Home சினிமா கோலிவுட் தாமதமான நீதியும் அநீதியே – பொன்மகள் வந்தாள் 3ஆவது லுக் போஸ்டர் வெளியீடு!

தாமதமான நீதியும் அநீதியே – பொன்மகள் வந்தாள் 3ஆவது லுக் போஸ்டர் வெளியீடு!

256
0
Ponmagal Vandhal Third Look Poster

Ponmagal Vandhal Third Look Poster; தாமதமான நீதியும் அநீதியே – பொன்மகள் வந்தாள் 3ஆவது லுக் போஸ்டர் வெளியீடு! ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் 3 ஆவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது.

தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில், இவருடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொன்மகள் வந்தாள் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் கோர்ட் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதோடு, தரமான நீதியும் அநீதியே என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொன்மகள் வந்தாள் போஸ்டரில் பார்த்திபன், ஜோதிகா, பிரதாப் போத்தன் ஆகியோர் வழக்கறிஞராக வலம் வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து தியாகராஜன், பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொன்மகள் வந்தாள் படம் பெண்களை மையப்படுத்திய படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சமூகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்மகள் வந்தாள் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாவதைத் தொடர்ந்து டுவிட்டரில் #Jyotika என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பொன்மகள் வந்தாள் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஅந்த கண்ண பாத்தா லவ்வு தானா வரும்: விஜய்யின் க்யூட் எக்ஸ்பிரசன்ஸ்!
Next articleஉண்மையான கொசக்சிக் பசப்புகழ்,யாரென்று தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here