்க ஏக மனதோடு பாடுபடுங்கள். இந்தியாவின் எதிர்காலம் வளமாக இருக்கும்.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் ஜனவரி 12. அவரின் எதிர்கால கனவை நோக்கிப் பயணம் செய்து அவரவர் இலக்கை அடைய அயராது உழைப்போம்.

இந்திய சுதந்திர தினம் கொண்டாடும் நாம் எதிர்கால இந்தியா பற்றி சிந்தனை செய்வோம் என சுதந்திர தின நாளில் உறுதியெடுப்போம்.

விவேகானந்தர் பொன்மொழிகள் படங்கள்

இந்தியக் குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

3

திரௌபதி வரலாறு: திரௌபதி யார்? அவள் பிறப்பின் ரகசியம்!

1
திரௌபதி வரலாறு

திரௌபதி வரலாறு: யார் அவள்? பிறப்பின் ரகசியம்! பஞ்ச பாண்டவர்கள் ஐவரை மணந்தும் கற்புக்கரசி என ஏன் போற்றப்படுகிறாள்? புராண கால திரௌபதி எனும் பாஞ்சாலி.

புராண கால பாஞ்சாலி எனும் திரௌபதி வரலாறு

திரௌபதி கோவில்

மகாபாரதம் என்னும் மிகப்பெரிய காவியத்தில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் கண்டிருப்போம். அதில் பல முக்கியமான நாயகன்களும், நாயகிகளும் அடக்கம்.

அப்படிப்பட்ட காவியத்தில் நாயகியாக விளங்குபவளே “திரௌபதி” என்கிற கற்புக்கரசி பத்தினி தெய்வம். இன்றளவும் கோயில் கட்டி இத்தெய்வத்தை கொண்டாடுகின்றனர்.

அப்படிப்பட்ட அவளின் பிறப்பு மற்றும் ஐவரை மணந்தும் எவ்வாறு கற்புக்கரசி பத்தினி தெய்வமானாள்? யார் அந்த திரௌபதி? திரௌபதி வரலாறு என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.

திரௌபதியின் பிறப்பு:

பத்தினி தெய்வம் பாஞ்சாலி

குரு துரோணாச்சார்யாரின் அறிவுரை படி அர்சுனன் பாஞ்சால தேசத்து மன்னன் துருபதனை வீழ்த்தி பாதி ராஜ்யத்தை கைப்பற்றுகிறான்.

இதனால் மணமுடைந்த துருபதன் அவர்களை பழி தீர்க்க வாரிசு வேண்டி மிகப்பெரிய யாகத்தை நடத்துகிறான்.

யாகத்தில் த்ருஷ்டத்யுமனன் என்ற மகன் தோன்றினான். அதன் பின் யாகத்தீ விண்ணை முட்டுகிறது. தீயில் இருந்து மறுபடியும் ஒரு உருவம் தோன்றுவது போல் தெரிந்தது.

அந்த அக்குரோசமான ஜுவாலையில் இருந்து கரிய நிறத்தில் அழகிய பெண் ஒருத்தி வெளியே வருகிறாள். தோன்றும் போதே வானில் பெரிய அசரீரி ஒலிக்கிறது.

“ குரு வம்சமானது இவளாளே அழியும்” என்று கூறியது. அப்படிப்பட்ட அந்த தீயில் தோன்றிய பெண்ணே “திரௌபதி” ஆவாள்.

இவளே பாஞ்சால நாட்டை சார்ந்ததால் பாஞ்சாலி என்றும், யாகத்தில் தோன்றியதால் யாகசேனி என்றும், கரிய நிறம் கொண்டதால் கிருஷ்ணை என்றும் பெயர்க் கொண்டாள்.

திரௌபதியின் சிறப்பு

அழகில் சிறந்தவள். எவரேனும் கண்டாலும் ஆசை கொள்ளும் அளவிற்கு பேரழிகி. அவளின் உடலில் இருந்து இயற்கையாகவே நீல தாமரையின் மணம் வீசுமாம்.

அழகிலும் அறிவிலும் சிறந்த பெண்ணாக விளங்குபவள். சர்வ லக்சணங்களும் பொருந்திய தேவலோக பெண்ணைப் போல் விளங்கினாள்.

திரௌபதியின் சுயம்வரம்

துருபதன் திரௌபதிக்கு திருமணம் நடத்த சுயம்வரம் அறிவித்தார். பல்வேறு தேச இளவரசர்களும், அரசர்களும் கலந்து கொண்டனர். துருபதன் தன் மகளை மணக்க போட்டி அறிவித்திருந்தார்.

கற்புக்கரசி பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்கள்

இயந்திரத்தில் சுற்றும் குறியை யார் சரியாக வில்லால் அடிகிறாரோ அவருக்கே தனது மகளை திருமணம் செய்து தருவதாக கூறினார்.

அர்சுனனே போட்டியில் வென்றார் பாஞ்சாலியை மணக்க ஆயத்தமானார்.

வெற்றி கொண்ட திரௌபதியுடன் குந்தியை காணச் சென்று, வென்ற விஷயத்தை கூறினார் அந்நிலையில் குந்தி வென்றது ஒரு பெண் என்று அறியாது.

வென்ற பொருளை ஐவரும் சமமாகப் பிரித்து கொள்ளுமாறு கூறினார். அனைவரும் அதிர்ந்தனர்.

குந்தியும் உண்மை அறிந்து அதிர்ந்தார். இருப்பினும் அன்னையின் வாக்கின் படி அனைவரும் ஒப்பு கொண்டனர்.

ஐவருடன் திருமணம் நடக்க காரணம் என்ன?

பஞ்ச பாண்டவர்கள்

பின்பு பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் திருமணம் ஏற்பாடனது. பாஞ்சாலியின் தந்தை துருபதனுக்கு மனம் ஒப்பவில்லை. இது குறித்து அவர் யுதிஷ்டிரனிடம் கேட்டார்.

தர்மம் தவறாத யுதிஷ்டிரனும் இந்த திருமணத்தில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை. மேலும் சில உயர்ந்த தர்மத்தை காக்க சட்டங்களை மீறலாம் என்று கூறினார்.

இந்த திருமணமானது நடமுறைக்கு மாறாது ஆனாலும் மிகப்பெரிய தர்மத்தை நிலைநாட்ட போகிறது. ஆனாலும் துருபதன் ஏற்க தயங்கினார்.

திரௌபதி பிறப்பு ரகசியம்

பாண்டவர்கள் அனைவரும் முற்பிறவியில் தேவர்கள். பாஞ்சாலி ஒருத்தி அல்ல நான்கு தேவர்களின் மனைவியின் சக்தியாவாள்.

எமனின் மனைவி சியாமளா, வாயுவின் மனைவி பாரதி, இந்திரனின் மனைவி சசி, இரண்டு அசுவினி குமாரர்களின் மனைவி உஷா ஆகியோரின் சக்தி ஆவாள்.

பஞ்ச பாண்டவர்கள்

1. தர்மன் – எமதர்மன்
2. பீமன் – வாயு
3. அர்சுனன் – இந்திரன்
4. நகுலன் & சகாதேவன் – அசுவினி குமார்கள்.

எனவே தான் அந்த தேவர்களின் அம்சமாக தோன்றிய பாண்டவர்கள் ஐவரும் இவளை மணக்க நேரிட்டது என்பதை வியாசர் ஞான திருஷ்டியின் மூலம் துருபதனிற்கு உணர்த்தினார்.

துருபதனும் திரௌபதியின் பிறப்பு ரகசியம் அறிந்து ஒப்புக் கொண்டு திருமணம் நடந்தேறியது.

