Master 3rd Look Poster: உண்மையில் நான் மிரண்டு விட்டேன். விஜய் vs விஜய் சேதுபதி அப்படி ஒரு ஆக்ரோஷ மோதல்.
நேற்று வரை Master 3rd Look Poster வரப்போகிறது என வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தனர். ஒரு படத்திற்கு எத்தனை லூக் போஸ்டர் வெளியிடுவார்கள் என்று எரிச்சல் அடைந்தேன்.
என்ன செய்வது? விஜய் படம் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். செய்தி வெளியிட்டால் விஜய் ரசிகர்களை வாசகர்களாகப் பெறலாம் இதற்காகவே செய்தி வெளியிட்டோம்.
சரி இன்று 5 மணி ஆகிவிட்டதே கிரிக்கெட் மேட்ச் வேறு மொக்கையாய் முடிந்து விட்டது. Master 3rd Look Poster எப்படி உள்ளது எனப் பார்க்கலாம் என்று ட்விட்டர் பக்கம் சென்றேன்.
உண்மையில் போஸ்டரைப் பார்த்து மிரட்டு விட்டேன். பாகுபலியை மிஞ்சிய பலம் கொண்ட மனிதர்கள் மோதிக்கொள்வது போன்று மெய்சிலிர்த்து விட்டேன்.
போஸ்டர் என்றால் இப்படி ஒரு தரம் இருக்கக் வேண்டும். இப்படி ஒரு கம்பீரம் இருக்க வேண்டும். பார்த்த உடன் ஃபயர் தெறிக்க வேண்டும்.
ஏன் என்றால் இரண்டு மாபெரும் மலைகள் மோதுகின்றது. எதிர்பார்ப்பு ஏக்கசக்கம் இருக்கும். தியேட்டரில் பூகம்பம் வரும் அளவிற்கு இந்த சண்டைக்காட்சி இருக்க வேண்டும்.
வெறுமனே செய்தி எழுத நினைத்த என் கைகள் Master third Look Poster-யை பார்த்தவுடன் அதுவே என் மூளையை கண்ட்ரோல் செய்து டைப் செய்துகொண்டு இருக்கிறது.
படத்தை இயக்குவது யாரு கைதி இயக்குனரு. சற்று கைதி படத்தில் கார்த்தி, லாரியில் இருந்து இறங்கும் காட்சியை நினைத்துப்பார்த்தேன்.
இதென்ன கே.ஜி.எப். படமா? மாஸ்டர் படமா? என ஒரு நிமிடம் யோசித்து விட்டேன். ஏன் என்றால்? மோதிக்கொள்வது இரண்டு பெரிய தலைக்கட்டு.
ஒன்று நடிப்பிலேயே மிரள வைக்கும். மற்றொன்று நடிக்காமல் ஆக்ஷன் காட்டியே மிரள வைக்கும். இரண்டும் சேர்ந்து என்ன சேட்டைகள் செய்யப்போகிறதோ?
கட்டுக்கடங்காத காளைகள் திமிலை உயர்த்திக் கொண்டு மோதிக்கொள்வது போன்று உள்ளது. ஒரு போஸ்டரை பார்த்தே என் கைகள் இப்படி டைப் அடிக்கிறது என்றால்?
படம் வெளியானால்? யாருயா நீ? படம் எடுக்குறியா இல்ல பாம் வக்கிறாயா? பார்த்தவுடன் இப்படி வெடிக்கிறது.
லோகேஷ் கனகராஜ் நீ வேற லெவல். போஸ்டர் டிசைன் பண்ண தம்பி, கேமராக்காரத் தம்பி நீங்களும் தான்.
விஜய் vs விஜய் சேதுபதி Master third Look Poster பக்கா மாஸ் காட்டும் மாஸ்டர் பீசுமா!