Home சினிமா இந்திய சினிமா சங்கர் மஹாதேவன் பிறந்தநாள்

சங்கர் மஹாதேவன் பிறந்தநாள்

406
0

மார்ச் 3: பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் 52 வது பிறந்தநாள் இன்று. 1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் தான் சங்கர் மகாதேவன்.

இதுவரை இசையமைப்பாளராக 65 படம் மற்றும் ஆல்பத்திற்கு இசை அமைத்துள்ளார். இதில் ஆளவந்தான் மற்றும் விஸ்வரூபம் போன்ற கமல் படங்களுக்கும் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர மகாதேவன் தனது குரலால் ரசிகர்களை ஈர்க்க கூடிய வல்லமை மிக்கவர். சங்கர்மகாதேவன், அர்ஜுன் நடித்த ரிதம் படத்தில் ‘தனியே தன்னந்தனியே’ என்ற பாடலில் அருமையாக நடனம் ஆடிக்கொண்டே பாடியவர் தான் சங்கர் மகாதேவன்.

தேசிய விருது வென்றவர்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற அஜித் மற்றும் தபு பங்குபெறும் ‘என்ன சொல்லப் போகிறாய்‘ பாடலைப் பாடிய சங்கர் மகாதேவன், இந்த பாட்டிற்காக தேசிய விருதையும் வென்றார்.

2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை இசையமைத்து பாடியவர் தான் சங்கர் மகாதேவன்.

இவரின் சில தமிழ் பாடல்கள்

இவரது காந்தக் குரலில் சங்கமம் படத்தில் ‘வராத நதிக்கரை ஓரம்’, முதல்வன் படத்தில் ‘உப்புக்கருவாடு, ஊற வச்ச சோறு’, பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ‘தாலாட்டும் காற்றே வா’, சமுத்திரம் படத்தில் ‘அழகான சின்ன தேவதை’, அள்ளித்தந்த வானம் படத்தில் ‘வாடி வாடி நாட்டுக்கட்ட’, ஜெமினி படத்தில் ‘கட்ட கட்ட நாட்டு கட்ட’ போன்ற பல ஹிட்ஸ் பாடல்களை பாடியுள்ளார்.

6 மொழியில் பாடியவர்

இவர் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மஶ்ரீ விருது

2019 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது சங்கர் மகாதேவனுக்கு வழங்கப்பட்டது. நம் நாட்டின் குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் பத்மஸ்ரீ விருதை சங்கர் மகாதேவனுக்கு வழங்கினார்.

தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் பாட்டுப் போட்டியில் ஜட்ஜாக இருந்து வருகிறார்.

Previous articleடெல்லியின் இளம் படை முதல் முறையாக கோப்பையை வெல்லுமா?
Next articleஇன்றைய ராசி பலன்கள் – 03/03/2020 – horoscope tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here