திரௌபதியின் கற்பு நெறி

ஐவரின் மனைவியாயினும் திரௌபதி ஐந்து பத்தினி கன்னிகைகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

சீதை, அகலிகை, தாரை, மண்டோதரி, திரௌபதி என்று கற்பு நெறி தவறாது வாழ்ந்த மாதர்களை போன்றுகின்றோம்.

திரௌபதி ஐந்து கணவர்களையும் சமமாக மதித்தாள். ஐவரை தவிற பிரிதொருவரை நினைக்கவில்லை.

மேலும் ஒருவரிடம் கூடிய பிறகு மற்றொருவரிடம் செல்லும் போது மீண்டும் கன்னித்தன்மையை அடையும் வரம் பெற்றிருந்தாள்.

எனவே கணவர் ஐவருடன் ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தாள். வேறு எவர் மீதும் எந்த ஒரு இச்சையும் கொண்டதில்லை.

திரௌபதியின் சபதம்

கற்பு நெறி தவறாத திரௌபதியினை சூதில் வென்று துரியோதனன் சபையில் துச்சாதனன் அவளை நிர்வாணபடுத்த துகிள் உறித்தான்.

கிருஷ்ண பக்தியினால் அவள் காப்பாற்ற கிருஷ்ணனை அழைத்தாள். அவள் கற்பு தவறாத மங்கை. ஆதலால் அவள் துகில் நீண்டுக் கொண்டே சென்றது. மானம் காத்தருளினான் கிருஷ்ணன்.

தன் மானத்தை பங்க படுத்திய துச்சாதனனின் மார்பின் குருதியை தன் தலையில் பூசும் வரை கூந்தலை வாரி முடியேன் என சபதம் எடுத்தாள்.

தன் தொடையில் அமர சொன்ன துரியோதனின் தொடை நொருங்கும் வரை தன் சினம் தீராது என சபதம் மேற்கொண்டாள். அதன்படியே மகாபாரத யுத்தம் மூண்டு கௌரவர்கள் அனைவரும் மாய்ந்தனர்.

திரௌபதி என்கிற பத்தினி தெய்வம்

கற்புக்கரசி

பல்வேறு இன்னல்கள் வந்த போதிலும் தன் கணவர்கள் ஐவருக்கும் உறுதுணையாய் நின்று கௌரவ வம்சத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார்.

அந்த பத்தினி தெய்வத்திற்கு இன்றளவும் பல்வேறு இடங்களில் கோயில்கள் அமைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பக்தி, கற்பு, பெண்ணியம் மற்றும் ஒழுக்கத்திற்கும் சான்றாக விளங்கிய அந்த மகாசக்தியே திரௌபதி அம்மன் ஆவாள்.

3

உலகின் மிகப்பெரிய தீவு எது? | டப் 10 பட்டியல்

2
உலகின் மிகப்பெரிய தீவு டப் 10 தீவுகள்

உலகின் மிகப்பெரிய தீவு மற்றும் பரப்பளவு. உலகின் டாப் 10 தீவுகள் பட்டியல். world biggest island. உலகின் பழமையான தீவு எது? கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு ஆகும்.

1.கிரீன்லாந்து – Greenland (2,130,800 sq km / 822,700 sq mi)

கிரீன்லாந்து greenland top 10 world biggest island கிரீன்லாந்து ஆர்டிக் பெருங்கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட  கனடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்து உள்ளது.

இதுவே உலகின் மிகப்பெரிய தீவு (world biggest island).  822,700 சதுர மைல் பரப்பளவைக் கொண்டு உள்ளது. டென்மார்க்கின் தன்னாட்சி நாடான இங்கு 55,984 பேர் வசிக்கின்றனர்.

பனிப்படலம் மற்றும் கனிம வளம் மிகுந்த தீவு இது. எனவே இதை விலைக்கு வாங்க அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கிரீன்லாந்து மீது அதிக கவனம் செலுத்துகின்றன.

2.நியூ கினியா – New Guinea (785,753 sq km / 303,381 sq mi)

நியூ கினியா தீவு ஆஸ்திரேலிய கண்டத்தின் அருகில் உள்ளது. இது ஆஸ்திரேலிய கண்டத்தைச் சார்ந்தது. 303,381 சதுரமைல் பரப்பளவைக்கொண்டுள்ள இதுவே உலகின் இரண்டாவது பெரிய தீவு ஆகும்.

ஒரே தீவு என்றாலும் பப்புவா, மேற்கு பப்புவா என இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தீவுக்கு என பழங்கால வரலாறுகள் உண்டு.

இங்கு பழங்குடியினர் பலர் வசிக்கின்றனர். பல மொழி பேசும் மக்களும் உள்ளனர். இந்தியாவில் அடிமைகளாக குடியேறிய மக்கள் இன்றளவும் இத்தீவு பகுதியில் வசிக்கின்றனர்.

3.போர்னியோ – Borneo (748,168 sq km / 288,869 sq mi)

போர்னியோ உலகின் மூன்றாவது பெரிய தீவு. 288,869 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்த தீவுவை மலேசியா, இந்தோனேசியா, புரூணை ஆகிய நாடுகள் ஆளுமையை பகிர்ந்து கொண்டு உள்ளது.

இந்த தீவு பழமையான மலைப்பகுதிகளை கொண்டு உள்ளது. மேலும் உலகின் பழமையான தாவரங்களும், விலங்குகளும் இந்த தீவில் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

4.மடகாஸ்கர் – Madagascar (587,041 sq km / 226,658 sq mi)

மடகாஸ்கர் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆப்ரிக்க கண்டத்தை ஒட்டி அமைந்து உள்ளது. 226,658 சதுர மைல் பரப்பளவை கொண்ட தீவு இது. உலகின் நான்காவது பெரிய தீவு.

இந்த தீவு குமரிக்கண்டத்தில் இருந்து பிரிந்து சென்று இருக்கலாம் என இன்றுவரை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் ஆதாரத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாரி மன்னன் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற தேவவாக்கு விலங்கு என்ற தேவாங்கு இனம் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தேவாங்கு பொதுவாக தமிழகம் மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படும்.

அப்படிப்பட்ட லெமூர் வகை இனம் கண்டங்களின் இடப்பெயர்ச்சியின் போது இடம்பெயர்ந்து இருக்கலாம் என எண்ணப்படுகிறது.

5.பாஃபின் தீவு – Baffin Island (507,451 sq km / 195,928 sq mi)

பாஃபின் தீவு கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது. 195,928 சதுரமைல் பரப்பளவை கொண்டு உள்ளது. 11,000 பேர் இங்கு வசிப்பதாக 2007-ல் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பனிக்கட்டி பறைகள் கிரீன்லாந்து, பப்பின் தீவுகளில் முதலில் உருவாகி இருக்காலம் என கண்டறியப்பட்டு உள்ளது. இது கனடாவின் பெரிய தீவு என அழைக்கப்படுகிறது. உலகின் ஐந்தாவது பெரிய தீவு இதுவாகும்.

6.சுமாத்ரா – Sumatra (443,065 sq km / 171,068 sq mi)

சுமாத்ரா தீவு இந்தோனேசியா அருகில் அமைந்து உள்ளது. மொத்தம் 171,068 சதுர பரப்பளவைக் கொண்டு உள்ளது. 2005-ன் கணக்கெடுப்பின்படி இங்கு 45 மில்லியன் மக்கள் வசித்தனர்.

