இந்தியா-நியூசிலாந்து: சப்பையாக முடிந்த மேட்ச். 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
India vs New Zealand T20 Series 2020
முதல் டி20 போட்டி
இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது.
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவரிலேயே 4 விக்கெட் இழந்து 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி
முதல் டி20 போட்டியில் 200 ரன்கள் வரை சென்றதால் இரண்டாவது போட்டி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.
ஆனால் நடந்ததுவோ வேறு, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 17.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 135 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி சப்பையாக முடிந்துவிட்டது. ஜடேஜா இரண்டு விக்கெட்களை கைபற்றினார். தாக்கூர், பும்ரா, துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.