Home சினிமா கோலிவுட் இன்னும் 100 நாட்கள்: விஜய் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!

இன்னும் 100 நாட்கள்: விஜய் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!

392
0
Master Vijay Birthday

Master Vijay Birthday 100 Days to Go; விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில், டுவிட்டரில் #100DForMasterVIJAYBday என்ற ஹேஷ்டேக் மூலம் இப்போவே அவரது பிறந்தநாளை டிரெண்டாக்கி வருகின்றனர்.

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay). கடந்த மாதம் முழுவதும் கோலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் அதிகளவில் பேசப்பட்டவர் நடிகர் விஜய்.

மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டு குறுகிய கால சுற்றுலாவாக வெளிநாடு சென்றுவிட்டார்.

மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் (Vijay IT Raid) சோதனை மேற்கொண்டனர்.

எனினும், அவரது வீட்டில் இருந்து ரொக்கமாகவும், ஆவணங்கள் மூலமாகவும் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து, விஜய் மீண்டும் தனது மாஸ்டர் (Master Shooting) படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விஜய் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தினோம் என்று அப்போது தெரிந்திருக்கும். சும்மா இருந்தவனை சீண்டிப்பார்த்த கதையாகிவிட்டது.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது விஜய்யைப் பார்ப்பதற்கு குடும்பத்தோடு லட்சக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்தனர்.

ஒரு நடிகரை படப்பிடிப்பு தளத்தில் பார்ப்பதற்கு ரசிகர்கள் குடும்பத்தோடு வருவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

அவர்களைப் பார்த்து விஜய் கையசைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. கடந்த வாரம் விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார்.

இதற்கிடையில் மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி கம்மிங் (Vaathi Coming) பாடல் வெளியாகி வைரலானது.

மாஸ்டர் இசை வெளியீட்டிற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாஸ்டர் இசை வெளியீடு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

டுவிட்டரில் #2DaystogoForMasterAudioLaunch என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, ஹலோ ஆப்பில் மாஸ்டர் ஆடியோ 2நாட்களில் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அப்போது நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம் செய்தல், மாண மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் வழங்குதல் என்று பல்வேறு உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்வார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளுக்கு இதனை செய்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில், இப்போதே அவரது ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை கொண்டாட துவங்கிவிட்டனர்.

அதற்காக #100DForMasterVIJAYBday என்ற ஹேஷ்டேக்கை தற்போதே உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இனி ஒவ்வொரு நாளும் விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.

இன்னும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வேற இருக்கு. அவர் எப்போது பேசுவார் என்றுதான் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் பேச ஆரம்பித்துவிட்டால் போதும் ரசிகர்களுக்கு எங்கும் இல்லாத சந்தோஷம்தான்.

விஜய் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், வி ஆர் வெயிட்டிங்….. We Are Waiting…

SOURCER SIVAKUMAR
Previous articleடுவிட்டரில் டிரெண்டாகும் #2DaystogoForMasterAudioLaunch
Next article14/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here