2004-ல் சுனாமி இந்த தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மூலம் உருவானது. அங்கு இருந்து பலநாடுகளில் பல்லாயிரம் உயிர்களைக் காவு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

7.ஹொன்ஷூ – Honshu (225,800 sq km / 87,200 sq mi)

ஒன்சு (ஹொன்ஷூ) என அழைக்கப்படும் இந்த தீவு ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. உலக அளவில் 7-வது பெரிய தீவு. மொத்த பரப்பளவு 87,200 சதுரமைல் பரப்பளவு. இது மக்கள்தொகை அதிகம் கொண்ட இரண்டாவது தீவு

இது ஒரு அபாயகரமான தீவு. அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படும். எனவே இங்குள்ள மக்கள் எப்பொழுதுமே தங்களை நிலநடுக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

8.விக்டோரியா தீவு – Victoria Island (217,291 sq km / 83,897 sq mi)

விக்டோரியா தீவு 83,897 சதுர மைல் பரப்பளவை கொண்ட உலகின் எட்டாவது பெரிய தீவு. இதுவும் கனடாவின் ஆர்டிக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றாகும்.

விக்டோரியா, தீவுக்குள் தீவு, அதற்குள் மேலும் ஒரு தீவு எனக்கொண்டுள்ளது. இது கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய தீவு என அழைக்கப்படுகிறது.

9.கிரேட் பிரிட்டன் – Great Britain (209,331 sq km / 80,823 sq mi)

பிரித்தானியா என அழைக்கப்படும் கிரேட் பிரிட்டன் தீவு 80,823 சதுரமைல் பரப்பளவை கொண்டு உள்ளது. இது மக்கள் தொகை அதிகம் கொண்ட மூன்றாவது தீவு. பரப்பளவில் உலகின் 9-வது பெரிய தீவு.

ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த இது உலக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்பொழுது லண்டனை தலைமையகமாக கொண்டு யுனைட்டெட் கிங்டம் என அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் இந்த தீவுகளில் தான் உள்ளன.

10.எல்லேஸ்மியர் – Ellesmere Island (196,236 sq km / 75,767 sq mi)

75,767 சதுர மைல் பரப்பளவை கொண்ட எல்லேஸ்மியர் தீவு கனடாவின் ஆர்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ளது. ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களில் இதுவும் ஒன்று.

கனடாவின் மூன்றாவது பெரிய தீவு இது. உலகின் பத்தாவது பெரிய தீவு இது. இத்தீவு முழுவதுமே மலைத்தொடர் சூழ்ந்து காணப்படுகிறது. ஆர்க்டிக் வில்லோ என்ற மரவகை மட்டுமே இங்கு வளரும்.

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
உலகில் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை
உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்
உலகின் உயரமான மலை டாப் 10 லிஸ்ட்
3

ஆறு – நதி பெயர் வந்தது எப்படி? | river in tamil

1
ஆறு நதி river in tamil நீர்நிலைகள்

ஆறு என்றால் என்ன? நதி எப்படி உருவாகிறது? river in tamil மனித நாகரிகத்தின் முதல் பிறப்பிடம் ஆறு. ஆற்றங்கரை காட்டிய வழிகள் மூலமே மனிதன் பல இடங்களுக்கு குடி பெயர்ந்தான்.

ஆறு – அறு பொருள்

ஆறு (river) என்றால் தமிழில் வழி என்ற பொருள் உண்டு. அதனால் தண்ணீர் செல்லும் வழி என்பதால் ஆறு எனப் பெயர் வந்ததாக பல தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அது மட்டும் அப்பெயர் வரக்காரணம் அல்ல.

நிலப்பகுதியை இரண்டு துண்டாக அறுத்துக்கொண்டு செல்வதால் இதை அறு என்று அழைத்தனர். அறு என்றால் ஆறு என்று பொருள் உண்டு. அறுசுவை, அறுபொழுது என்ற வார்த்தைகள் இதற்கு சான்று. இப்படித்தான் பெயர் வந்தது.

நதி என்பது சமஸ்கிருதமா?

‘‘காவிரி தென்பெண்ணை, பாலாறு – தமிழ்

கண்டதோர் வைகை பொருனை நதி – என

மேவிய ஆறு பலவோடத் – திரு

மேனி செழித்து தமிழ்நாடு”

– பாரதியார் பாடல்

பாரதியார் வந்த பின்பு தமிழ் மொழியில் அதிகம் சமஸ்கிருதம், வடமொழி சொற்கள் புகுந்தன. அதை அவரே அவரது நூலில் குறிப்பிட்டும் உள்ளார்.

சங்க கால இலக்கியங்களில் நதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆறு என்று தான் புலவர்கள் தங்கள் இயற்றிய பாடலில் குறிப்பிட்டு உள்ளனர்.

‘‘போலும் நான்முகனையும் பொன்னிமா நதி”
‘‘எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்குமால்” (57)

– சேக்கிழார் பெரிய புராணம்

ஆனால், 12-ம் நூற்றாண்டுக்குப்பிறகு ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்ற புலவர்கள் நதி என்ற வார்த்தையை பயன்படுத்தி பாடல் இயற்றி உள்ளனர். பிற்கால இலக்கியங்களில் மட்டுமே நதி என்ற வார்த்தை உள்ளது.

“நதியாறு கடந்து நடந்துடனே” 

– கலிங்கத்துப்பரணி ஜெயங்கொண்டார்

நதியாறு என இரண்டு சொல்லையுமே ஜெயங்கொண்டார் பயன்படுத்தி பாடியுள்ளார். எனவே நதி + ஆறு என்பது ஓரே பொருள்தரும் சொல் அல்ல.

மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் நதி என்றும்; கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் நதம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்பகாலத்தில் நதி என்பதை முழுவதும் ஆறுகளுடன் ஒப்பிடவில்லை. திசையை வைத்தே தமிழகத்தில் பாயும் ஆறுகளை நதிகள் என்று குறிப்பிட்டு உள்ளனர். காலப்போக்கில் நதி என்றால் ஆறு என்று மாறிப்போனது.

நதி என்ற சொல் சம்ஸ்கிருதம் மொழியிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கிருந்து தான் தமிழுக்கு வந்தது என்ற போதிய ஆதாரம் கிடைக்கவில்லை.

மேலும், நதி என்ற சொல் பிற்கால இலக்கியங்களிலேயே இடம்பெற்று உள்ளது. எனவே, இது தமிழுக்குச் சொந்தமான சொல் என்பதையும் உறுதிப்பட கூறமுடியவில்லை. வேறுசில மொழிகளிலும் இச்சொல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆற்றங்கரை நீர்நிலை

ஆறு (river) எப்படி உருவாகிறது?

பொதுவாக ஆறுகள் மலைப்பகுதிகளில் உருவாகி தாழ்வான இடங்கள் வழியாக கடலில் சென்று கலக்கும். மழைப்பொழிவு, பனிக்கட்டிகள் கரைவது மூலம் ஆறு உருவாகும்.

ஆற்று நீர் என்பது மேல் பகுதியில் ஓடும் நீர் மட்டுமல்லாமல் நிலத்திற்குள் செல்லும் நீரோட்டத்தையும் சேர்த்தே கணக்கிடப்படுகிறது. நீரோட்டம் புவிஈர்ப்பு விசை மூலம் உருவாகிறது.

மலை மற்றும் மலைத்தொடர் பகுதிகளில் மழை பொழிவதன் மூலம் பள்ளங்கள் நிரம்பி அருவியாக கீழே கொட்டுகின்றன. அந்த தண்ணீர் நிலத்தை அறுத்துக்கொண்டு கடலில் கலக்கின்றது.

ஆற்றை, ஆற்றங்கரை பகுதில் இருந்து பரிசல், படகு, ஓடம் மூலம் மட்டுமே கடக்க முடியும். கால்களால் நடந்து செல்லும் அளவு மட்டுமே தண்ணீர் கொண்ட பகுதிகள் ஓடை என அழைக்கப்படுகிறது.

