Home சினிமா கோலிவுட் உண்மையான கொசக்சிக் பசப்புகழ்,யாரென்று தெரியுமா?

உண்மையான கொசக்சிக் பசப்புகழ்,யாரென்று தெரியுமா?

647
0

கொசக்சிக் பசப்புகழ்,தமிழ் பெயரா,இந்த பெயரின் அர்த்தம் என்ன என்பது எனக்கு தெரியாது.ஆனால் இந்த கதாபாத்திரம் யாரால் ஈர்க்கப்பட்டது என்பதை அறிவேன்.சற்று பொறுமையாக படிக்கவும்,ஸ்வாரஸ்யம் மிகுந்த கதை தான்:

நண்பன் திரைப்படம்,ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

இங்க நம்ப விஜய்க்கு,பஞ்சவன் பாரிவேந்தன் என்கிற கொசக்சிக் பசப்புகழ் கதாபாத்திர பெயர்,அங்க அமீர் கானுக்கு ரன்சோட்தாஸ் சஞ்சட் என்கிற புண்சுக் வாங்குடு கதாபாத்திர பெயர்.

நண்பன் படத்துல இறுதி காட்சில பஞ்சவன் பாரிவேந்தன் நடத்துற பள்ளிக்கூடம் பார்த்திருப்போம் அல்லவா,அது போன்ற ஒரு பள்ளிக்கூடம் உண்மையாகவே இருக்கிறது.

அட ஆமாங்க,லடாக்ல தான் அந்த பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்துல சேர முக்கியத்தகுதி,Fail ஆகிருக்கணும். நீங்க பாஸ் ஆகிருந்தா Waiting லிஸ்ட் ல தான் உங்க பெயர் இருக்கும்.

இந்த பள்ளிக்கூடத்துல சேர,முழுக்க முழுக்க பரிட்சையில் தோற்றவருக்கே முன்னுரிமை.ஆச்சர்யமாக உள்ளதல்லவா!

சரி பதிலுக்கு வருவோம், லடாக் என்ற பெயரை கேட்டவுடன்,நம் மனதிற்கு தோன்றுவது ஹிமாலய மலை தொடர்,பனிப்பொழிவு,ரம்மியமான இயற்கை காட்சிகள்…

இது ஒரு புறம் தான்,மறுபுறத்தில் இங்கு வாழும் மக்களின் அவலநிலை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குளிர் காலத்தில் வெட்பநிலை -35 டிகிரி,காணும் அனைத்தும் உறைந்து போயிருக்கும்,விவசாயம் செய்ய இயலாது,அதே வெயில் காலத்தில், தண்ணீர் தட்டுப்பாடு… நம் ஹீரோ பிறந்ததும் இங்கு தான். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், லேஹ்(Leh ) மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம்.

அங்கு பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தினால்,அவருடைய ஒன்பது வயது வரை, அவரது அம்மா தான் அவருக்கு ஆசிரியர்.அவரது வீடு தான் பள்ளிக்கூடம்.அவரது அம்மா,அடிப்படை கல்வி அனைத்தையும் தனது தாய்மொழியில் அனுபவ பாடமாக கற்றுக்கொடுத்துள்ளார்.

தன்னுடைய பத்தாவது வயதில் முதல் முதலில் பள்ளியில் சேர்ந்ததும்,இவரை அனைவரும் ஒரு வேற்றுகிரகவாசிபோல் பார்த்தனர்.காரணம்,இவர் படிப்பை அணுகும் முறை மற்ற மாணவர்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமாகவும்,புதுமையாகவும் இருந்தது.

ஒரே ஆண்டில்,இரண்டு முறை வகுப்பு தேர்ச்சி பெற்றார்.காலங்கள் உருண்டோடியது… தன்னுடைய மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை ஸ்ரீநகர், NIT கல்லூரியில் படித்து கொண்டிருந்த சமயம்,குடும்ப சூழல் காரணமாக,தன்னுடைய கல்லூரி செலவுகளை தானே சம்பாதித்து கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.கல்லூரி படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் குழந்தைகளுக்கு Tuition எடுத்து அதன் மூலம் வருவாயை ஈட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது தான்,அந்த திருப்புமுனை நடந்தது.இவர் tuition நடத்தும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சியின் சதவிகிதம் 5% கும் குறைவாக இருந்துள்ளது.குறிப்பாக சில பள்ளியில் தேர்ச்சி சதவிகிதம் 0%.இது அவருக்கு பெரும் அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் உண்டாக்கியது. இதன் காரணத்தை உற்று நோக்கியபோது,இவருக்கு ஒன்று புரிந்தது.

இந்த தோல்விக்கான காரணம் மாணவர்கள் அல்ல,நமது கல்வி முறையே என்று.தன் கல்லூரி படிப்பை முடித்து,தன் நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு The Students’ Educational and Cultural Movement of Ladakh (SECMOL) என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.

பிறகு கிராம மக்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியோடு அரசாங்க பள்ளிக்கூடங்களில் Operation New Hope என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த முயற்சி கொஞ்சம் கொஞ்சமாக படி படியாக வளர்ந்து,2015இல் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 75% ஆக உயர்ந்தது.