மழை மிகுதியால் ஓரிரு நாட்கள் மட்டுமே தண்ணீர் செல்லும் ஆறுகள் காட்டாறு என அழைக்கப்படுகிறது. அதேபோல், நீர் கடலில் கலப்பதற்கு முன்பே மண்ணால் உறிஞ்சப்பட்டுவிட்டால் அல்லது வற்றிவிட்டால் அது சிற்றாறு என அழைக்கப்படுகிறது.

நீர்நிலை பெயர்கள்

சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பது இயற்கையாக தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். ‘குட்டை’ என்பது மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளிப்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘குளம்’.

ஊரார் உண்பதற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தும் நீர்நிலை ‘ஊருணி’. ஏர்த் தொழிலுக்குப் பயன்படுவது ‘ஏரி’. மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நீர்நிலை ‘ஏந்தல்’. கண்ணாறுகளை உடையது ‘கண்மாய் ‘ என்றும் அழைக்கப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய நீர்நிலை பெயர்களும் உள்ளது. உலகின் மிக நீளமான ஆறுகள்

3

செல்வ மழை பொழிய வைக்கும் ஐஸ்வர்ய லட்சுமி திருக்கோவில்

0

செல்வ மழை பொழியும் ஐஸ்வர்ய மகாலட்சுமி. கணவன் மனைவி பிரச்சனைகளை சரி செய்யும் காமேஸ்வரர் ஆலயம். வில்வ மரமாக காட்சி தரும் மகாலட்சுமி.

உலகில் பல்வேறு வளங்கள் இருப்பினும் செல்வ வளம் என்பது இன்றியமையாத ஒன்று. நமது வாழ்வில் அதிகமான நேரத்தை பணம் ஈட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றோம்.

இத்தகைய செல்வத்திற்கு அதிதேவதையாக விளங்குபவள் திருமாலின் நாயகியான அன்னை மகாலட்சுமி. அவள் அருளால் மட்டுமே அனைத்து செல்வத்தையும் பெற முடியும் என்கிறது வேதம்.

மகாலட்சுமி சிவ லிங்கத்தை பிரதிட்டை செய்து தவமியற்றி வரம் பெற்ற அற்புதமான திருத்தலமே வெள்ளூர் திருக்காமேஸ்வரர் திருக்கோவில்.

திருத்தல வரலாறு

தட்சன் மகளாக பிறந்த தாக்சாயனி தேவி தமது தந்தை வளர்த்த யாகத்தீயில் தன்னை மாய்த்து கொண்ட புராணக் கதை நாம் அறிந்ததே. அதன் பின் அன்னை பார்வதிக்கு சிவன் உயிர் வழங்கிய திருத்தலம் இதுவே ஆகும்.

காமனை தனது நெற்றிக்கண் சுவாலையால் தகனம் செய்த பின் ரதி தேவியின் கடும் தவத்தால் மன்மதனுக்கு உயிர் வழங்கியதால் இறைவன் திருக்காமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.

சிவபெருமான் பஸ்மாசுரன் என்ற அரக்கனுக்கு  எவர் தலையில் அவன் கை வைப்பினும் அவர் சாம்பல் ஆவார்கள் என்ற வரத்தினை அளித்து, பின் அவன் சிவபெருமானின் தலையிலேயே கை வைத்து சோதிக்க வந்தான்.

இதனைக்கண்ட மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அந்த அரக்கனை நடனமாடி சாம்பலாக்கி அழித்தார்.
பின் ஹரனும், ஹரியும் இணைந்து ஹரிஹர புத்திரன் ஐயன் ஐயப்பன் தோன்றினார்.

மகாவிஷ்ணு பெண் உருவெடுத்து மகவு பெற்றத்தால் கோபம் கொண்ட மகாலட்சுமி வில்வாரண்யமான வெள்ளூரில் சிவனை நோக்கி தவம் புரிந்தார் ஆனால் சிவன் தோன்றவில்லை.

எனவே மகாலட்சுமியே வில்வ மரமாக மாறி தவம் புரிந்து லிங்கத்தின் மேல் வில்வ மழை பொழிந்தால். இதனால் மனம் இறங்கி இறைவன் மகாலட்சுமி முன் தோன்றி ஐயப்பனின் அவதார நோக்கத்தை எடுத்துரைத்தார்.

அதன் பின் கோபம் தீர்ந்த லட்சுமி தேவிக்கு ஸ்ரீவஸ்ச முத்திரையுடன் சிவ லிங்கத்துடன் கூடிய மணிமகுடத்தை மகாலட்சுமிக்கு சூட்டி செல்வத்திற்கே அதிபதி ஆக்கினார் என்கிறது தலபுராணம்.

இங்கே தட்சிண பாகத்தில் (வடமேற்கில்) மகாலட்சுமி இன்றும் விலவ மரமாக காட்சி அளிப்பது சிறப்பான ஒன்றாகும்.
வேறு எங்கும் இல்லாத வகையில் தாயார் ஐஸ்வர்ய மகாலட்சுமி தனிசன்னதியில் அபயவரதத்துடன் பத்மாசனத்தில் காட்சி அளிக்கிறார்.

ஒரே சன்னதியில் இரண்டு பைரவர்கள்

முசுகுந்த சக்ரவர்த்திக்கு வலாசுரனை அழிக்க ஆயுதங்கள் அளித்து பைரவரே படைத்தளபதியாக சென்று வெற்றியை தந்தமையால் இவ்வூர் வெள்ளூர் எனப் பெயர்பெற்றது.

மறுபிறவி தந்த மன்மதனுக்கு பைரவர் ஞான பைரவராக காட்சி கொடுத்து ஞானத்தை வழங்கினார். எனவே கால பைரவர், ஞான பைரவர் என்று இரண்டு பைரவராக ஒரே சன்னிதியில் எழுந்துருளி உள்ளார்.

கல்வி பயிலும் மாணவர்கள் ஞாயிறன்று ராகு காலத்தில் ஞான பைரவரை விளக்கேற்றி வழிபட கல்வியில் சிறந்து விளங்குவர். ஞானத்தை பொழிபவராக விளங்குகிறார் ஞான பைரவர்.

சித்தர்களின்  பூமி

போகர் ஏழாயிரம் என்ற நூலில் போகர் திருக்காமேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபோக சக்கரத்தை உருவாக்கி அதன் மேல் தவமியற்றி வேறு எங்கும் சித்திக்காத சித்த வித்தைகளை பெற்றார் என்கிறது.

மேலும் போகர், புலிப்பாணி, பாம்பாட்டி சித்தர் ஆகியோரின் தலைமையில் சித்தர்கள் பலரும் இங்கே தவமியற்றி பல்வேறு சித்துக்களை பெற்றனர் என்கிறது தலபுராணம்.

இன்றும் கோவிலின் ஈசான பாகத்தில் போகர் தவமியற்றிய சுரங்கம் உள்ளது. அகத்தியர் நாடி, காகபுஜன்டர் நாடி, வசிஷ்ட நாடிகளில் வேறெங்கும் சித்தர்களுக்கு சித்திக்காத சித்துக்கள் இங்கே வெள்ளூரில் சித்திக்கும் என்ற குறிப்பு உள்ளது.

இங்கே சித்துக்களில் கைதேர்ந்த பின்பே போகர் பழனிக்கு சென்றார் என்கிறது தல வரலாறு.

கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்

இங்கே ரதி மன்மதனை மீண்டும் இறைவன் இணைத்து வைத்தார். எனவே இங்கு வந்து திருக்காமேஸ்வரர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பிகையை வணங்கினாள் கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது கண்கூடு.

ரதியும் மன்மதனும் தம்பதி சமேதராக இறைவனை வணங்கும் சிற்பம் இங்கே கோவில் உள்ளது.

சுக்ரவார பூஜை

தங்கம் மற்றும் வெள்ளி உருக்கி நகைகள் செய்வதினால் ஐஸ்வர்ய தோஷம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.

தங்க வெள்ளி வேலை செய்வோர் இங்கே சுக்ர (வெள்ளிக்கிழமை) வாரத்தில் சுக்ர ஓரையில் (காலை 6 முதல் 7 வரை) ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு 16 தாமரை மலர்கள் சாற்றி 16 நெய் தீபம் ஏற்றி 16 முறை வலம் வந்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கி செல்வ வளம் பெருகும்.

இங்கே பிரதோஷம் மற்றும் சோம வார பூஜைகளை காட்டிலும் சுக்ர வாரத்தில் சுக்ர ஓரை தரிசனமே சிறப்பானதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்ய வலம் பெருக்கும் வெள்ளூர்

பாற்கடலில் தோன்றிய அன்னை மகாலட்சுமியை வெள்ளூர் சென்று ஐஸ்வர்ய மகாலட்சுமியாக தரிசனம் செய்து திருக்காமேஸ்வரர் சிவகாமசுந்தரியின் பரிபூரண அருள் பெற்று அனைவரும் இன்புற்று வாழ்வோம்.

கோவில் எங்கே இருக்கிறது?

திருச்சி முசிறியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெள்ளூர்.

3

பொங்கல் மகர சங்கராந்தி இரண்டிற்குமான தொடர்பு?

1
பொங்கல் மகர சங்கராந்தி காணும் பொங்கல்

பொங்கல், மகர சங்கராந்தி இரண்டிற்குமான தொடர்பு? மகர சங்கராந்தி வேறு பெயர்கள்  லோஹ்ரி (Lohri), சுகாரத், பொகாலி பிகு (bogali bihu). காணும் பொங்கல்

தை மாதம் பிறப்பு

தை மாதம் சூரியனுக்கு வரவேற்பு நாளாகவும் தானிய அறுவடை காலமாகவும் திகழ்கின்றது.

இந்தியா மட்டுமில்லாமல் தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நோபாளம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் ஹிந்து மக்களால் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.

சங்கராந்தி வேறு பெயர்கள்

பொகாலி பிகு லோஹ்ரி

சீக்கிய மற்றும் வடஇந்திய மக்கள் ‘லோஹ்ரி’ (Lohri) என்றும், மத்திய இந்தியர்கள் ‘சுகாரத்‘ என்றும், அசாம் இந்துக்கள் ‘பொகாலி பிகு‘ (bogali bihu) என்றும் சங்கராந்தியை அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஹிந்துக்கள் மற்றும் பிற தெற்கு இந்திய மாநிலங்களில் பொங்கல் அல்லது சங்கராந்தி பொங்கல் என்று அழைக்கின்றனர்.

புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது.

இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது.

பெரும்பாலான இந்து பண்டிகைகள் சூரிய சந்திர கிரகணம் பொறுத்து, சந்திர நாட்காட்டியை வைத்தே முடிவு செய்யப்படுகின்றன.

எவ்வாறு மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது?

பண்டிகை நாளில் புதிய ஆடைகளுடன், வீட்டைச் சுற்றி வண்ண கோலங்கள், அலங்கரிப்பு என ஒரே வண்ணமயமாக தோற்றமளிக்கும்.

இப்பண்டிகையின்போது பெரும்பாலும் இனிப்பு உணவுப்பண்டங்களே தயாரிக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் எள்ளுருண்டை, பிற இனிப்பு உணவுகள் தயாரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பால், வெல்லம் சேர்த்து செய்யும் பச்சரிசி பொங்கல், பனங்கிழங்கு மற்றும் கரும்பு வைத்து கடவுளை தரிசிக்கின்றனர்.

பொங்கல் – சங்கராந்தி தொடர்பு

மகர சங்கராந்தி என்பது முற்றிலும் சூரிய வழிபாட்டை மையப்படுத்திய பண்டிகை. பொங்கல் சூரிய வழிபாடு மட்டும் அல்ல.

அறுவடை, உழவு, மட்டுமன்றி இவற்றிக்கு காரணமான காளை வணங்கும் விதமாக மாட்டுப்பொங்கல் என தனி ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடுகின்றனர்.

காணும் பொங்கல்

காணும் பொங்கல்மூன்றாம் நாள் காணும் பொங்கல். கன்னிப் பெண்கள் மணவாளானை காணும் நாள். பிற்காலத்தில் காணும் இயற்கையை ரசிக்கும் நாளாக மாறிப்போனது.

தை மாதத்தை வெகுவிமர்சையாக கொண்டாடி வரவேற்பது தமிழ் நாட்டில் மட்டுமே சிறப்பாக நடைபெற்று வருகிறது.

3

பொங்கல் என்றால் என்ன? தைப்பொங்கல் வரலாறு

0
பொங்கல் மாட்டுப்பொங்கல் தைப்பொங்கல் வரலாறு தமிழர் பண்டிகை

பொங்கல் என்றால் என்ன? பொங்கல் பெயர் வந்தது எப்படி? தைப்பொங்கல் வரலாறு. மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் இது தமிழர் பண்டிகை.

உழவர்களும், உளவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள். கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல்.

தைப்பொங்கல் வரலாறு

பழங்காலத்தின் நெற்பயிர் விதைத்து அறுவடை செய்ய குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். ஒரு வருடத்தில், ஒரு வயல் 6 மாதங்கள், நெல் அறுவடைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆடியில் விதைத்த பயிர் நன்கு விளைச்சலை அடைந்து அறுவடை செய்யத் தயாராகும்  மாதமே தை.

தமிழரின் நீண்ட நெடுங்காலப் பயிர் இந்த நெல். நெல்லுச்சோறு என்பது அந்தக் காலத்தில் அடிக்கடி சமைக்கமாட்டார்கள்.

விசேச நாட்களில் மட்டுமே நெல்லுச்சோறு சமைப்பது வழக்கம். தினமும் நெல்லுச்சோறு உண்டால் அவர் அந்த ஊரின் செல்வந்தர் என்பர்.

எனவே, தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உருவானது. காளைகளுக்கு வைக்கோல் கிடைக்கும். விவசாயிக்கு நெல் மணிகள் கிடைக்கும்.

விற்பனைக்கும் பயன்படுத்தப்படும், உணவுக்கும் பயன்படுத்தப்படும். மன்னர்களுக்கு வரி செலுத்தவும் முடியும்.

தமிழக மன்னர்கள் விவசாயிகளிடம் நெல்களை மட்டுமே வரிகளாக அந்தக் காலத்தில் வசூலித்துள்ளனர்.

தஞ்சாவூர் நெற்களஞ்சியம் மிகவும் பிரபலம். நன்கு விளைச்சல் பெற்றால் தான் வரி செலுத்தியதுபோக மீதத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.

வரி வசூலிக்கப்பட்ட நெல்கள், அரண்மனை நிர்வாக உணவிற்கு செலவிடப்படும். பஞ்சம் வந்தால் மக்களுக்கே கூடத் திருப்பி வழங்கப்படும்.

பொங்கல் என்றால் என்ன? பெயர் வந்தது எப்படி?

புதிய அடுப்பு, புதிய பானை மற்றும் புதிய விறகுகள் மட்டுமே பொங்கல் சமைக்க பயன்படுத்துவது வழக்கம்.