மீதம் 25% தோல்வியுற்ற மாணவர்களை அப்படியே விட முடியுமா என்ன ? அவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பள்ளி தான்,நான் மேலே குறிப்பிட்ட பள்ளி. இந்த பள்ளி சற்று அல்ல மிகவும் வித்தியாசமான பள்ளி,இங்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை முற்றிலும் சோலார் எனர்ஜியால் இயக்க படும் பள்ளி.செங்கல்,சிமெண்டால் ஆன கட்டிடங்கள் இல்லை,முற்றிலும் களிமண்ணால் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.

இங்கு பாடம் நடத்தப்படும் விதமும் வித்தியாசமானது.நாம் பள்ளியில் படித்த அனைத்து விடயங்களும் இங்கு செயல் முறையில் நடத்தப்படுகிறது.நாம் நண்பன் படத்தில் பார்த்தது போலவே தான். பனி ஸ்தூபங்கள் (Ice Stupa) :

புவி வெப்பமயமாதல் காரணத்தினால்,ஆர்டிக்,அண்டார்டிக் பனி பாறைகள் உருகி,பூமியின் தட்பவெட்ப நிலை அதிகரித்து,பூமியின் சில நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் வந்த ஆய்வின் படி ஹிமாலய பனி பாறைகள்,1975-2000 வரை ஒப்பிடுகையில்,கடந்த 20 ஆண்டுகளில்,இரண்டு மடங்கு அதிகமாக உருகுகிறதாம். இதன் காரணமாக,நமது ஹீரோவும்,அவரது பள்ளி மாணவர்களும் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஒரு புதுமுறையை கண்டுபிடித்தனர்.

அதாவது,குளிர்காலங்களில்,மலை சரிவில்,4அடி ஆழத்தில் பைப்களை பொருத்தி,சரி எதற்கு 4 அடி ஆழம் என நீங்கள் நினைப்பது புரிகிறது,பொறுமையாக படியுங்கள்,அனைத்திற்கும் விடை உண்டு.

சரி கமிங் பேக் டூ தி பாயிண்ட்,4அடி ஆழத்தில் பைப்களை பொருத்தி,மலை மேலிருந்து குளிர் நீரை தரை மட்டத்திற்கு கொண்டு வரும் பொழுது,அழுத்தம் காரணமாக,மேலிருந்து கீழ் வந்த நீர் அனைத்தும்,நீரூற்று போல் மேல் எழும்பும்,மேலே கூறியது போல்,குளிர் காலங்களில் வெட்பநிலை -35 டிகிரி என்பதால்,மேல் எழும்பிய நீர் அனைத்தும் உறைந்து முக்கோண வடிவை பெரும்.

முக்கோண வடிவின் சிறப்பம்சம் பற்றி நாம் பள்ளிகளில் படித்ததே,அதாவது, குறைந்தபட்ச பரப்பளவு(Minimum Surface Area),அதிகபட்ச கொள்ளளவு(Maximum Volume).இதன் காரணமாக,இது அவ்வளவு எளிதாக உருகாது.

இதை தான் பனி ஸ்தூபங்கள் (Ice Stupa ) என்று அழைக்கின்றனர். குளிர் காலம் முடிந்து,வசந்த/வெயில் காலம் வந்ததும்,மற்ற ஐஸ் பாறைகள் முழுவதுமாக உருகினாலும்,இந்த பனி ஸ்தூபங்கள் படிப்படியாக உருக ஆரம்பித்து,இதன்வாயிலாக வரும் நீர் அனைத்தும் சேகரிக்கப்பட்டு,விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

மலை சரிவில் இருந்து,கீழே நீரை கொண்டு வர இவர் எந்த மோட்டாரையும் பயன் படுத்தவில்லை.காரணம் நாம் படித்த புவிஈர்ப்பு (gravity ). அதே மாதிரி,நான்கு அடியில் பைப்பை பொறுத்த காரணம்,நீர் மேலிருந்து கீழே வரும் வரை உறையாமல் இருக்க.

நாம் அனைவரும் பள்ளியில் படித்த இயற்பியலை தான் இவர் உபயோகப்படுத்திக்கிறார்,ஆனால் பலனை பாருங்கள்!! இந்த கண்டுபிடிப்பிற்கு இவருக்கு ரோலெக்ஸ் விருது,மற்றும் இந்த செயற்கையாக இவர் உருவாக்கின Ice Stupa உயரத்திற்காக காக கின்னஸ் புத்தகத்திலும் இவர் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

நம் ஹீரோவின் பெயர்,சோனம் வாங்சுக் (Sonam Wangchuk): இவர் தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்.

Previous articleதாமதமான நீதியும் அநீதியே – பொன்மகள் வந்தாள் 3ஆவது லுக் போஸ்டர் வெளியீடு!
Next articleதமிழ் புத்தாண்டை சிறப்பித்த சன் டிவி: சும்மா கிழி தர்பார் கொண்டாட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here