இன்றும் சில ஊர்களில், பொங்கலுக்குச் சில நாட்களுக்குமுன் பனை ஓலையை வெட்டி காயவைத்து அதை மட்டுமே எரித்து சமைப்பார்கள். அதே போன்றே அடுப்பும். செங்கல் அடுக்கி, சேறு பூசி,  சாணி மொளுகி தயார் செய்வார்கள்.

பழங்காலத்தில் பொங்கல் வைக்க மண் பானைகள் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது அதிகம் வெண்கலப் பானை, சில்வர் பானைகள் பயன்படுதப்படுகின்றன.

முதலில் அறுவடை செய்த அரிசியை குத்தி பச்சரிசியாக்குவர். பின்பு புதிய பானையில் அரிசி, வெல்லம், பால், நெய் சேர்த்து சமைப்பர்.

பொங்கல் வெண்நுரை தள்ளிப் பொங்கி வழிவதே பொங்கல் எனப் பெயர் பெற்றது. பொங்கலுடன் அந்த வருடத்தில் என்னென்ன அறுவடை செய்தனரோ அதையும் வைத்து சூரிய வழிபாடு அல்லது இறைவழிபாடு செய்வார்கள்.

பிற்காலத்தில் கரும்பு மட்டுமே பிரதான இடம் பிடித்தது. கரும்பை மட்டும் சேர்த்து வழிபாடு செய்யத் துவங்கினர்.

மாட்டுப்பொங்கல் தமிழர் பண்டிகை

மாட்டுப்பொங்கல்

பொங்கல் மறுதினம் காளை மாடு, பசு மாடுகளை சிறப்பிக்கும் விதமாக, அவற்றை வணங்கி நன்றி தெரிவித்து மாட்டுப்பொங்கல் வைப்பார்கள்.

இந்தப் பொங்கலில் வெறும் பச்சரிசி சோறு மட்டுமே சமைப்பார்கள். அதில் இனிப்பு நெய் எதுவும் சேர்க்காமல் வெறும் பொங்கலாக வைப்பார்கள்.

இதற்கு பெயரே வெத்துப்பொங்கல் அல்லது வெறும் பொங்கல். அதை மாட்டிற்கு ஊட்டிய பின்பு தானும் உண்டு மகிழ்வர்.

காணும் பொங்கல்

இது பிற்காலத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது. இந்த நாளில் உறவினர்களை காண்பது. இயற்கை காட்சிகளை ரசிப்பது வழக்கமாக்கி கொண்டனர்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலேயே இது அதிகம் கொண்டப்படுகிறது. மெரினாவில் திரளான மக்கள்கூடி கடல் அழகை ரசித்து காணும் பொங்கலுடன் பொங்கலை நிறைவு செய்கின்றனர்.

3

English Calendar History | ஆங்கில நாட்காட்டி வரலாறு

0
ஆங்கில நாட்காட்டியின்

English Calendar History: ஆங்கில நாட்காட்டி (இங்கிலீஷ் காலண்டர்), ரோமானிய காலண்டர், ஜூலியன் காலண்டர், கிரகோரியன் காலண்டர் வரலாறு.

ஆங்கில நாட்காட்டி உருவான கதை   (English Calendar History)

உலகில் உள்ள நாட்காட்டிகள் அனைத்துமே சந்திரனையும், சூரியனையும் மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன.

சூரியனை, பூமி ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் (365.2422 நாட்கள்) ஆகும். சந்திரன், பூமியைச் சுற்றிவர 29 நாட்கள், 12 மணி நேரம், 44 நிமிடங்கள் (29.53059 நாட்கள்) ஆகும்.

பூமி, சூரியனைச் சுற்றுவது வருடங்கள் எனவும்; சந்திரன், பூமியைச் சுற்றுவது மாதங்கள் எனவும் கணக்கிடப்படுகிறது.

பூமி, சூரியனைச் சுற்றிவரத் தோராயமாக  365 ¼ நாட்கள் ஆகும். ஒரு வருடத்திற்கு ¼ நாள் அதிகமாக இருக்கும். நான்கு வருடத்திற்கு ¼ நாள் சேர்ந்தால் 366 நாட்கள். லீப் வருடமாக மாறும்.

சந்திரன்,  பூமியைச் சுற்றிவர 29 ½ நாட்கள் ஆகும். ½ நாளை, அடுத்து வரும் மாதத்துடன் சேர்த்தால், 31 நாட்களாக மாறும். இதுவே 30, 31 என்ற வேறுபாட்டிற்கு காரணம்.

 

பழங்கால புத்தாண்டு எப்படி கணக்கிடப்பட்டது?

வெர்னல் ஈக்குவினாக்ஸ் (Vernal Equinox)

வெர்னல் ஈக்குவினாக்ஸ் என்பது இரவும் பகலும் சமமான காலஅளவில் இருப்பதை குறிக்கும். அதாவது, பகல் 12 மணி நேரம்; இரவும் 12 மணி நேரம் என சமஅளவில் இருக்கும்.

வருடத்திற்கு இருமுறை மட்டுமே நிகழும். மார்ச் மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் நிகழும்.

பழங்காலத்தில், மார்ச் மாதத்தில் நிகழும் ‘வெர்னல் ஈக்குவினாக்ஸ்’ நாளே புத்தாண்டாக கொண்டாடப்பட்டுள்ளது.

இதுவே, பல இனத்தவர்கள், பலஆயிரம் வருடங்களுக்குமுன் கடைபிடித்த வருடப்பிறப்பு. வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாகவே கடைபிடிக்கப்பட்டது.

ரோமானிய நாட்காட்டி, ஆங்கில நாட்காட்டியாக மாறிய கதை!

ரோமானிய காலண்டர் (Romania Calendar)

கி.மு. 800-ம் ஆண்டில் ரோமலஸ் என்பவர் ரோம் நகரத்தை நிறுவினார். எனவே, ரோமானியர்கள் எனப் பெயர் பெற்றனர்.

ரோமலஸ், உருவாக்கிய நாட்காட்டியே ரோமானியர்களின் முதல் நாட்காட்டி. பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருக்கும். வருடத்தின் முதல் மாதம் மார்ச்.

  1. மார்சியஸ் – Martius (March) 31,
  2. ஏப்ரலிஸ் – Aprilis (April) 30,
  3. மையுஸ் – Maius (May) 31,
  4. லுனியஸ் – Lunius (June) 30,
  5. குயின்டிலஸ் – Quintilis (July) 31,
  6. செக்ஸ்டைலஸ் – Sextilis (Augest) 30,
  7. செப்டம்பர் –  (September) 30,
  8. அக்டோபர் – (October) 31,
  9. நவம்பர் – (November) 30,
  10. டிசம்பர் – (December) 31.

மொத்தம் 304 நாட்கள்.

304 நாட்கள் ஏன்? 61 நாட்கள் எங்கே?

ரோமானியர்களுக்கு பனி என்றால் பிடிக்கவே பிடிக்காது. பனிப்பொழிவு நாட்களில் வெளியில் செல்லாமல் வசிப்பிடங்களிலேயே முடங்கிவிடுவர்.

எனவே, ரோமானியர்கள் 61 நாட்களை வெறுத்துள்ளனர். இதன் காரணமாகவே 10 மதங்களை மட்டுமே கணக்கிட்டுள்ளனர்.

நமா பாம்பில்லியஸ் நாட்காட்டி (Numa Pompilius Calendar)

நமா பாம்பில்லியஸ் என்பவர் 10 மாதங்களை, 12 மாதமாக மாற்றினார். ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களை வருடத்தின் கடைசியாக சேர்த்தார்.

  1. Martius – 31 days
  2. Aprilis – 29 days
  3. Maius – 31 days
  4. Iunius – 29 days
  5. Quintilis – 31 days
  6. Sextilis – 29 days
  7. September – 29 days
  8. October – 31 days
  9. November – 29 days
  10. December – 29 days
  11. Ianuarius – 29 days
  12. Februarius – 28 days

மொத்தம் 355 நாட்கள்.

இந்நாட்காட்டி, சந்திர மற்றும் சூரிய கிரகணத்தை பொறுத்து அமைக்கப்பட்டது. இருப்பினும், 10 நாட்கள் குறைவாகவே இருந்தது.

பிப்ரவரியை பந்தாடிய மேக்சிமஸ்

நமா பாம்பில்லியசுக்கு பிறகு வந்த ரோம் ஆட்சியாளர்கள், நாட்களைக் குறைப்பதும், கூட்டுவதும்; மாதங்களைக் குறைப்பதும் கூட்டுவதுமாக இருந்துள்ளனர்.

கடைசி மாதமான பிப்ரவரியைப் பந்தாடிக்கொண்டே இருந்துள்ளனர். அதை ஒரு மாதமாகவே பொருட்படுத்துவது இல்லை.

20 நாட்கள், 23 நாட்கள், 27, 28, 29 என அவரவர் இஷ்டத்திற்கு மாற்றியமைத்துள்ளனர். அங்குள்ள அரசியல் குளறுபடிகளால், ஒருவர் செயல்படுத்துவதை அடுத்து வரும் ஆட்சியர் ஏற்றுக்கொள்வதில்லை.

  1. Martius – 31 days
  2. Aprilis – 29 days
  3. Maius – 31 days
  4. Iunius – 29 days
  5. Quintilis – 31 days
  6. Sextilis – 29 days
  7. September – 29 days
  8. October – 31 days
  9. November – 29 days
  10. December – 29 days
  11. Ianuarius – 29 days
  12. Februarius – 28 days
  13. Mercedonius – 23 days

பான்டிபெக்ஸ் மேக்சிமஸ் (pontifex maximus) என்பவர் ஒரு வருடத்தை 377, 378 நாட்கள் எனவும் 13 மாதங்கள் எனவும் மாற்றினார்.

ஜூலியன் நாட்காட்டி (Julian Calendar)

கி.மு. 45-ம் ஆண்டு ரோமானிய மன்னனாக ஜூலியஸ் சீசர் பதவியேற்றார். இவர் ஒரு சர்வாதிகார ஆட்சியர் எனப் பெயரெடுத்தவர்.

ஜனவரி மாதத்தை முதல் மாதமாக அறிவித்தார். ஜனஸ் என்ற ரோமானிய தெய்வத்தைக் குறிக்கும் சொல் லனவரிஸ். அதுவே, ஜனவரி என மாறியது.

வானியல் ஆய்வாளர்கள் பலரின் உதவியோடு, நாள்காட்டியில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் அடிப்படையில் மாதங்களை மாற்றியமைத்தார்.

வானியல் அறிஞர் சொசிசெனசு என்பவரின் முக்கிய ஆலோசனைப்படி, வருடத்திற்கு 365 நாட்கள் எனவும்; 4 வருடத்திற்கு ஒருமுறை லீப் வருடம் எனவும் மாற்றியமைக்கப்பட்டது.

ஜூலியஸ் சீசர் இறந்ததற்கு பின்பு, அவருடைய ஆதரவாளர்கள், குயின்டிலஸ் மாதத்தை ஜூலை எனப் பெயர் மாற்றினர். ஜூலியசின் வளர்ப்புமகன் ஆகஸ்டஸ் பெயரை செக்ஸ்டைலஸ் மாதத்திற்கு சூட்டினர்.

ஜூலியஸ் சீசரும் ஆகஸ்டசும் சரிக்குச்சமமானவர்கள் என ஜூலை, ஆகஸ்டு இரண்டு மாதங்களுக்குமே 31 நாட்கள் என மாற்றினர். 29-தாக இருந்த பிப்ரவரி 28 நாட்களாக மாறியது.

இதுவே தற்பொழுது கடைப்பிடிக்கும் நாட்காட்டி. ஆனால், அதிலும் ஒரு குறை இருந்தது.

கிரகோரியன் நாட்காட்டி (Krikorian Calendar)

கி.பி 1582-ம் ஆண்டு பதிமூன்றாம் போப் கிரகோரி, ஜூலியன் நாள்காட்டியில் உள்ள பிழையை மாற்றியமைத்தார்.

அப்போது, மருத்துவராக இருந்த அலோயிசியஸ் லிலியஸ் என்பவர் ஜீலியன் நாட்காட்டியில் 11 நிமிடம், 14 வினாடி அதிகமாக உள்ளதைக் கண்டறிந்தார்.

இதனால், ஒவ்வொரு 130 வருடத்திற்கும், ஒரு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது. எனவே, புனிதவெள்ளி பண்டிகை வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டே இருந்தது.

அதாவது பூமி, சூரியனை முழுமையாக சுற்றிவரத் துல்லியமாக 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் (365.2422) ஆகிறது. ஆனால், சூலியஸ் சீசர் 365.25 என்ற முறையில் தோராயமாக நாட்காட்டியை உருவாக்கியிருந்தார்.

இதன்படி, நான்கு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளைச் சேர்த்தால், 130 ஆண்டுகளுக்கு 24.22  மணி நேரம் அதிகமாகும்.

அதைச் சரிசெய்ய, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும், ஒரு லீப் ஆண்டு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.

அதாவது, 100-ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 100-லும் 400-லும் வகுபடும் ஆண்டுகள் மட்டுமே லீப் ஆண்டுகளாக கணக்கிடப்பட்டது.

எடுத்துக்காட்டு:-

1700, 1800, 1900 லீப் ஆண்டுகள் இல்லை. ஆனால், 1600, 2000 லீப் வருடங்கள். அடுத்து 2400-வது வருடம் லீப் நூற்றாண்டு வருடமாகும். இடையில் உள்ள 3 நூற்றாண்டுகளின் துவக்க வருடம் (2100,2200,2300) கணக்கில் கொள்ளப்படாது.

இதன் மூலம், 130 வருடங்களுக்கு ஒருமுறை, 1 நாளைக் குறைக்க இயலும்.

கிரகோரியன் நாள்காட்டி மிகச்சரியானதா?

கிரகோரியன் நாள்காட்டியில் சராசரியாக 365.2425 என ஒரு வருடத்தின் அளவு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது துல்லியமானது. ஆனால், மிகத்துல்லியமானது இல்லை. ஏனெனில், ஒவ்வொரு வருடத்திற்கும் 27 வினாடிகள் அதிகமாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு 3236 வருடத்திற்கு 1 நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும்.

தற்போது, நாம் பயன்படுத்தி வரும் (கிரகோரியன்) நாட்காட்டிப்படி, 4909-ம் வருடம் ஒருநாள் அதிகமாகும்.

எனவே, இந்த நாட்காட்டியும் மாறுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், 4909-ம் ஆண்டிற்கு பிறகு நாட்கள் மாறிச்செல்லும்.

கிரகோரியன் நாள்காட்டியே பிற்காலத்தில் உலக நாட்காட்டியாக மாறியது! – English Calendar History

13-ம் போப், இந்நாட்காட்டியை நடைமுறைப்படுத்தினாலும் அனைவரும் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை.

நாளடைவில் இதுவே துல்லியமாகவும், எளிமையாகவும் இருந்ததால் அனைவரும் இந்த நாட்காட்டியைப் பின்பற்றத் துவங்கினர்.

ரோமானிய நாட்காட்டியே பிற்காலத்தில் ஆங்கில நாட்காட்டி எனப்பெயர் பெற்றது. ஆங்கில நாட்காட்டி இன்று உலக நாட்காட்டியாக மாறியுள்ளது.

நாட்காட்டியை பின்பற்றிய நாடுகளும், வருடங்களும் – English Calendar History

1582: ஸ்பெயின், போர்சுகல், பிரான்சு, போலந்து, இத்தாலி
1610: புருசியா
1700: ஜெர்மனி, சுவிஸ்லாந்து, நார்வே, டென்மார்க்
1873: ஜப்பான்
1912: சீனா, அல்பேனியா
1752: பிரிட்டிஷ்
1875: எகிப்து
1753: சுவீடன் மற்றும் பின்லாந்து
1896: கொரியா
1918: சோவியத் ஒன்றியம், எஸ்தானியா
1919: ரொமேனியா, யூகோசுலோவியா
1923: கிரீஸ்
1926: துருக்கி

வெள்ளையர்கள் ஆட்சிக்குப்பின், இந்தியாவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. கணினி மற்றும் இண்டர்நேசனல் நாட்காட்டியாக ரோமானிய நாட்காட்டி மாறிவிட்டது.

3

தை பிறந்தால் வழி பிறக்கும்: இதுவே உண்மை காரணம்

3
தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும், இது வெறும் பழமொழி அல்ல. பல தமிழரின் கண்ணீரைப் போக்கும் அறுவடைக் காலம். தை மாதம் முதல் நாள் உத்தராயணம்.

தமிழர்களின் வாழ்வியலில் விழாக்களுக்கென்று தனியான சிறப்பிடம் உள்ளது. பண்டிகைகள் என்றாலே மகிழ்ச்சி, வேடிக்கைகள், கொண்டாட்டங்கள் என்று கூறிக்கொண்டே போகலாம்.

பழந்தமிழரின் காலம் தொட்டே திருவிழாவானது நிறைய மாதங்களில் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் சிறப்பானதொரு திருவிழா மாதமாக இருப்பது தை மாதம் ஆகும்.

தொன்றுதொட்டு தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்ற பழமொழி மற்றும் முதுமொழியானது நமது வாழ்வில் கலந்தே உள்ளது. அப்படி என்ன தான் சிறப்பு உள்ளது? என்பதை அறியாமலே கூறுவோர் பலருண்டு.

உத்தராயண புண்ணிய காலம்

உத்தராயணம் புண்ணிய காலம்உத்தராயணம் என்பது வடமொழிச் சொல்லாகும். வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு என்றும், அயனம் என்றால் வழி என்றும் பொருள்.

கண்ணிற்கு புலப்படும் ஒரே இறை சக்தியாக விளங்குபவர் சூரியன் மட்டுமே. அப்படிப்பட்ட சூரியன் தனது பயணத்தை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமே உத்தராயணம் ஆகும்.

தை மாதத்தில் சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசியில் நுழைந்து 29 நாட்கள், 27 நிமிடங்கள், 16 வினாடிகள் வரை பயணிப்பார்.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாதத்திற்கு உத்தராயணம் நீடிக்கும். இக்காலமானது ஞானத்தை வழங்கும் காலமாக கருதப்படுகிறது. இதுவே தேவர்களின் காலைப் பொழுது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

புராணங்களில் தை மாதம் 

வேத, இதிகாச, புராணங்களில் இந்த தை மாதமானது சிறப்பானதொரு மாதமாக சொல்லப்பட்டுள்ளது.

தை மாதம் பீஷ்மர் அர்ஜுனன்மகாபாரதப் போரில் பீஷ்மர் அர்சுனனின் அம்புகளால் வீழ்ந்தும் உயிர் துறக்கவில்லை. அம்பு படுக்கையில் கிடந்தார்.

தான் விரும்பிய தருவாயில் மரணம் வேண்டும் என்ற வரத்தைப் பெற்ற அவர் “தை முதல் நாள்” அதாவது உத்தராயணம் துவங்கும் வரை காத்திருந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

உத்தராயணத்தில் தான் ஞானத்தின் வழி பிறக்கும். எனவே அப்பொழுது இறப்பவர்களுக்கு மறுப்பிறப்பு இருக்காது.

இந்த யுகத்திலும் இராமலிங்க வள்ளலார் போன்ற எண்ணற்ற சித்த புருஷர்கள் உத்தராயண காலத்தில் முக்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே புராண காலத்தில் இருந்தே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்படுகிறது என்று அறிகிறோம்.

அறுவடைக் காலம்

தை முதல் நாள் நெல் அறுவடைக் காலம்ஆடி மாதம் துவங்கி ஆறு மாதத்திற்கு நெற்பயிர் வளர ஆரம்பித்து தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும்.

இதில் ஆறு மாதம் விவசாயிகள் தான்பட்ட கடன், துன்பம், கவலைகள் எல்லாம் தீர்ந்து அறுவடை செய்து பணம் ஈட்டி துன்பங்கள் எல்லாம் தீர வழி பிறக்கும்.

இதனால், தை மாதத்தை தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள். இதனைத்தான் பொங்கல் விழாவாக கொண்டாடுகிறோம்.

பொதுவாக கார்த்திகை பௌர்ணமி முடிந்து மார்கழி் முடியும் வரை குடமுழுக்கு, திருமணம், புதுமனைப் புகுதல் போன்ற நிகழ்ச்சிகள் நிலுவையில் இருக்கும்.

தை மாதம் துவங்கும் போது இவை அனைத்தும் இனிதே துவங்கும். சுபகாரியங்கள் துவங்க வழி பிறக்கும் என்பதால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

முன்னோர்கள் விடைபெறும் காலம்

தட்சிணாயன காலத்தில் பூமிக்கு வரும் முன்னோர்கள், நான்கு மாதங்கள் இங்கு இருந்து தங்களின் சந்ததியினரை ஆசிர்வதிப்பார்கள்.

மீண்டும் சூரியனின் துணைக் கொண்டு பித்ரு லோகம் செல்ல பாதை பெற்று விடைப்பெறுகின்றனர் என்று நம்பப்படுகிறது. எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

பஞ்சம் தீர்க்கும் தை மாதம்

விளைச்சல் முடிந்து அறுவடை நடந்து பயிர்கள் அனைத்தும் வீடு சேரும் மாதமே தை ஆகும். தை முதல் நாள் சூரியனுக்கு படைப்பார்கள்.

இக்காலகட்டத்தில் தான் தானியப் பயிர்களில் முக்கியமாக நம் தமிழர்களின் அன்றாட உணவான நெல்லானது அதிக அளவிலும், சற்று விலை குறைவாகவும் கிடைக்கிறது.

பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு தேவையான நெல்லை மக்கள் வாங்கி பத்திரப்படுத்தி கொள்வர். வீட்டில் உணவிற்குப் பஞ்சமின்றி மகிழ்வுடன் இருக்க வழி பிறக்கும் காலம்.

இவ்வாறு ஒரு பழமொழிக்கு எண்ணற்ற விளக்கங்கள் தந்துள்ள நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. உழைப்பினால் உலகையே ஆண்டவர்கள்.

இன்று நாகரிகம் என்ற பெயரில் பல்வேறு விழாக்களையும், கொண்டாட்டங்களையும் இழந்து வருகிறோம்.

இந்த ஆண்டு தை பிறப்பிலிருந்து அனைவரும் தங்களின் பாரம்பரியத்தை மறக்காமல் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தமிழர் திருநாளான தைத்திருநாளை வரவேற்று கொண்டாடுவோம்.

Thai Piranthal Vazhi Pirakkum இது பழமொழி மட்டும் அல்ல. “தை பிறந்து அனைவருக்கும் நல்வழி பிறக்கட்டும்” 

3